நேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது
பசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம்,
இங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க
வேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக் கூடாது. படத்தினை ஒருமுறை நீங்களே பாருங்களேன். படத்தினைப் பார்க்கப்
பார்க்க என் மாணவப்பருவ நாட்களினை என் ஞாபகத்திற்குக் கொண்டுவந்திருந்தது அந்தப் படம்.
மிகவும் மகிழ்ச்சியாக நாங்கள் ஓடித்திருந்த அந்தப் பருவம். வெறும் பத்து பதினொரு வருடங்கள்தான் ஓடிக்கழிந்துள்ளன. ஆனாலும் நீண்ட பயணம் போன்ற ஒரு
உணர்வு. அந்த மணி ரியூசன் சென்ரரில் நண்பர்கள் செய்த குறும்புகள், பரீட்சைகளில் கூடிய மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காய் போட்ட போட்டிகள்,
வேலாயுதம் சேரிடம் வாங்கிய பாராட்டுக்கள் என எல்லாமே இன்னும் பசுமையாக இருக்கின்றன என் ஞாபகத்தில். பாடசாலை விட்டதும் கிழமை நாட்களில் செவ்வாய்
மற்றும் வியாழனில் முன்று மணிக்குத் தொடங்கும் வகுப்புக்கள் மாலை ஐந்து மணிக்கு முடிவடையும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனேகமாக மதியம் ஒரு
மணியிலிருந்து மாலை வரை நடைபெறும். கணிதம், விஞ்ஞானம், தமிழ் மொழியும் இலக்கியமும், சமூகக் கல்வியும் வரலாறும், கணக்கியலும் வணிகக்
கல்வியும் மற்றும் ஆங்கிலம் ஆகிய முக்கியமான பாடங்களே நாங்கள் அங்கே கற்றோம்.
நான் அங்கே போய்ச் சேர்ந்தது 2000ம் ஆண்டின் நடுப்பகுதியல் என்று நினைக்கின்றேன். அப்போது அங்கே எனக்கு என் பள்ளி நண்பர்களை விட வேறுயாரையும்
தெரியாது. அங்கு சேர்ந்த பின்னர் புதிய பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள். மூன்றுமணிக்கு வகுப்பு என்றால் நான் வீட்டில் இருந்து புறப்படுவதே 2:55
இற்குத்தான். அடுத்த பத்து நிமிடத்தில் மணி வாசலில் நிற்பேன். அங்கே வகுப்புக்கள் அனேகமாக ஆரம்பித்து இருக்கும். கரும்பலகையில் வேலாயுதம் சேர்
சோக்கட்டியுடன் நின்றுகொண்டு இருப்பார். நான் வருகின்ற அவசரத்தில், வேகத்தில் தடார் என எனது சைக்கிளினை நிறுத்துகின்ற அந்தச் சத்தத்தில் அனைவரும்
எனனை ஒருகணம் திரும்பிப் பார்ப்பார்கள். ( ஒரு நாளுக்கேனும் வகுப்புத் தொடங்க முன்னர் வராத இவன் எல்லாம் எங்கே உருப்படப்போறான் என்று நினைத்துப்
பார்த்திருப்பார்களோ யார் கண்டது.. ).
வாங்கோ லெக்சரர் என்று செல்லமாக அழைப்பார் வேலாயுதம் சேர். வேறு ஒன்றும் இல்லை எனது அப்பா பௌதீகவியல்
லெக்சரர் என்பதனால் அவரது நண்பரான வேலாயுதம் சேர் என்னை லெக்சரர் என்றுதான் செல்லமாக அழைப்பார். (லெக்சரர்மார்தான் பிந்தி வருபர்கள் என்பதனால்
எனக்கு உறுத்துவதற்காகவே பயன்படுத்தியிருந்தாரோ தெரியாது. அவரை மீண்டும் சந்திக்கும் போது நிட்சயமாக இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.).
