கவிதாயினி தாமரை. பெயரைப் போலவே அழகான தாமரை மலர் போல சிரித்த முகம். எப்போதும் வாடாத மலர் போல புன்சிர்ப்புப் பூத்திருக்கும் சிவந்த முகம். அவரின் கவிதைகள் அதனை விட அழகு. கவிதாயினி என்றவுடனேயே மனதிற்கு வருவது “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற சுப்ரமணியபுரப் பாடல். அழகான தமிழ் வரிகளினால் கேட்பவர்களையெல்லாம் கட்டி இழுத்தவர் தாமரை.
கவிதாயினி தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். திரையுலகப் பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பொறியியலாளராகப் பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தாமரை. பொறியியலாளராகவே இருந்திருந்தால் நாமெல்லமாம் இந்த அழகான தாமரை மலரை இழந்திருப்போம்.
எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது!. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் வருகின்ற அந்த ‘மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா’ என்ற பாடலின் ஆசிரியர் யார் என்று நான் தேடித்திரிந்தது. பின் நாட்களில்தான் அறிந்து கொண்டேன் அது தாமரையினது பாடல் என்று. அந்த அளவிற்கு என்னை மிகவும் கவர்ந்த தழிழ்ப் பாடல்களைத் தருபவர் தாமரை.
இவற்றையெல்லாம் விட நான் பார்த்த புதுமைப் புரட்சிப் பெண் இந்த தாமரை. புறனானூற்றில் வரும் மறத் தமிழச்சி இந்த தாமரை. முறத்தால் புலியை விரட்டினாளாம் புறனானூற்றுத் மறத்தமிழச்சி. ஆனால் தன் கவிதைகளால் யாருக்கும் அஞ்சாது, எதுவித பயமும் இன்றி கொடுமைகளைப் பார்த்து அதற் கெதிராகக் குரல் கொடுக்கின்றாள் தாமரை.
எனக்கு நண்பன் ஒருவன் மின் அஞ்சலில் அனுப்பிய தாமரையின் கவிதை இது. இவை ஒரு புரட்சிக் கவிஞரின் நெருப்பு வரிகள். பின்னர் கூகுளில் தேடியபோது அறிந்து கொண்டேன்,
குமுதம் வார இதழில் இந்தக் கவிதையின் ஒரு பகுதி இந்த வாரம் பிரசுரமாகியிருக்கிறது
என்பதனை.
கவிதாயினி மேற்கொண்ட பற்றுதலாலும் தமிழினத்திற்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு
கொதிக்கும் இதயம் ஒன்றேனும் உள்ளதே என்ற ஆறுதலாலும் இதனை இங்கே பதிகின்றேன்.
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..
கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!
குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!
ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!
ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!
இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!
தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!
போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…
உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!
எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!
நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…
ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
[Tamilsh திரட்டியில் இந்தப் பதிவினை பரிந்துரைத்து வாக்களித்து முதற்பக்கத்தில் முன்னணி இடுகையென்ற நிலையை அடைவதற்கு காரணமாயிருந்த அனைத்து வாசக உள்ளங்களுக்கும் சுபானுவின் மனமார்ந்த நன்றிகள்.. ]
இங்கே சொருகி வாக்குகளைப் பார்க்க
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
// உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
ஆற்றாமையில் ஒவ்வொரு தமிழரும் விடும் சாபங்களும் இவைகள்தான்.
🙁 🙁
சாபங்களிடுவதால் எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.
எனவே
//
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!
//
// ஆற்றாமையில் ஒவ்வொரு தமிழரும் விடும் சாபங்களும் இவைகள்தான்.
🙁 🙁
என்ன செய்வது.. சாபங்களையாவது போடுவோமே..
@வலசு – வேலணை
//சாபங்களிடுவதால் எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.
உண்மைதான்! என்ன செய்தாலும் இந்தப் பாழாய்ப்போன மனசுக்கு அது விளங்கவில்லையே..
மனச என்னவோ பன்னுதுங்க…
அருமை என்று ஒற்றை வார்தையில்
அடக்க முடியாத குமுறல்!!
எல்லாப் புகழும் அந்தக் கவிதாயினிக்கே..
ஆனால் மக்கள் இங்கே பட்ட துன்பம் வெறும் கவிதைகளால் வடிக்கப்பட முடியாது என்பதே உண்மை…
தாமரை அவர்களுக்கு எனது வணக்கங்கள். மேடையில் அவர் பேசும்போது தானைத் தலைவர்கள் பதில்பேச முடியாது போவதற்குக் காரணம் அவரது நியாயமான கேள்விகள்தான்…..
உண்மைதானே… உண்மைகளைப் பேசும்போது பொய்யும் புரப்புரை செய்பவர்களும் வாயடைத்துத் தானே போவார்கள்..
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!
வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
//கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!
ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்//
தமிழ்நாடும் தமிழனும் இந்தியாவில்தான் இருக்கிறார்கள்… இது தாமரை எனும் முட்டாளுக்கு புரியவில்லை போலும்…
வணக்கம் அனானி!
உங்கள் கருத்துக்களை மிகவும் வரவேற்கின்றோம்..
