20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது தம்முயிருக்கும் உத்தரவாதம் இல்லாத அந்தக் கணத்தில் அவர்களால் என்ன செய்ய முடியும். எங்கும் பரிதாப அலறற் குரல்கள். தம்முயிரைக் காப்பாற்ற இனி எங்கே ஓடுவது..? போதாக்குறைக்கு அடைமழை வேறு அவர்களை வாட்டி வதைக்கின்றது. இதுவே இன்றைய வன்னி மக்களின் பரிதாப நிலை. வெறும் வார்த்தைகளால் உணர்த்தி விட முடியாது அவர்கள் அனுபவிக்கும் துயரத்தினை. அவர்கள் என்ன அவ்வளவு பாவம் செய்த பிறவிகளா? இறைவனுக்கு என்ன இதயமே இல்லையா? அவர்களின் மீது இறைவனின் பார்வை எப்போது விழும்.?
உலகெங்கும் பரந்துள்ள தமிழர்கள் நாள்தோறும் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். உலகமக்களின் கவனத்திற்கு அல்லற்படும் மக்களின் அபலக் குரலினை எடுத்துச் செல்வதற்கு எவ்ளவோ முயற்சி செய்கின்றார்கள். எந்த ஒரு நாட்டிலாவது தமிழ் அரசு நடைமுறையில் இருக்குமானால் எமக்காக அந்த அரசு நிட்சமயாகக் குரல் கொடுத்திருக்கும். ஆனால் எமது துரதிஸ்டம் எமக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லை. இனி நாமாகக் தடைகளை உடைத்தெறிந்தாலே ஒழிய வேறு வழியில்லை.!
ஆறு கோடி தமிழரின் தலைவர் என்றும் ஆறாவது முறையாகவும் இம்முறை ஆட்சியைப் பிடிப்பேன் என்றும் மார்தட்டிக் கொண்டிருக்கும் தமிழகத் தலைவர் நினைத்திருந்தால் எப்போதோ இந்த அனர்த்தங்களைத் தடுத்து தவிர்த்து வரலாற்றுப் புகழினைப் பெற்று
இருக்கலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில் அதிகாரத்தில் இருக்கும் ஒரேயொரு தலைவர் அந்த 84 வயதுப் பெரியவர்தான். மாறி மாறி கட்சிகளைத் தாக்கி அறிக்கைகளை விடுவதைத் தவிர்த்து எப்போதோ காத்திரமான செயற்திறன் மிக்க முடிவினை எடுத்து எம் மக்களைக் காத்திருக்கலாம். ஆனால் தனது அரசியல் சுயநலத்திற்காக எம் மக்களின் துயரத்தினைப் பயன்படுத்தத் துடிக்கும் இதயமற்ற மனிதர் என்பதினை நிரூபித்துள்ளார் முதல்வர். தனது
தேர்தல் பிரசாரத்திற்காக எம்மவர்களின் துயரத்தினைப் பயன்படுத்தத் துடிக்கும் மனித மிருகங்களை வரலாறு மன்னிக்காது. நிட்சயமாக இவர்களைப் போன்றவர்கள் வருகின்ற தேர்தல் களத்தில் இருந்து ஏன் அரசியலில் இருந்தே தூக்கியெறியப்பட வேண்டும். இது தமிழக மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. பல்லாண்டு கால வரலாற்றுப் புகழைக் கொண்ட மக்களை மாந்தைக் கூட்டமாக நினைத்து ருசி பார்க்க நினைத்த குள்ளநரிக் கூட்டத்தை ஓட ஓட விரட்டியடிப்போம் என்று முடிவெடுப்போம்.
முடியாதது என்று எதுவுமேயில்லை… முடித்துக் காட்டுவோம் !!!!
Categories: அரசியல், எனது பார்வையில், பார்வை, வன்னி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இந்தப் பதிவையும் வாசியுங்கள்…
மீண்டும் ஒரு அத்திப்பட்டி
இதை மட்டும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்!
தொடுப்பைக் காண்க!
http://jothibharathi.blogspot.com/2009/04/blog-post_11.html
கொழுப்பு எடுத்திருக்கும் கிழட்டு நரிக்கு எல்லோரும் சேர்ந்து வையுங்கடா ஆப்பு!!!
துரோகிகளை மன்னிக்காதீர்கள்!!
//ஆறு கோடி தமிழரின் தலைவர்….
கவலையுடன் கேட்கின்றேன். இனியாவது இந்த அடைமொழியை அந்தப்பெயரின் முன்னால் இடுவதை நிறுத்துங்கள்.
