காலைநேர பனிக் காற்றில் உன் வரவிற்காய்
பல மணிநேரம் காத்திருந்த போது கிடைத்த இன்பம்…
வெறும் கண் பாசைதான் பேசினோமேயாயினும்
அது இருவருக்கும் புரிந்ததில் கிடைத்த இன்பம்…
வெள்ளிக் கொலுசு கட்டிய – உன் கால்கள் தினம் போட்ட கோலங்களை
பார்த்து இரதித்ததில் கிடைத்த இன்பம்…
கண்ணுக்குள் ஊடுருவும் என் பார்வையை ஏதேதோ ஜாலங்கள்
செய்து தடுப்பாயே அப்போது கிடைத்த இன்பம்…
பள்ளிசெல்ல முன் உந்தன் தரிசனத்தை நான் பெறுவதற்தாய்
நான் வரும்வரை வரும் பேருந்துகளை எல்லாம் தவிர்த்து தரிசனம் தருவாயே அப்போது கிடைத்த இன்பம்…
காரணம் ஏதன்று தெரியாமல் நீ சிரிக்கயில்
அதைப் பார்த்து நான் சிரிக்கும் போது கிடைத்த இன்பம்…
உயர்தரப் பரீட்சையில் நான் பெற்ற பெறுபேற்றைப் பார்த்து
என்னைப் பெருமையோடு பார்த்தாயே அப்போது கிடைத்த இன்பம்…
வெறும் வார்த்தைகளால் சொல்லமுடியாது நாம் அன்று பெற்ற அந்த இன்பங்களை..
எழுத்துக்களால் உணர்த்த முடியாது அவற்றை..
நினைவுகள் என்னும் நீண்ட பெருவெளியில்
அந்த இன்பங்கள் நமக்கு மட்டுமே சொந்தமடி!
[ காரணங்கள் ஏதுமின்றி எழுதப்பட்ட பதிவு ]
Categories: பாடசாலை நாட்கள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
[ காரணங்கள் ஏதுமின்றி எழுதப்பட்ட பதிவு ]
பொய்தானே !
🙂
//காரணங்கள் ஏதுமின்றி எழுதப்பட்ட பதிவு//
அன்புக்கு காரணம் தேவையில்லை; காரணமிருந்தால் அங்கு அன்பில்லை!
//
[ காரணங்கள் ஏதுமின்றி எழுதப்பட்ட பதிவு ]
//
காரணமில்லாமல் தோரணம் கட்டுறியள். அப்பிடித்தானே?
இப்ப ஆரு என்ன சொன்னாலும் கேள்விகள் கேட்காமல் நம்பிறம்.
@ மயாதி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
இல்லை இல்லை… உண்மையில் ஈழத் தமிழ் மக்களாகிய எமது நிலையையெண்ணி நீண்ட நாட்களாக வலைப் பூக்களில் எதுவும் எழுத மனமும் ஊக்கமும் இருக்கவில்லை.. எனது மனவோட்டத்தை மாற்றவே சும்மா கிறுக்கியதே இந்தப் பதிவு.. 🙂
இந்தப் பதிவு என்னை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மாத்திரமே.. யாருக்கும், யாரினையும் கருத்தில் வைத்து எழுதவில்லை… !
@ பிரியமுடன்………வசந்த்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
@ வலசு – வேலணை
சும்மா கற்பனையில் நான் கிறுக்கியதற்கு நீங்கள் காரணம் கற்பிக்க தயவுசெய்து முயற்சிக்க வேண்டாம்…
”காரணமில்லாமல் தோரணம் கட்டுறியள்” ….
கற்பனைகளைக் கிளறிக் கிறுக்குவதற்கு ”ள்” என்ற பெண்மைக் கதாபாத்திரம் அவசியமில்லை என்பது நான் சொல்லி உங்களுக்கு விளங்க வைக்க வேண்டியிருக்காது என நினைக்கின்றேன்…
உண்மைதானே…
@ globen
// அன்புக்கு காரணம் தேவையில்லை; காரணமிருந்தால் அங்கு அன்பில்லை!
உண்மைதான்… 🙂
கொப்புரான நல்லாருக்கு…! ம்ம் நிறைய எழுதுங்க!
கை என்னும் தூரிகை கொண்டு
கவி என்னும் சித்திரம் அழகாக
உள்ளது
//கலையரசன்
மிக்க நன்றிகள் கலையரசன்… 🙂
@ ராஜ்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
உங்களது ஹைக்கு இன்னும் அழகு.. 🙂
kkkkk