Month: July 2009
நீ வரும் வேளைகளில் எல்லாம் என் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை நீ இல்லாத வேளைகளில் எங்கே சென்றதுவோ! இப்போது தான் புரிந்தது நீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று தொட்டுக் கொள்ளும் போதெல்லாம் சிலிர்த்து உருகி என் கையிரண்டில் தவழ்ந்து போகையில்! மரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால் என்ன என்பதை அனுபவிக்கின்றன என்கின்றேன் நான் உன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும் மழைத்துளிகளினைப் பார்த்து ஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின் அணைப்பு என்கின்றாயே நீ நீ
Read Moreநாம் கை கோர்த்து நடக்கும் போதெல்லாம் மழை மேகங்களுக்குச் சந்தோசமோ இப்படி ஆர்ப்பரிக்கின்றனவே முழக்கங்களாய் வெட்டி வெட்டிக் கண்சிமிட்டுகின்றனவே மின்னலாய் சில்லென ஒடுங்குகின்றனவே மழைத்துளிகளாய் உன்னைத் தானே தொட்டுக் கொண்டேன் மழைத்துளிகளுக்கு ஏன் இந்த நாணம் உன்னிடமே கடன் வாங்கி இப்படிச் சிலிர்க்கின்றனவே போதுமடி இனியும் கடன் கொடுத்து நிரந்தரக் கடனாளியாக்காதே மழைத் துளிகளை! நல்லாயிருந்தா தமிழிஸ் இல் வாக்களிக்க இங்கே சொருகுங்கள்.
Read Moreகண்கள் எழுதும் காதற் கடிதங்கள் கண்ஜாடை மெல்லச் சிரிப்பாள் .. சட்டென்று கோவிப்பாள் .. உரிமையோடு மிரட்டுவாள் .. நயமாகப் பணிவாள் .. பாசத்தோடு அணைப்பாள் .. மிரளவைக்க நாணுவாள் – ஜாடையில் இத்தனையும் என் ராதையின் அந்த நளினம் பேசும் கண்களில் நான் தினம் தினம் படிக்கும் புதுக்கவிதைகள்.
Read Moreகண்கள் – அவை காதலின் தொடக்கப் புள்ளி காதலென்னும் காவியத்தின் பல்லவி வரிகள் கனவுகள் சஞ்சரிக்கும் நித்திய வானம்…. இவற்றை எல்லாம் விட – அவை உனை ரசிக்க இறைவன் எனக்கருளிய வரப்பிரசாதம் அன்றோ!
Read Moreநாளை சூரிய கிரகணமாம். அத்தோடு சுனாமி வேறு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றனவாம். இவைதான் இன்றைய கூடான செய்திகள். 2004ம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் இருந்தே நாம் இன்னமும் முழுமையாக மீளாத இந்த சந்தர்பத்தில் இன்னும் ஒரு சுனாமியா!. அன்றைய சுனாமியின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதாரத்தை பார்த்வர்களில் நானும் ஒருவன். 2004ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பல காயம்பட்டவர்களின் அவலக்குரலினைக் கேட்டவன். 2004ம் ஆண்டு சுனாமியின் ஞாபகச்சின்னங்கள் இன்னமும் நம்மத்தியில்
Read Moreஎன்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. நமக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அளித்திருக்காங்க.. “சும்மா” என்று வலையில் பூத்து தினமும் தமிழ்மணம் பரப்பும் பூவினை மெருகூட்டும் வலசு – வேலணை என்ற பெயரில் உலாவரும் ….(பெயர் தெரியவில்லை) என்பவரின் கைகளால் நான் இந்த விருதைப் பெற்றிருப்பது என்னை சந்தோசக் கடலில் மிதக்க வைக்கின்றது. இவரின் வேரென நீயிருந்தாய்.. என்ற தொடரில் பூத்துக் குலுங்கும் பூக்களை நான் மிகவும் இரசித்ததுண்டு. அவற்றை விட புத்தனின் புதிய ஞானம் மற்றும் மூன்றாவது
Read Moreஉங்கள் வலைப்பூக்களில் இதுவரை எத்தனை பூக்கள் மலர்ந்துள்ளன, எவ்வளவு பின்னுட்டங்களை அவை பெற்று வளம் பெற்றுள்ளன என்ற தகவலை நீங்கள் உங்கள் வலைப்பூக்களில் சேர்த்துக் காட்டினால் எப்படியிருக்கும்..! இணையத்தில் தேடிய போது கிடைத்தது இந்த widget. நீங்கள் உங்கள் வலைப்பூவினில் இந்த widget இனை இணைப்பதன் மூலம் அந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். முதலில் நீங்கள் உங்களின் வலைப்பூவின் கட்டமைப்புப் ககுதிக்குச் சென்று அங்கு நீங்கள் எங்கு விரும்புகின்றீர்களோ அங்கே HTML/JavaScript widget ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
Read More