மாசிப் பனியின் இதமான புதுக்காற்று முகத்தில் சில்லென தடவிச்செல்ல மெல்லக் கண் திறந்து ஜன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தது நிலவு. கதிரவனின் பொற் கதிர்கள் அந்த நிலவின் பொன்முகத்தில் பட்டு பரவியதோ என்னமோ திடீர் என்று பொன் ஒளி அந்த அறையெங்கும் பரவிப் பிரகாசித்தது. எப்பொழுதும் பெளவியமாக இருக்கும் அந்த நிலவின் முகத்தில் இன்று ஏனோ ஓர் சோகம் மெல்ல இழையோடியிருந்தது. பனிக்காற்றின் இதத்தை மெல்ல உள்மூச்சின் முலம் வாங்கி தன் இருதய நாளங்களுக்கு அனுப்பிவிட்டு நீண்ட சிந்தனையில் இருந்த அந்த நிலவினை மெல்லத் திருப்ப வைத்தது ‘Good Morning மஞ்சரி…‘ என்ற ஆதித்யாவின் காலை வணக்கங்கள்.
yaa.. morning.. ஆதி.. என்ன நேரத்தோடு எழும்பிட்டீங்க போல..
ம்… என்று கையில் இருந்த தேனீர்க் கோப்பையைக் மஞ்சரியின் கையில் கொடுத்தான்.
Thanks ஆதி..
மெல்ல இருவரும் தமது தேனீரில் கவனத்தை செலுத்தத் தொடங்கினார்கள். அந்த மெல்லிய குளிருக்கு தேனீர் சுகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். மஞ்சரியின் முகத்தில் அந்த தேனீர் தந்த சுகம் தெளிவாகத் தெரிந்தது.
என்ன ஆதி இன்னைக்கு எந்த companyக்கு அப்பளிக்கேஸன் போட்டுப்பாப்பம்..? எங்கேயாவது வேகேன்ஸி இருக்காமா..?
ம்ம்ம்… பாப்பம். நானும் எத்தனையோ இடத்தில முயற்சி பண்ணிப்பாத்திட்டன்.. எங்கேயும் வேவென்ஸியில்ல. வேலையில இருக்கிறவங்களே பயப்பிடுறாங்க எப்ப வேலையைவிட்டுத் தூக்கப் போறாங்களோ என்று. அதனாலயே எல்லோரும் இருக்கிற வேலையிலேயே அப்படியே ஒட்டிக்கிட்டு இருக்காங்க, யாரும் புதிசா ஒரு வேலைக்கு மாறுத்தப் பற்றியோ அல்லது வெளிநாட்டுக்குப் போறதப் பற்றியோ நினைச்சுக் கூடப் பார்கிறாங்க இல்ல… இதனாலேயே வேகேன்ஸியி வரமாட்டேங்குது! என்றான் ஆதித்யா.
ஆதித்யாவும் மஞ்சரியும் மொறட்டுவப் பல்கலைகழகத்தில் கணணிப் பொறியியற் பிரிவில் ஒன்றாகப் படித்தவர்கள். படிப்பு முடிந்து ஒரே சொவ்வெயார்க் கம்பனியில் வேலைக்கும் சேர்ந்து கொண்டார்கள். பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலம் தொடக்கம் கண்ணியமான காதல் சோடி எனப் பெயர் பெற்றவர்கள் அவர்கள். சேர்ந்து பார்க் பீச் என எங்கேயும் சுற்றியது கிடையாது. அவர்களின் நண்பர் வட்டத்தைத் தவிர வேறு யாரும் அவர்கள் காதல் ஜோடிகள் என்பதனை நம்பமாட்டார்கள். காதலுக்குப் புது இலக்கணம் எழுதப் பிறந்தவர்களோ அவர்கள் எனத் தோன்றவைக்கும் காதல் ஜோடி.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் கரம்பிடித்திருந்தனர் அந்தக் கண்ணியக் காதல் ஜோடி. கல்யாணப் பரிசாக அவர்கள் கம்பனியில் இருந்து கொடுத்த கல்யாணப்பரிசு ‘வேலையை விட்டுத் தூக்குவதாக கொடுத்த பத்திரம்‘. யார்செய்த பாவமோ என்னமோ, எங்கோ யார் யாரோ செய்த பாதகச் செயலால் அந்த ‘அழகான‘ காதல் தம்பதிகளுக்கு வேலையிழப்பு என்னும் கல்யாணப் பரிசு கிடைத்தது. சரி பார்ப்போம் பின்னர் வேலையெடுத்துக் கொள்ளலாம் என மெல்ல இருந்து விட்டார்கள் அவர்கள். காலம் செல்லச் செல்ல பொருளாதார நெருக்கடி மெல்ல மெல்ல எல்லாத் துறைகளையும் ஊடறுத்தே தவிர அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு வந்தபாடில்லை. இன்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது அந்த வேலையில்லாப் பிரச்சனை. ஒவ்வொரு நாளும் வேலை தேடுவதே தலையாக கடமையாகி விட்டது அவர்களுக்கு. புதுமண வாழ்க்கையை இனிமையாக அனுபவிக்கக் கூட முடியாத துர்ப்பாக்கியசாலிகளாகி விட்டார்கள் மஞ்சரியும் ஆதித்யாவும்.
