என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி..! இனிமேல் தமிழில் நாங்கள் விடுகின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்திமைக்க நல்லதொரு firefox add-on தயாரிக்கப்பட்டுள்ளது.. (எழுதும் போது மவ்வளவு ழனாவா, கொம்பளவு ளானவா எனக் குழம்பும் எனைப் போன்றோருக்கு நல்ல ஒரு பிரசாதம்).
தமிழ் விக்கிப்பீடியாவின் உதவியுடன் 50,000இற்கும் மேற்பட்ட சொற்களை இந்த add-on உள்ளடக்கியுள்ளது. பிரபல பதிவர் பாலச்சந்திரன் முருகானந்தம் (Balachander Muruganandam) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த தமிழ் எழுத்துப் பிழை திருத்தி. அவர்களுது இந்த அரும் பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.
நீங்களும் இந்த firefox add-on இனை பாவித்துப் பாருங்களேன்.. இங்கே சொருகி அந்த add-on இனைத் தரையிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். நேரம் போதாத காரணத்தால் இந்தப்பதிவினை மிகக்குறுகியதாக முடிக்க வேண்டியுள்ளது. வேறு என்ன தலைக்கு மேல் அலுவலக வேலைதான்.. டெட் லயின் நெருங்கிக் கொண்டு வருவதால் வலைப் பூக்களை இரசிப்பதற்கு நேரம் மிகக் குறைவாகவே உள்ளது … என்ன செய்ய வேலைதானே முக்கியம்.
Categories: அறிவியல், படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
ரொம்ப நல்ல செய்தி மக்கா. சரி உங்க பிலாக்ல படம் சூம் ஆகுதே அதுக்கு என்ன நிரல் தேவை மக்கா ????
நன்றி இளைய கவி..
Popup image loading method என்ற இந்தப் பதிவினை வாசியுங்கள்.
பயனுள்ள தகவல், நன்றி.
நன்றி சுபாங்கன்.. 🙂
நன்றிங்க
உங்களுக்கும் நன்றீங்க திகழ்மிளிர்
பயனுள்ள தகவல், நன்றி
திக்கு திசை தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். பேருதவி புரிந்தீர்கள் போங்கள். உருவாக்கியவனைப் போலவே ஊரறியச் சொல்பவனும் போற்றுதற்கு உரியவனே, காநாசு செல்லப்பாவைப் போல. நன்றி.