காலைப் பனியையும் ஊடறுத்து கண்டி நோக்கி மிகவேகமாக பறந்துகொண்டிருந்தது ஜக்குலர் கார். அதிலே நான்கு நண்பர்கள்.. வழக்கமான விறுவிறுப்பில் தம்மை மறந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேருமே பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்தவர்கள். ஒரு இயந்திரப் பொறியியலாளன் (மெக்கானிக்கல் என்யினியர்), ஒரு இலத்திரனியல் பொறியியலாளன் (எலக்ரோனிக்ஸ் என்யினியர்), ஒரு கெமிக்கல் என்யினியர் மற்றும் ஒரு கணணிப் பொறியியலாளன் (கொம்பியூட்டர் என்யினியர்) என அவர்களை அறிமுகப்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும். அவர்கள் சந்தோசமாக பேசிக்கொண்ருக்க அந்த ஜக்குலர் கார் கடுகண்ணாவையைத் தாண்டி மத்திய மலைநாட்டில் மேல் ஏறிக்கொண்டிருந்தது.
திடீர் என்று அந்த ஜக்குலர் கார் எந்தவிதமான தொழிற்பாடுகளும் இன்றி மேலும் மேலே அசைய மறுத்தது. அந்த நால்வருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. காரைவிட்டு வெளியே இறங்கி காரை சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். இயங்க மறுக்கும் காருக்கு என்ன செய்யலாம் என நால்வரும் தம்மாலானா முயற்சியை ஆரம்பித்தார்கள்.
மெக்கானிக்கல் என்யினியர் காரின் பாகங்கள் சூடாக இருப்பதனைப் பார்த்துவிட்டு தனது பொறியியல் திறமையை வெளிக்காட்ட நினைத்து உடனே இந்த காருக்கு ஒழுங்கான இயந்திரப்பகுதி இல்லப் போலயிருக்கு… அதனாலதான் இது இவ்வளவு சூடாகிறது.. நாம கொஞ்சம் காத்திருந்தா சூடு ஆறினதுக்கப்புறமா கார் இயங்கும் போலகிடக்குது என்றான்.
…இல்ல இல்ல அந்த சூடு அதில் இருக்கிற எலக்ரோனிக்ஸ் சேர்க்கிற் மூலமாகத்தான் வருது. என்னதான் சூடு ஆறினாலும் சிலசமயம் அதிலயிருக்கிற ஐசிகள் எரிஞ்சு போயிருந்தா இந்தக் காரை இயக்குறது ரொம்பக்கஸ்டமாப் போயிடும். நாம அந்த ஐசிகளை மாத்தினாத்தான் காரை இயக்க வைக்கமுடியும் என்று எலக்ரோனிக்ஸ் என்யினியரும் தனது புலமையை வெளிக்காட்டினான்.
உடனே கெமிக்கல் என்யினியர், நான் அப்பிடி நினைக்கவில்லை… கார் கருமையான புகையைக் கக்கியிருக்கு. அதாவது அதற்கு போதுமான ஒட்சிசன் எரியிறத்துக்கு கிடைக்கவில்லை போலக்கிடக்குது. காரின்ட எரிபொருள்ள சீரான கொம்பொசிஸனில நாம கொஞ்சம் ஒட்சிசனைச் சேர்த்தாப் போதும் நாம கிளம்பிடலாம் என்றான்.
இவற்றையெல்லமாம் கேட்டுக்கொண்டிருந்த நமது கொம்பியூட்டர் என்யினியர் தானும் தனது என்யினியரிங் புலமையைக் காட்ட என்ணி அதெல்லாம் தேவையில்ல, இது சிம்பிள் பிரச்சனை… நாம வின்டோவ ஒருக்கா மூடித்திறந்தா பிரச்சனை முடிந்தது என்னான் ….
Categories: குறும்புகள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
:-))))))))
அந்த ‘கம்யூட்டர் என்ஜினியர்’ நீங்கதானா? 🙂 🙂
ஆகா… பாத்திங்களா.. என்மேலேயே கதையைத் திருப்பப் பார்க்கிறீங்க… 🙂 🙂
//ஆகா… பாத்திங்களா.. என்மேலேயே கதையைத் திருப்பப் பார்க்கிறீங்க…
கதையை அல்ல… உங்களின் மூளைக்கு காரையே உங்களை நோக்கி திருப்பி விட்டிருந்தால் அது தானாகவே ஓடி இருக்கும்.
:):)
என்ன இப்படி ஒரு “கடி” கதையை எழுதியுள்ளீர்கள்?
🙂
அது சரி ஏன் தமில்ல எலுதினனீங்கோ,,,?
நீங்க சொன்னது மைக்ரோசாப்ட் விண்டோ வா இல்ல கார் விண்டோ வா?
அட்டகாச பகடி
@ஆதிரை
நன்றி… 🙂 என்ன செய்ய இது அவனுக்குத் தோணாமற் போட்டுதே… சிலசமயம் நீங்க அந்த இடத்தில இருந்திருந்தா… அப்பிடி நடந்திருக்கலாம் ஆதிரை …
@ முரளிகண்ணன்
நன்றி…
@ நசரேயன்
// நீங்க சொன்னது மைக்ரோசாப்ட் விண்டோ வா இல்ல கார் விண்டோ வா?
ஐயோடா… ஏன் இப்பிடி உங்களால மட்டும் இப்பிடி முடியுது… ரூம் போட்டு யோசிப்பிங்களோ…
LOL 😀
தப்பா சொல்லிட்டீங்க… shut , down பண்ணிருக்கனும்
:))
இவற்றையெல்லமாம் கேட்டுக்கொண்டிருந்த நமது கொம்பியூட்டர் என்யினியர் தானும் தனது என்யினியரிங் புலமையைக் காட்ட என்ணி அதெல்லாம் தேவையில்ல, இது சிம்பிள் பிரச்சனை… நாம வின்டோவ ஒருக்கா மூடித்திறந்தா பிரச்சனை முடிந்தது என்னான் ….//
நல்ல நக்கல் தான்? யக்கோ அப்ப நீங்கள் கொம்பியூட்டர் எஞ்சினியரா? இல்லை எலக்ரோனிக்????
ஹாஹாஹா
கதை எல்லாம் நல்லாதான் இருக்கு… எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்.. அது என்ன ஜக்குலர் கார்?
@ Kannan
எனக்கு ரொம்பப் பிடிச்ச கார் அது… அதுதான்.. சும்மா