அங்கே எனக்காக முதலாவது வாங்கு காத்துகிடக்கும். வாங்கில் போயிருந்து மெல்லப் பாடத்திற்குள் நுழையும் போது திரும்ப இன்னும் ஒரு சைக்கிளச் சத்தம்
அங்கேயிருப்பர்களைக் குழப்பும். எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள். நான்தான் எப்போதும் பிந்திவருவேன் என்று பார்த்தால்
எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி பொங்கும் அப்போது. அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று
புரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்…
வேலாயுதம் சேரிடம் கணிதம் கற்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகக் கற்பிப்பார். “அப்பு.. ராசா.. வாடா..” என
அவர் செல்லமாக அழைப்பதைக் கேட்பதே பேரானந்தம். சின்னச் சின்னக் கணக்குத் தருவார் அதனை முதலாவதாக செய்து காட்டுபவர்களுக்கு தன் கையிலுள்ள
மோதிரம் பரிசாகத்தருவேன் என்பார். கடைசி வாங்கில் உள்ள நண்பர்கள் அண்டப் புழுகு விடுகிறார் சேர் எனக் குரல் எழுப்புவார்கள்.. அவர் சிரித்து விட்டு
செய்யுங்கடா கணக்கை என செல்லமாக வெருட்டுவார். நாமதான் கணக்கில புலியாச்சே ( நமக்கு இது கொஞ்சம் ஓவர்தான். என்ன சுயதம்பட்டம்
போலக்கிடக்குதா.. பரவாயில்லை.. இருந்தால் இருக்கட்டுமே!) வெளுத்துக்கட்டி முதலாதாகச் செய்து காட்டிவிடுவோம். அவரும் பார்த்துவிட்டு ”மணிக்காயடா”
என்பார் கனிவாக.. என்ன ஒரு ஆனந்தமாக இருக்கும். சின்னச் சின்னப் பெருமைகளுக்கு மயங்காதவர் யாரோ… நானும் என்ன விதிவிலக்கா.!
பின்வாங்குகளில் இருந்து சேர் மோதிரத்தைக் கொடுங்கோ என்று குரல்கள் எழும். போட இது என் கல்லாண நிட்சயதார்த்த மோதிரம் கழற்றினால் மனைவி
கோவிப்பாடா என்று நைசாகக் கழன்றுவிடுவார். சிலசமயங்களில் கழற்றமுடியுதில்லைடா.. இந்தா கழற்றி எடுத்துக்கோடா என்று கையையும் நீட்டிவிட்டுச் சிரிப்பார்.
சிலசமயங்களில் நண்பிகள் சிலரும் எனக்குப் போட்டியாக வந்துவிடுவதும் உண்டு.
எல்லோரும் எடுங்கள் ஐந்து ரூபாய் என்று ஒரு ரியூட்டை நீட்டுவார். இருபது கேள்விகள் முத்து முத்தாய் இருக்கும் என்பார். நாளை வரும்போது இருபது
கேள்விகளுக்கும் பதில் எழுதிக்கொண்டு வரவேண்டும் என்பார். அந்தக் கேள்விகள் அனைத்தும் எமது கணக்குச் செய்யும் வேகத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகள்தான்.
பின்னால் இருந்து பகற்கொள்ளை பகற்கொள்ளை எனக் கத்துவார்கள். இல்லடா இது உங்களுக்குப் பயிற்சி தான் என சிரித்து விட்டுப்போவார். அவரின் வகுப்பில்
இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. அந்த அளவிற்கு சுவாரசியங்கள் நிறைந்தாக இருக்கும். வேலாயுதம் சேர் அடிக்கடி சொல்லுவார், மணி ஒரு
கோவிலடா.. என்று! உண்மைதான் அப்போது நாங்கள் சிரிப்போம் இப்போது உணருகின்றேன் அவரின் சொற்களில் உள்ள அர்த்தங்களை.
