logo

Month: June 2009

TFT

June 27, 2009

‘நேரம் போகுதம்மா.. கெதியா சாப்பாட்டத்தாம்மா…!’ ‘கொஞ்சம் பொறடி, இட்லியை கோப்பையில போட்டுக்கொண்டிருக்கிறேனல்ல…! ‘ ‘இண்டைக்கு முதல் நாளம்மா… நேரத்தோட போகணும்மா… சாப்பாட்ட ஊட்டிவிடம்மா…’ மஞ்சரியின் காலை நேர பரபரப்பு அவள் அம்மாவையும் பாதித்திருந்தது. கணிதத்தினைக் காதலிப்பவள் மஞ்சரி. எப்போதுமே எதையாவது சாதிக்கணும் என்கின்ற தீ அவள் மனதிற்குள் எரிந்து கொண்டே இருக்கும். எவரையும் அனிச்சையாய்த் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகு. புதுமுக மாணவியாக மொறட்டுவப் பொறியியற் பீடம் நுழையும் நாள் இன்று. ‘ஆறுதலாச் சாப்பிடடி.. இன்னும் நேரம் இருக்கு…’

Read More

மணி ரியூசன் சென்ரரில் நான்

June 24, 2009

நேற்று பசங்க படம் பார்த்தேன்.. நல்ல ஒரு அழகான படம். பாடசாலை மாணவர்களிடம் காணப்படும் நட்புரீதியான போட்டியை மையப்படுத்தி செதுக்கப்பட்டிருந்தது பசங்க படம். பள்ளிப் பசங்களின் கதையினூடு இன்னும்மொரு மெல்லியதாக ஒரு காதல் நுாலையும் கோர்த்திருந்தார் இயக்குனர். சரி விடையத்திற்கு வருவோம், இங்கே அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதோ அல்லது விளம்பரம் செய்வதோ என் நோக்கம் அல்ல. படத்தினை நீங்கள் பார்த்து அதனை நீங்கள் இரசிக்க வேண்டும். எனது விமர்சனங்கள் உங்களின் அந்த இரசிப்பில் கலங்கத்தை ஏற்படுத்தக்

Read More

Blowin’ in the Wind

June 23, 2009

1963ம் ஆண்டளவில் Bob Dylan என்பவரால் எழுதப்பட்ட “Blowin’ in the Wind” என்ற அந்த ஆங்கிலப் கவிதை ஏனோ என்னை மிகவும் ஆழமாகக் கவர்ந்திருந்தது. ஆங்கில இலக்கியத்தினை பள்ளியில் ஒரு விருப்பத்திற்குரிய பாடமாகத் தெரிவு செய்தவர்கள் இந்த ஆங்கிலக் கவிதையை சுவைத்திருப்பார்கள் இரசித்திருப்பார்கள். அண்மையில் நண்பன் ஒருவனின் facebook status ஒன்றில் இந்தக் கவிதையின் சில வரிகளை நீண்ட காலத்திற்குப் பின்னர் கண்டேன். இப்போது மீண்டும் சில ஞாபகங்களைத் தூசு தட்டுவதற்காகவும் வேறு பல பகிரங்கமாகக்

Read More

தமிழ் எழுத்துப் பிழை திருத்தி

June 21, 2009

என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி..! இனிமேல் தமிழில் நாங்கள் விடுகின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்திமைக்க நல்லதொரு firefox add-on தயாரிக்கப்பட்டுள்ளது.. (எழுதும் போது மவ்வளவு ழனாவா, கொம்பளவு ளானவா எனக் குழம்பும் எனைப் போன்றோருக்கு நல்ல ஒரு பிரசாதம்). தமிழ் விக்கிப்பீடியாவின் உதவியுடன் 50,000இற்கும் மேற்பட்ட சொற்களை இந்த add-on உள்ளடக்கியுள்ளது. பிரபல பதிவர் பாலச்சந்திரன் முருகானந்தம் (Balachander Muruganandam) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த தமிழ் எழுத்துப் பிழை திருத்தி. அவர்களுது இந்த அரும் பணிக்கு மனமார்ந்த