//ஆனால் தனது அரசியல் சுயநலத்திற்காக எம் மக்களின் துயரத்தினைப் பயன்படுத்தத் துடிக்கும் இதயமற்ற மனிதர் என்பதினை நிரூபித்துள்ளார் முதல்வர்.
இன்னுமா அவரை நம்பிக் கொண்டிருந்தீர்கள்? தேர்தலுக்காக நாளை உண்ணாவிரதமிருந்து நடித்தாலும் ஆச்சரியம் இல்லை.
@ கார்த்தி
// கொழுப்பு எடுத்திருக்கும் கிழட்டு நரிக்கு எல்லோரும் சேர்ந்து வையுங்கடா ஆப்பு!!!
உண்மைதான்… அந்த நரிக்கு வைத்தால்த்தான் புரியும்… யார் கண்டது அப்படி ஆப்பு வைத்தாலும் எங்கே புரியவா போகின்றது.. அதற்கும் ஏதாவது காரணம் கண்டுபிடித்து கவிதை எழுதிவிடுவார்..
//ஆறு கோடி தமிழரின் தலைவர்….
indha kilavanukku yar indha pattahthai koduththau. muthalil ippadi solvathai nirutha vendum.
தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்!!!!!! – என்ன ஒரு தெனாவட்டான வார்த்தை. ஆமா இதுக்கு இன்னாப்பா அர்த்தம்?
kondu vanthu ammayarai ukkara vaiyungal, nalaye ella prachanayum thirnthu vidum……
@ஆதிரை
//ஆறு கோடி தமிழரின் தலைவர்…. கவலையுடன் கேட்கின்றேன். இனியாவது இந்த அடைமொழியை அந்தப்பெயரின் முன்னால் இடுவதை நிறுத்துங்கள்.
உண்மைதான்… மக்களின் உணர்வை மதிக்காத, மக்களின் உரிமையைக் காக்கத் தவறுபவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாதுதான்… !
@bharathar
//தமிழர்களே, தமிழர்களே, நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்!!!!!!
நன்னிலை மறந்த ஆணவத்திமிரில் வெளிப்பாடுகளே இவை… பொறுத்திருப்போம்.. காலம் பதில் சொல்லும்…
தமிழகத்தில் மக்களிடையே செல்வாக்கு உள்ளவர்களிடம் இலங்கைத் தமிழர் மீதான பற்றுதல் உதட்டளவில் மட்டுமே உள்ளது. உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு வெகுவாக இல்லை. இப்படி ஒரு முரண்பாடுகள் இருக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமில்லை.
உலக அரசியலை உற்றுநோக்கும் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் இந்தியக் குடிமக்களில் பலர் வாக்களிப்பதே இல்லை. அரசியல் தலைவர்கள், நடிகர்கள் போன்றோரின் பேச்சை அப்படியே நம்பும் அப்பாவி மக்கள் தான் கால்கடுக்கக் காத்திருந்து வாக்களிக்கும் குடிமக்களாக இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இலங்கையில் தற்போது நிகழும் சூழலில் தமிழக தலைவர்கள், தமிழக மக்கள் நிலைப்பாடு போன்றவற்றை ஓரளவு அறிவேன். அவ்வப்போது போராட்டத்தை நடத்துவது தவிர, புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய சிந்தனை என்னவாக இருக்கிறது என்பதையே அறிய விழைகிறேன்.
இயன்றால் இரு தொடுப்புகளையும் காண்க…
http://globen.wordpress.com/2009/04/09/lanka-4/
http://globen.wordpress.com/2009/04/10/karunanidhi/
@globen
//தமிழகத்தில் மக்களிடையே செல்வாக்கு உள்ளவர்களிடம் இலங்கைத் தமிழர் மீதான பற்றுதல் உதட்டளவில் மட்டுமே உள்ளது.
மிகச்சரியாகச் சொன்னீர்கள் குளோபன்.. மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கு அல்லற்படும் மக்களின் அழுகுரல் வோட்டுச் சேர்க்கும் இயந்திரமாகத்தான் இருக்கின்றது…!
உண்மையான தலைவனை தமிழகம் அடையாளம் கண்டுகொள்ளாவிடில் தமிழக மக்களையும் அவர்கள் எதிர்காலத்தில் தமது சுயநலத்திற்காக அடகுவைத்து விடுவார்கள்…!
ஜாக்கிரதை மக்களே… முடிவு உங்களின் கைகளிளேயே…!
‘தமிழின துரோகி’ கருணாநிதி.
குடும்ப பாசம் , பண ஆசை கிழவரின் கண்ணை மறைத்து விட்டது. அடிவருடிகள் திருந்த வேண்டும் முதலில்.