என்னைப்போல் அந்த மணியென்னும் கோவிலிற் படித்தவர்களுக்குப் புரியும் அதன் அருமை பெருமைகளைப்பற்றி.
இந்தப்பதிவு சற்று சுயதம்பட்டப் பதிவாக இருந்தாலும் பரவாயில்லை என்று என் மாணவப்பருவத்தின் இனிய நினைவுகளைத் தூசி தட்டி உங்களோடு பகிர்வதற்காக எழுதுகின்றேன். வாழ்க்கையில் எங்குசென்றாலும் எந்த நிலையில் இருந்தாலும் என்றும் மறக்கமுடியாது அந்தக் கோவிலையும் அதில் குடியிருந்து என்னை இந்த நிலைக்கு உயர்த்திவிட்ட தெய்வங்களையும். அவர்கள் என்றும் சந்தோமாக வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.!
Categories: சுயதம்பட்டம், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
அன்புக்குரிய எம் சொந்தங்களே, A/L பரீட்சைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இவர்களுக்குதவ முடியாதா?
http://www.icuts.org/
\\"அவளைப் பார்த்து நன்றிக்காக சின்னப் புன்னகையொன்று புரிவேன் பதிலாக சின்ன முறைப்புத்தான் வரும்… "//
அம்புட்டுதானா.பெரிதாக எதிர்பார்த்தேன்.
@துபாய் ராஜா
//அம்புட்டுதானா.பெரிதாக எதிர்பார்த்தேன்.
சும்மா அம்புவிட்டதிற்கே முறைக்சாளே… மிச்சத்தைக் சொல்லவும் வேண்டுமா..!
\\"எஸ்கியூஸ்மி சேர் எனக் கேட்டுக்கொண்டு ஒரு பெண் உள் நுழைவாள்"\\
எங்களுக்கு தெரிந்த அதே பெண்ணா???
@கண்ணன் – Kannan
வருகைக்கு நன்றி..
// எங்களுக்கு தெரிந்த அதே பெண்ணா???
இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்..
என்னை என் பள்ளிப்பருவத்திற்கு
சொல்லாமல் அழைத்துச் செல்கின்றது
எனது தமிழ் ஆசிரியரின் பெயரும் வேலாயுதபிள்ளை,
அவரிடம் கற்றவை,
கற்பிக்கும் அழகு
என்றும் பசுமையான நினைவுகள்
வாழ்த்துக்கள்.
//''அம்புட்டுதானா.பெரிதாக எதிர்பார்த்தேன்.
சும்மா அம்புவிட்டதிற்கே முறைச்சாளே… மிச்சத்தைக் சொல்லவும் வேண்டுமா..!"//
ஆஹா !! ஆஹா !!.
தமிழ் எப்படி விளையாடுது !!!!.
இதுதான்யா நம்ம தமிழ்மொழியோட
தனித்துவம்.
@றாஜ் said…
வருகைக்கு நன்றி..
ஆமாம் என்றும் பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்ப்பது ஒரு சந்தோசம் தான்..
@துபாய் ராஜா
//தமிழ் எப்படி விளையாடுது !!!!.
இதுதான்யா நம்ம தமிழ்மொழியோட
தனித்துவம்.
உண்மைதான்… தமிழ் எவ்வளவு அழகான மொழி.. தனித்துவமானது..!
நல்ல அனுபவம்…
🙂
@வேத்தியன்
//நல்ல அனுபவம்…
மிக்க நன்றி வேத்தியன்
மணி ரீயூசன் எங்கே இருக்கு? சிலர் கொஞ்சம் பிந்தி வாறதே எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கத்தான் என்ற எண்ணம் எங்கட வகுப்பு பொடியளிடமும் இருந்தது அதிலும் ஒரு பெட்டை அடிக்கடி பிந்தித்தான் வருவாள் ஆனாலும் மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார் 3 மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். என்னதான் இருந்தாலும் என் குரு என்பதால் பெயர் வேண்டாமே. கண்டுபிடிக்கலாம்
@வந்தியத்தேவன்
மணி ரீயூசன் நாச்சிமார் கோவில் அடியிலேயும், மற்றயது பிறவுண் வீதியிலும் உள்ளது.