Read More

ஒரு புரட்சிக் கவிஞரின் நெருப்பு வரிகள்

June 15, 2009

கவிதாயினி தாமரை. பெயரைப் போலவே அழகான தாமரை மலர் போல சிரித்த முகம். எப்போதும் வாடாத மலர் போல புன்சிர்ப்புப் பூத்திருக்கும் சிவந்த முகம். அவரின் கவிதைகள் அதனை விட அழகு. கவிதாயினி என்றவுடனேயே மனதிற்கு வருவது “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்” என்ற சுப்ரமணியபுரப் பாடல். அழகான தமிழ் வரிகளினால் கேட்பவர்களையெல்லாம் கட்டி இழுத்தவர் தாமரை. கவிதாயினி தமிழ் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர். திரையுலகப் பாடலாசிரியராக ஆக வேண்டும் என்ற ஆசையில் பொறியியலாளராகப்

Read More

பார்க்கத்தான் சுள்ளான்

June 10, 2009

பறவைகளுக்குள்ளேயே மிகச் சிறிய பறவை எது தெரியுமா…ரீங்காரப் பறவை-Hummingbirds. பார்ப்தற்குத் தான் சின்னப் பறவை, ஆனால் அது மின்னல் போல யுத்த ஜெற் விமானங்களை விட வேகமாகப் பறக்கக் கூடியது என்பது தெரியுமா ..? பின்புறமாவும் பறக்கக் கூடிய பறவையாம்..! அமெரிக்கவின் கலிபோனியாக் பல்கலைக்கழக ஆராச்சியாளர்களால் இந்த விடையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிவேகக் கமராக்களின் உதவியினால் ரீங்காரப் பறவையின் பறப்பு படமாக்கப்பட்டுள்ளது. பெண் ரீங்காரப் பறவையினைக் கவர்வதற்காக ஆண் பறவை என்ன லாவகரமாகப் பறக்கின்றது பாருங்கள்.. ( எல்லாமே

Read More

மெளன சாட்சிகள்

June 9, 2009

எங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன. ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை… என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி.. இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம்

Read More

உன்னைக் கொள்ளையடிக்கப் போகும் கொள்ளைக்காரன்

June 3, 2009

நீ கழற்றி வைத்த சரத்தில் ஒட்டியிருந்த மல்லிப்பூ சொல்லும் உன் கூந்தலின் வாசத்தை… நீ என் கண் காண காத்திருக்கையில் மலரும் செம்பரு சொல்லும் உன் பெண்மையின் மென்னையை… நீ சிரிக்கையில் சிந்தும் சங்கதி சொல்லும் உன் குரலின் இனிமையை… நீ வாசல் வரும் போது பொன் அள்ளித்தூவும் மஞ்சள் மலரணி சொல்லும் உன் மேனியின் வண்ணத்தை… நீ கண்களில் இட்ட மை சொல்லும் உன் கண்கள் பேசும் காதல் மொழிகளை… நீ பணிவில் என்னிடம் காட்டும்

Read More

வசந்தத்தில் சில நாட்கள்

June 3, 2009

காலைநேர பனிக் காற்றில் உன் வரவிற்காய் பல மணிநேரம் காத்திருந்த போது கிடைத்த இன்பம்… வெறும் கண் பாசைதான் பேசினோமேயாயினும் அது இருவருக்கும் புரிந்ததில் கிடைத்த இன்பம்… வெள்ளிக் கொலுசு கட்டிய – உன் கால்கள் தினம் போட்ட கோலங்களை பார்த்து இரதித்ததில் கிடைத்த இன்பம்… கண்ணுக்குள் ஊடுருவும் என் பார்வையை ஏதேதோ ஜாலங்கள் செய்து தடுப்பாயே அப்போது கிடைத்த இன்பம்… பள்ளிசெல்ல முன் உந்தன் தரிசனத்தை நான் பெறுவதற்தாய் நான் வரும்வரை வரும் பேருந்துகளை எல்லாம்

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress