கணணி மென்பொருள் வல்லுனர்கள் சின்னக் குறும்புத்தனம் மிக்கவர்கள் என்று முன்னர் கேள்விப்பட்டு இருக்கின்றேன். தாங்கள் வடிவமைக்கும் மென்பொருளில் சின்னச் சின்னக் குறும்புகளினைச் செய்து அது தெரியாமல் மறைத்து ஒரு மறைபொருளாக உருவாக்கிவிடுவதில் கெட்டிக்காரர்கள். இவ்வாறான மறைக்கப்பட்ட சில செய்திகள் பின்நாட்களில் வெளிக் கொணரப்படும் போது அவை அம் மென்பொருளினைப் பாவிப்பவர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடுவது உண்டு. அத்ததைய மறைக்கப்பட்ட செய்திகள் Easter Egg எனக் குறிப்பிடுவதுண்டு.
முகப்புத்தகம் என்னும் Facebook அண்மைக்காலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமூக வலையமைப்பு. அத்தகைய மிகப்பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ள கணணி மென்பொருள் கலைஞர்கள் பல Easter Egg களினை முகப்புத்தகத்தில் உருவாக்கியுள்ளார்கள். இங்கே அவற்றில் சிலவற்றைத் – நான் அறிந்தவற்றை – தருகின்றேன். நீங்கள் கொஞ்சம் செய்து பாருங்களேன்.
1. Click on Fackbook background.
Now press the following keys ‘UP’, ‘UP’, ‘DOWN’, ‘DOWN’, ‘LEFT’, ‘RIGHT’, ‘LEFT’, ‘RIGHT’, ‘B’, ‘A’, ‘ENTER’.
இப்போது மீண்டும் Fackbook background இல் click செய்யுங்கள். இப்போது பாருங்களேன்…
2. உங்கள் நண்பர்களுடன் நீங்கள் அரட்டை(CHAT)யில் ஈடுபடும் போது பின்வரும் சொல்லினை பதிந்து பாருங்கள். : putnam:. [ No space in between ‘:’ and ‘p’. I have to put a space character in between ‘:’ and ‘p’. ] என்ன முயற்சித்துப் பார்த்தீர்களா…
3. உங்களின் புகைப்படம் ஒன்றின் மேல் click செய்து அதன் propertyயில் அதன் தொடுப்பினை எடுத்து அப்படத்தினை திறந்து(open) பாருங்கள். என்ன உங்களின் படம் வந்ததா..? இப்போது அந்தத் தொடுப்பின் இறுதிக் துண்டினை அகற்றி விட்டு மீண்டும் திறந்து பாருங்கள்.( உதாரணத்தினைப் பாருங்கள்) என்ன யாரு வாருவது….?
உதாரணம் : This is your original picture’s URL –
‘http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs003.snc1/4147_91715954714_544039714_2648852_2845238_n.jpg‘
Now delete the final part that is
‘4147_91715954714_544039714_2648852_2845238_n.jpg‘ from that above url.
Now open this first part of the original URL ‘http://photos-e.ak.fbcdn.net/hphotos-ak-snc1/hs003.snc1/‘. See what happening.
Categories: எனக்குத் தெரிந்தவை, குறும்புகள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
தகவலுக்கு நன்றி.
🙂
:putnam:
நல்ல தகவல்கள்…நன்றி…