ஒரு மன்னன் தப்பு செய்ததற்காக மந்த மதுரையே எரியும் படி கட்டளையிட்டாள் கண்ணகி. அதுமட்டும் சரியென்றால் இங்கே ஈழத்தில் எத்தனை கண்ணகிகள் சபிக்க வேண்டும் இந்தியாவைப் பார்த்து. எரிக்கும் சக்தி இன்றைய கண்ணகிகளுக்கு இறைவன் கொடுத்திருப்பானானால் இந்நேரம் இந்தியா சுடுகாடாக மாறியிருக்கும்.
எரிக்கும் சக்தி இன்றைய கண்ணகிகளுக்கு இறைவன் கொடுக்காதது அவன் செய்த சதியா…! இல்லை ஈழத்தமிழரின் விதியா..! ..?
கவிதையின் தலைப்பே நடுங்க வைக்கிறது (கருஞ்சாபம் ) .ஒவ்வொரு வரிகளும் படிக்கும் போதே மனம் பதறுகிறது . தாமரை அவர்களின் பேச்சும் நியாயமானதாக இருக்கும்.ஆணித்தரமாகவும் இருக்கும்.அவர்களுக்கு என் வணக்கங்கள் . எப்படியோ எம் தமிழினத்துக்கு விடிவு வந்தால் போதும்.
@Julie Rani
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் Julie Rani.
சீக்கிரமாக விடிவு ஒன்று நிட்சயம் வரவேண்டும்.. அந்த விடிவு மிக மிக அவசியம் வன்னி வாழ் மக்களுக்கு..
THAMIZ THIRAIP PADA MUTHAL PEN KAVIZAR ENBATHU THAVARU.THIRUMATHI THAMARAI AVARKALUKKU MUN KUDIYIRUNTHA KOVIL ENDRA M-G-R PADATHTHIRKKU ROSHNAARA BEGUM ENDRA PEN KUNGUMA POTTIN MANGALAM ENDRU THODANGUM PADALAI EZUTHI IRUKKIRAAR.
enn tamil thaaye,saapathilum karunai-yaai kulanthaikalai valthum unnai vanankukiren.
@Barari
ஆகா… தப்பா எழுதிவிட்டோமே…
வருகைக்கும் தவறைச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றிகள் Barari …
@ Kasbaby
உண்மைதான் சபிக்கும் போது குழந்தைகளை விலக்கியிருக்கின்ற வரிகள் அருமை..
இவை எல்லாம் விரைவில் பலிக்கட்டும்..
ஆட்டு மந்தைகளாய் சொந்த மண்ணிலே
வடக்கர்களுக்கு வந்தனம் சொல்லும் தமிழ்
தலைவர்கள் முதலில் இந்த கருஞ்சாபத்திற்கு
பலியாகட்டும்..
தவறு சுபானு.
உணர்ச்சிவசப்பட்டு என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாம். ஆனால் நம் மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள். தாமரை அவர்கள் இப்படி எல்லாம் சாபம் விடவே தேவை இல்லை. ஒவ்வொரு தமிழனும் உள்ளுக்குள் குமுறி கொண்டு சிறிது சிறிதாய் செத்து கொண்டு தான் இருக்கிறான். தமிழரில் பலரும் தமிழர் அல்லாவதவர் பலரும் இன்னும் நம்மை தீவிரவாதிகள் என்று தான் கூறி கொண்டு திரிகின்றனர். தமிழினம் சொந்த நாட்டிலேயே ஏமாற்ற படுகிறது என்பது தான்உண்மை.
@Nagaraj
//ஆட்டு மந்தைகளாய் சொந்த மண்ணிலே
வடக்கர்களுக்கு வந்தனம் சொல்லும் தமிழ்
தலைவர்கள் முதலில் இந்த கருஞ்சாபத்திற்கு
பலியாகட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
உண்மையாக எல்லாமே நீங்கள் சொல்லும் அந்தத் தலைவர்களால்தான்.. முதலில் அவர்கள் முதலில் இந்த கருஞ்சாபத்திற்கு
பலியாகட்டும்..
@அவன்யன்
//தவறு சுபானு.
// ஆனால் நம் மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்.
எல்லாமே மன ஆறுதலுக்காகத்தானே..
தமிழ் நாட்டில் பல கவிதாயினிக்கள் இருக்கிறார்கள். முக்கால்வாசிப் பேர் கனிமொழியின் அடிவருடிகள் என்பதால் கவிதாயினிகளாயும், பெண்ணியம் பேசும் பெரியவர்களாயும் ஏன் அமைச்சர்களாயும் இருக்கிறார்கள். சிலபேர் ஆண்களை வசைபாடுவது மட்டுமே பெண்ணியம் என நினைக்கிறார்கள். இந்த இரு வகையறாக்களுக்குள்ளும் வராமல், தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்த உண்மையான போராளி தாமரை.
நாங்கள் மனதுக்குள் திட்டியவை தாமரையின் வரிகளில்!!!!!
@Abimaran
நன்றி அபிமாறன்…
thamil annaiye unnai pol aayiram aayiram thamil annaikal thevai intha thamil thiru naatirku athu mattum allamal ella annaiyarkalum intha saabathai ida vendum endru anbana vendugol!!
nee sabitha saabam balikkattum
thamil partudan
Srini
வருகைக்கு நன்றி Srini
Nandri subanu