இப்படியே போனால் என்னவாகும் ஆதி…
எனக்குப் பயமாக இருக்கு மஞ்சரி… bank balance மொத்தமாக் காலியாகிற நிலைவந்திட்டுது.. அதுக்குள்ள நம்மள்ள யாராவது ஒருவருக்கு வேலைகிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் நிலமை அதோகதிதான், என்றான் ஆதித்யா.
என்ன செய்யலாம்டி… ?
………………
ஆதி.. நேத்தையிரவு சின்னதா ஒரு யோசனை தோணிச்சுது… ஆனா அது எவ்வளவுக்குப் வெற்றிகரமானதா இருக்கும் எனத் தோணல…
இரவு தோணிச்சா… என்ன தோணிச்சு…?
இல்ல.. நாமளா ஏன் ஒரு சின்னக் கம்பனி தொடங்கக்கூடாது ஆதி…
##### என்ன சொல்லுற… எலி தான் போக வழியக் காணமாம் அதுக்குள்ள விளக்குமாத்துக் கட்டையையும் தூக்கிக் கொண்டு போக ஆசைப்பட்டதாம்… இந்த நிலையிலேயும் ஜோக் அடிக்கிறியேடி.
சும்மா pesimisticஆக் கதைக்காதீங்க ஆதி.. எனக்குப் பிடிக்காத ஒரேயொரு விசயம் இப்படிக் கதைக்கிறதுதான்… முயற்சி பண்ணாம இப்படிக் கதைக்கிறதா இருந்தா சொல்லுங்க நான் எதையும் சொல்லப்போறதே கிடையாது…
சரி சரி… பேசல .. உன்கிட்டப் பிடிச்சதே இந்தக் குணம் தானடி … என்னன்னு சொல்லு பார்ப்பம்..
இல்ல நாம ஏன் சின்னதா ஒரு வீடு அல்லது கட்டடம் சம்பந்தமாக இணையத்தில விளம்பரப்படுத்துறத்துக்கு ஒரு இணையப் பக்கம் செய்யக்கூடாது…? வீடு வாங்கப் போறவங்களையும் வாங்க விரும்பிறவங்களையும் ஏன் தொடர்பு படுத்தக்கூடாது?
….
…………………………
என்ன யோசிக்கிறீங்க..?
நல்ல யோசனைதான்… ஆனா என்னெண்டு கிளையன்ஸ் பிடிக்கிறது என்றுதான் யோசிக்கிறேன்..
அது பற்றிக் கவலைப்படாதீங்க… எங்க அப்பாவின்ர சிநேகிதர் தான் தினகரன் பத்திரிகையில ஆசிரியரா இருக்கிறார். நாம வேணுமன்றால் அவருடன் கதைதால் நாம கொஞ்ச கிளையன்ஸ் பிடிக்கலாம்… பிறகு கொஞ்கம் கொஞ்சமா விரிவு படுத்தலாம்..
