இன்று காலை எனது மின்அஞ்சற் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒரே சந்தோசமாக இருந்தது. அதுவும் இரட்டிப்புச் சந்தோசம். எனது வலைப்பதிவுகள் இரண்டு யுத் விகடனில் பிரசுரித்துள்ளதாக மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் வலைப்பூக்களில் நாள்தோறும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றிற்கிடையில் எனது பதிவுகளைப் பிரசுரித்திருப்பதினை நினைக்கையில் மனது மிகவும் பூரிக்கின்றது. அண்மையில் பதிந்திருந்த அனிச்சம்பூ – குட் Blog பகுதியிலும் இதயத் திருடி அவள் – ஜீட் பகுதியிலும் பிரசுரித்திருந்தார்கள்.
அவற்றிற்கான பகுதிக்குச் செல்வதற்கு இங்கே சொடுக்குங்கள்.
இதயத் திருடி அவள் – ஜீட் : விகடன் இணைப்பு
அனிச்சம்பூ – குட் Blog : விகடன் இணைப்பு
என்ன நாமளும் இனி விகடன் புகழ் (இது கொஞ்சம் ஓவர்தான் எனக்கு) சுபானு என்று சொல்லலாமில்லையா..! விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 🙂
Categories: சுயதம்பட்டம், ச்சீசி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அண்ணா…
வாழ்த்துக்கள்….!
Congrats!
அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்… 🙂
கடவுள் ஆக மாறிவிட்ட உங்களுக்கு, உங்கள் கவிதைக்கு கிடைத்த மரியாதைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் – எழில் மாறன் .பெங்களூர்
வாழ்த்துக்கள்.
@Mani Maran
//கடவுள் ஆக மாறிவிட்ட உங்களுக்கு..
என்ன இது மணிமாறன்.. சும்மா கிருஷ்ணனும் ராதையும் பிடிச்சிருந்ததால படத்தை மாத்தினா… அதுக்குப் போய் இப்படி நக்கல்(மொக்கை) பண்ணிறிங்களே.. 🙂
//உங்கள் கவிதைக்கு கிடைத்த மரியாதைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
நன்றி.. 🙂
@ஊர் சுற்றி
// வாழ்த்துக்கள்.
நன்றிகள்.. 🙂