logo

Month: April 2009

பன்றி என்ன பன்றி

April 30, 2009

உலகெங்கும் பன்றிக் காய்ச்சல் பயப்பீதியால் நாடுகள் பல அலறிக் கொண்டிருக்கின்றன. ஐயோடா.. எங்கே எமது நாட்டுக்கும் வந்துவி்டக்கூடாது என்பதனால் பலநாடுகளின் விமானநிலையங்களில் பலவட்டக் கண்காணிப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. Swine influenza virus என்னும் அந்த உயிர்க்கொல்லி வைரஸ் பன்றகளில் [ pigs (swine) ] இருந்து மனிதனுக்குப் பரவியதாம். எனவே பன்றி என்றாலே அலறிக்கொண்டு ஓடுகின்றார்கள் மனிதர்கள். ஆனால் இந்த சிறுமியைப் பாருங்கள். எனக்கென்ன பயம்… பன்றி என்ன பன்றி… I’m so love swine.. என்று கண்கள்

Read More

இனவாதிகளின் மிரட்டலால் பிற்போடப்பட்ட கோவிற் திருவிழா

April 29, 2009

இன்று வேலை முடித்து வீடு வந்து சற்று ஆறுதலாகப் பத்திரிகையைப் பார்ப்போம் என்று பார்த்தால் மிகவும் அநாகரிகமான கீழ்த்தரமான சிங்கள இனவாதத்தின் உச்சக்கட்ட வெறியாட்டம் கண்ணிற்பட்டது. மிகவும் ஒரு மனித நாகரீகமற்ற காடைத்தனமான நடவடிக்கையினை இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் உற்சப ஏற்பாட்டுகளில் காட்டியிருந்தது, வெளியுலகத்திற்கு சமவாதம் பேசும் சிங்களம். இறக்குவானை முத்துமாரி அம்மன் கோவில் திருவிழா இம்முறை இனவாத சிங்களக் காடைக்குழுக்களின் மிரட்டலையடுத்து பிற்போடப்பட்டுள்ளது. இதுவே அந்தச் செய்தி. இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்குவானை முத்துமாரி

Read More

Flash Animated Photostream

April 18, 2009

உங்களின் வலைப்பூக்களில் சின்னதா சில படங்களினை அனிமேசன் பண்ணவிட்டால் எப்படியிருக்கும் வலைப்பூ இன்னும் அழகாக மாறும் இல்லையா..! இணையத்தில் சின்னத் தேடலின் பின்னர் இந்த அற்புதமான விடையம் கண்ணிற்பட்டது… Flickr அல்லது Picasa வில் உள்ள ஒரு album த்தின் RSS Feed தொடுப்பினைக் கொண்டு மிக நேர்த்தியான அழகான பட அனிமேசனை உருவாக்கிக்கொண்ணலாம். நீங்கள் விரும்பும் அளவினில் பின்புற நிறத்தினையும் transparent ஆக வைத்துக்கொள்ள முடியும் – ( by using Use background transparency

Read More

நெஞ்சோடு தீ மூண்டால்

April 15, 2009

மாசிப் பனியின் இதமான புதுக்காற்று முகத்தில் சில்லென தடவிச்செல்ல மெல்லக் கண் திறந்து ஜன்னல் திரையை விலக்கி எட்டிப் பார்த்தது நிலவு. கதிரவனின் பொற் கதிர்கள் அந்த நிலவின் பொன்முகத்தில் பட்டு பரவியதோ என்னமோ திடீர் என்று பொன் ஒளி அந்த அறையெங்கும் பரவிப் பிரகாசித்தது. எப்பொழுதும் பெளவியமாக இருக்கும் அந்த நிலவின் முகத்தில் இன்று ஏனோ ஓர் சோகம் மெல்ல இழையோடியிருந்தது. பனிக்காற்றின் இதத்தை மெல்ல உள்மூச்சின் முலம் வாங்கி தன் இருதய நாளங்களுக்கு அனுப்பிவிட்டு

Read More

புதுவருட வாழ்த்துக்கள்

April 13, 2009

தனது பாரம்பரிய வாழ் நிலங்களிலே சந்தோமாக பல வண்ணக் கனவுகளுடன் வாழ்ந்து, இன்று தமது வாழ் நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களையும் இழந்து எதிலிக்கப்பட்டு தமது ஜீவ நாடியினைக் காப்பாற்றுவதற்காக வாழ்வின் கடைசி வினாடி வரை போராடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளின் அனைத்து துயரங்களும் நீங்கி மீண்டும் அவர்களின் சுயமும் மகிழ்ச்சியும் அவர்களிடமே வந்து சேர பிறக்கின்ற விரோதி வருடம் வழிகோல இறைவனைப் பிரார்த்திப்போம்..! அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்…

Read More

தேர்தலில் என்ன செய்யப் போகின்றார்கள் தமிழக மக்கள்

April 10, 2009

20 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி நாள்தோறும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் மரணம் என்னும் அரக்கன் அவர்களை மிகக் கொடுமையாக விழுங்கி விடக்கூடும். மரணம் என்பது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் அம்மரணம் எவ்வாறு வருகின்றது என்பதுதான் அவர்களுக்கு மிகக் கொடுமையான விடையம். கண் முன்னே பெற்ற தாய் தந்தையர், பெற்ற பிள்ளைகள் உடல் சிதறி குற்றுயிராய்க் கிடக்கும் போது

Read More

குயிலுக்குக் கூவக் கற்றுக் கொடுத்தது யாரு?

April 5, 2009

நீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே

Read More

விகடனில் ஊஞ்சல்

April 2, 2009

இன்று காலை எனது மின்அஞ்சற் பெட்டியைத் திறந்து பார்த்தால் ஒரே சந்தோசமாக இருந்தது. அதுவும் இரட்டிப்புச் சந்தோசம். எனது வலைப்பதிவுகள் இரண்டு யுத் விகடனில் பிரசுரித்துள்ளதாக மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகள் வலைப்பூக்களில் நாள்தோறும் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றிற்கிடையில் எனது பதிவுகளைப் பிரசுரித்திருப்பதினை நினைக்கையில் மனது மிகவும் பூரிக்கின்றது. அண்மையில் பதிந்திருந்த அனிச்சம்பூ – குட் Blog பகுதியிலும் இதயத் திருடி அவள் – ஜீட் பகுதியிலும் பிரசுரித்திருந்தார்கள். அவற்றிற்கான பகுதிக்குச் செல்வதற்கு இங்கே சொடுக்குங்கள். இதயத்

Read More

Recent Posts

  • அழகிய விழியாள் தரிசனம் தேடி
  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்
  • ஊஞ்சல் iOS அலைபேசி இணைய உலாவிகளில்
  • ஒரு குட்டி ஏஞ்சல் – தெய்வத் திருமகள்
  • மனிதாபிமானம் பலியாகும் போது…

Copyright ஊஞ்சல் 2023 | Powered by WordPress