உன்னைக் கொள்ளையடிக்கப் போகும் கொள்ளைக்காரன்

நீ கழற்றி வைத்த சரத்தில்
ஒட்டியிருந்த மல்லிப்பூ
சொல்லும் உன் கூந்தலின் வாசத்தை…

நீ என் கண் காண காத்திருக்கையில்
மலரும் செம்பரு சொல்லும்
உன் பெண்மையின் மென்னையை…

நீ சிரிக்கையில் சிந்தும்
சங்கதி சொல்லும்
உன் குரலின் இனிமையை…

நீ வாசல் வரும் போது பொன் அள்ளித்தூவும்
மஞ்சள் மலரணி சொல்லும் உன்
மேனியின் வண்ணத்தை…

நீ கண்களில் இட்ட
மை
சொல்லும் உன் கண்கள் பேசும் காதல் மொழிகளை…

நீ பணிவில் என்னிடம்
காட்டும் திமிர்
சொல்லும் இத்னைக்கும் சொந்தக்காரி நீ என்பதனை…


ஆனால் உன்னில் வைத்த என் காதல்
சொல்லும் இத்தனை அழகையும்
திறந்து கொள்ளையடிகப் போகும் கொள்ளைக்காரன் நான் என்பதனை!

Categories: கவிதை

3 comments

  • சுபானு

    ஏன் ஐயா…. கவிதையென்று சொல்லி நல்லாக் கொடுமைப்படுத்துகின்றேனே… 🙁

    சும்மா.. சின்னதா ஒரு முயற்சி பண்ணிப் பார்த்தேன்… முழுமையாக வாசித்ததற்கு நன்றிகள் ஐயா..!

Leave a Reply

Your email address will not be published.