அப்பயென்டி… நிட்சயமா இது நல்ல முயற்சிதான்… இப்பவே நாம இதைத் தொடங்க வேண்டியதுதான் சகி…. !
வெற்றியை நோக்கிய புதிய முயற்சியில் இறங்கினார்கள் அந்தத் காதலர்கள்.. நெஞ்சோடு தீ மூண்டால் வாழ்வின் மாற்றங்கள் நிட்சயம் வெற்றியே… !
Categories: சிறுகதை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
//ஒரு வீடு அல்லது கட்டடம் சம்பந்தமாக இணையத்தில விளம்பரப்படுத்துறத்துக்கு ஒரு இணையப் பக்கம் செய்யக்கூடாது…?//
அப்பிடியே கலியாணத்துக்கு மாப்பிளை பொம்பிள பாக்கிற இணையத்தளமும் செய்யலாம் தானே… 🙂
கடும் optimisticகான கதை…!
Telecommunication துறையில வேலை ஒன்றும் காலி இல்லை என்று Computerக்கு மாறோணும் என்டு நினைக்கேக்க இப்பிடி கதையில வருதே….என்ன செய்ய?????
அப்ப எல்லாரும் வெட்டியாதான் இருக்கபோறோமா????
நிமல்-NiMaL
// அப்பிடியே கலியாணத்துக்கு மாப்பிளை பொம்பிள பாக்கிற இணையத்தளமும் செய்யலாம் தானே… 🙂
அட ஆமா.. நல்ல யோசனைதான்…
//கடும் optimisticகான கதை…!
என்ன நக்கலா…
@கார்த்தி
//Telecommunication துறையில வேலை ஒன்றும் காலி இல்லை என்று Computerக்கு மாறோணும் என்டு நினைக்கேக்க இப்பிடி கதையில வருதே..
என்ன செய்யுறது கார்த்தி… வீட்டுக்கு வீடு வாசற்படி…
//அப்ப எல்லாரும் வெட்டியாதான் இருக்கபோறோமா!
ஏன் அப்படிச் சிந்திக்கிறிங்க… கதையில வாற மாதிரி ஏதாவது புதுசா ஒரு try பண்ணுங்களேன்…
// ஆதித்யாவும் மஞ்சரியும் மொறட்டுவப் பல்கலைகழகத்தில் கணணிப் பொறியியற் பிரிவில் ஒன்றாகப் படித்தவர்கள்.நண்பர் வட்டத்தைத் தவிர வேறு யாரும் அவர்கள் காதல் ஜோடிகள் என்பதனை நம்பமாட்டார்கள் //
நண்பா இது என்னோட படித்த ரெண்டு பேரோட கதை மாதிரியே இருக்கு….
அப்ப ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் என்னவாயிற்று?
வாழ்த்துக்கள். தொடருங்கள்
@கண்ணன்
//நண்பா இது என்னோட படித்த ரெண்டு பேரோட கதை மாதிரியே இருக்கு….
ஓ.. என்ன ஒரு கோ-incident.. என் கற்பனைக் கதையும் உங்களுக்குத் தெரிந்த அந்தக் “காதலர்களின்” கதையும் பொருந்தியிருக்கிறதே…
ஆனால் இது முற்று முழுக்க கற்பனைக் கதையே.. ! எந்த விதமான உண்மையும் இங்கே கலக்கப்படவில்லை என்பது சத்தியமான உண்மை!
@வலசு – வேலணை
//அப்ப ஈழத்தமிழரின் இனிய எதிர்காலம் என்னவாயிற்று?
அது ஈழத்தமிழரின் எதிர்காலம் எப்பொழுதும் இனிமையாகத் தான் இருக்கும்.. ஏன் இந்த சந்தேகம்..?
இதென்ன opportunity time கதையா?
அதிகமானோர் எதிர்பார்க்கும் அசத்தல்முடிவு !
சுவாரஸ்யம் 🙂
Recession இப்படி கதை எழுதியும் பிழைக்கலாம் போல… பார்ப்போம் இன்னும் பதினொரு மாசம் இருக்கு தானே….
/*..
கடும் optimisticகான கதை…!
…*/
ரிப்பீட்டு…