இன்று வேலை முடித்து வீடு வந்து சற்று ஆறுதலாகப் பத்திரிகையைப் பார்ப்போம் என்று பார்த்தால் மிகவும் அநாகரிகமான கீழ்த்தரமான சிங்கள இனவாதத்தின் உச்சக்கட்ட வெறியாட்டம் கண்ணிற்பட்டது. மிகவும் ஒரு மனித நாகரீகமற்ற காடைத்தனமான நடவடிக்கையினை இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் உற்சப ஏற்பாட்டுகளில் காட்டியிருந்தது, வெளியுலகத்திற்கு சமவாதம் பேசும் சிங்களம். இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா இம்முறை இனவாத சிங்களக் காடைக்குழுக்களின் மிரட்டலையடுத்து பிற்போடப்பட்டுள்ளது. இதுவே அந்தச் செய்தி.
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் மகோற்சவம் ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமியில் தான் நடைபெறும். கடந்த இரு வருடங்களாக பௌத்தர்கள், தமக்கு பௌர்ணமி தினத்தன்று பௌத்த விகாரைக்கு சென்று வழிபட முடியவில்லை எனவும் கூறிவந்துள்ளார்கள். ஆனால் இவ்வருடம் ஆலய திருவிழா நடைபெறும் திகதியை தள்ளிப் போடுமாறும் கூறி சிங்களவர்கள் பெரும் படையாகச் சென்று மிரட்டலை விடுத்து மகோற்சவ உற்சபத்தினைத் தள்ளிப் போட வைத்துள்ளனர்.
தமது உத்தரவையும் மீறி மகோற்சவத்தை நடாத்தினால் பெரும் பிரச்சனை உண்டு பண்ணப்படும் என சிங்களக் காடையர்கள் அச்சுறுத்தியுள்ளனர். அதனைவிடவும் இது சிங்கள நாடு சிங்களவருக்குத்தான் இங்கே முதலிடம் எனவும் எனவே பௌத்த போஜன் திருவிழா நேரத்தில் எந்த விதமான அலங்கார உற்வசங்கள் தமிழர் முன்னெடுக்கக் கூடாது என்றும் மிரட்டப்பட்டுள்ளது. அதனைவி்டவும் கொடுமையான விடையம் என்னவென்றால் வேணும் என்றால் திருவிழாவினைத் தமிழர் கொண்டாட விரும்பினால் கொண்டாட்டுமாம் ஆனால் பௌர்ணமி தினத்தில் கோவிலை விட்டுத் தேர் வெளிக்கிளம்பக் கூடாது என சின்ன சலுகை கொடுத்திருக்கிறாராம் பெளத்த மடாதிபதி ஒருவர். என்ன கொடுமை இது..
இந்த மிரட்டலினைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் என கோவில் நிர்வாகம் நினைத்து ஆலய மகோற்சவத்தை இவ்வருடம் பிற்போடுவது என முடிவெடுத்துள்ளது.
200 வருடத்திற்கு மேல் பழைமை வாய்ந்தது இறக்குவானை ஆலயம். எப்போதும் இது போன்ற தடங்கல்கள் அந்தக் கோயிற் திருவிழாவிற்கு வந்தது கிடையாது. ஆனால் இன்று யுத்தத்தில் தமது கை ஓங்கியுள்ள தமது இனவாத்தை வெளிப்படுத்தும் இங்குள்ள சிங்களவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகின்றார்களோ… ? தமிழரின் நிலை…?
ஒரு சின்னக் கோயில் திருவிழா விடையத்தினில் வி்ட்டுக் கொடுப்பினை மேற்கொள்ள மாட்டாத சிங்களமா தமிழருக்கு உறுதியான தீர்வினை முன்வைத்து பிரச்சனையைத் தீர்க்கப் போகின்றது…!
கேட்டால் கொடுக்கப்படாத இடத்தில் தட்டித்தானே பறிக்க வேண்டும்… எமது உரிமையை!
Categories: இலங்கை, சிங்களம், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
இதுதானப்பா ஆரம்பம் விடுதலைப்புலகளால் தடைப்பட்டுபோன இனவழிப்பு இன்னும் சில மாதங்களில் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்படும். இன்னும் ஒரு 20 வருடங்களில் இலங்கையில் தமிழர் இருந்தார்கள் என்று எங்கேயும் பழைய புத்தகத்தில்தான் இருக்கும்.
உண்மைதான்… பார்ப்போம்…:(
இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம்
என்று எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே தமிழர்களின் புராதன முருகன் ஆலயமான கதிர்காமத்தை
தமது கோயில் ஆக்கிவிட்டார்கள்.
கதிர்காமம் தமிழர் கோயில் என்றால் அடிக்கவருகிறார்கள்.
இப்பவே அலுவலகங்களில் அவர்களது கிண்டல்கள் என்றால் சொல்லிமாளாது.
பக்த்தில் ஓருவன்
இடறி விழுந்த போது
தூக்கி விடக் கையில்லை….
கேட்டால்
கோபக்காரனாம்….
இப்படி எல்லாம் தமிழன் உள்ள வரை ,
என்றுமே மீட்சியில்லை..
இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ.