கண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை
மெல்லச் சிரிப்பாள் ..
சட்டென்று கோவிப்பாள் ..
உரிமையோடு மிரட்டுவாள் ..
நயமாகப் பணிவாள் ..
பாசத்தோடு அணைப்பாள் ..
மிரளவைக்க நாணுவாள் – ஜாடையில்
இத்தனையும் என் ராதையின்
அந்த நளினம் பேசும் கண்களில்
நான் தினம் தினம்
படிக்கும் புதுக்கவிதைகள்.
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
கண்கள் எழுதும் போர்க் கடிதங்கள்
மெல்ல மொத்துவாள் ..
சட்டென்று கடித்தும் வைப்பாள் ..
உரிமையோடு (சட்டைப்) பாக்கெட்டில் கைவிடுவாள் ..
நயமாக செலவும் செய்வாள் ..
பாசத்தோடு செல்போனை பிடுங்குவாள் ..
மிரளவைக்க குத்துவிடுவாள் – தாடையில்
இத்தனையும் என் வாதையின்
அந்த நையாண்டி பேசும் கண்களில்
நான் தினம் தினம்
படிக்கும் செலவுக்கணக்குகள்
-உங்க கவிதையை என்னோட லைப்ல பொருத்திப் பாத்தேன். அவ்ளோதான்! ஹிஹி!!
உங்கள் கவிதை சுவைக்கிறது. அவ்வாறே ஜெகநாதனின் நையாண்டியும்.
அருமையாக இருக்கின்றது ஜெகநாதன்.. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
நன்றி சுபானு! தப்பா நெனச்சுப்பீங்களோன்னு பயந்துட்டு இருந்தேன்!
இல்லை இல்லை.. கற்பனைகளுக்குத் தடைபோட முடியுமா.. உண்மையில் உங்களின் கற்பனை வித்தியாசமாக இருந்தது.
உண்மையில் அருமை! 🙂
அருமை.அருமை.
ஜெகநாதனின் எதிர்கவிதையும் நன்று.
வாழ்த்துக்கள்.
அருமை
வழமை போல் இது உங்கள் கிறுக்கள். மாறாக அனுபவம் இல்லை…
சரி தானே
🙂
@Nangai
//
அருமை
வழமை போல் இது உங்கள் கிறுக்கள். மாறாக அனுபவம் இல்லை…
சரி தானே
🙂
//
ஆகா.. எத்தனை முறை சொல்லது நங்கை.. என் கவிதைகளுக்கு கவிதைப்பெண் என்று யாரும் கிடையாது..