//சிலர் கொஞ்சம் பிந்தி வாறதே எல்லோரும் தன்னைத் திரும்பிப் பார்க்கத்தான் என்ற எண்ணம் எங்கட வகுப்பு பொடியளிடமும்..
எனக்கும் அப்படி இருந்திருக்குமோ… இருக்கலாம்..
//ஆனாலும் மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார் 3 மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். //
Science Hall குமரன் சேர் 3 மணி வகுப்பிற்கு 3.45 க்கு முதல் வரமாட்டார் 🙂 ஆனா அவரின் படிப்பித்தல் முறை தனி அழகு.
//மாஸ்டர்மார்களில் வகுப்பு பிந்தி வரும் ஒரு மாஸ்டர் இருக்கின்றார் 3 மணி வகுப்பிற்க்கு 3.30க்கு போனால் காணம் மனிசன் எப்படியும் 3.45க்குத்தான் வருவார். என்னதான் இருந்தாலும் என் குரு என்பதால் பெயர் வேண்டாமே. கண்டுபிடிக்கலாம்..?
ம்ம்ம்…
யாராயிருக்கும்.. எந்த இடம் என்று சொல்லமுடியுமா?
ஓ.. அவரா… ?
//
எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி
//
ஓ! அப்பிடிப் போகுதோ கதை?
சரிசரி 🙂
குமரன் சேர் அல்ல. இவரும் கெமிஸ்ரி ரீச்சர்தான்.
என்னுடைய 5ம் வகுப்பு நினைவுகளை மீட்டியதிற்க்கு மிக்க நன்றி சுபானு …..
@முகுந்தன்
// Science Hall குமரன் சேர் 3 மணி வகுப்பிற்கு 3.45 க்கு முதல் வரமாட்டார் 🙂 ஆனா அவரின் படிப்பித்தல் முறை தனி அழகு.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் முகுந்தன்.
உண்மைதான்.. பெளதீகவியல் என்னும் கடலை என்ன அழகாகப் படிப்பிபார்..
@வலசு – வேலணை
//
எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி
//
// ஓ! அப்பிடிப் போகுதோ கதை?
சரிசரி 🙂
கனக்கக் கற்பனை வேண்டாம் ஐயா.. 🙂
@வந்தியத்தேவன்
//குமரன் சேர் அல்ல. இவரும் கெமிஸ்ரி ரீச்சர்தான்.
அப்ப கெமிஸரி மகேஸ்வரன் சேரா..? அவர் சரியான நேரத்திற்கு வருபவராச்சே.. வேறுயார்?
@எவனோ ஒருவன்
// என்னுடைய 5ம் வகுப்பு நினைவுகளை மீட்டியதிற்க்கு மிக்க நன்றி சுபானு …..
எல்லோருக்குள்ளும் இப்படியான பசுமைநினைவுகள் இருக்கும்.. உங்களுக்கும் நன்றிகள்..
//எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி //
அடே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?
சிலேடையா மெசேஜ் பாஸ் பண்ணுறியா??
@Ramanan Satha
//எனக்குப் பின்னாலும் வருவதற்து ஆள் இருக்கிறாள் என ஊள்ளூர சின்ன மகிழ்ச்சி //
//அடே, உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?
சிலேடையா மெசேஜ் பாஸ் பண்ணுறியா??
அதான் ஏற்றனவே சொல்லீட்டமல்ல சுயதம்பட்டப் பதிவு என்று.. பின்ன என்ன… சும்மா ஒரு "பந்தா"வுக்குத்தான்… இதெல்லாம் கண்டுக்கக் கூடாதப்பா….