அனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன்.
சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக இந்த அனிச்சம் பூவின் இயல்மை அழகாகக் கையாண்டுள்ளார். இணையத்தில் தேடிய போது பல சுவாரசியமான விடையங்கள் எனக்குக் கிடைத்தன. அவற்றை இந்த ஊஞ்சலில் ஒரேயிடத்தில் தருவதில் மிகமகிழ்ச்சி எனக்கு.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”. – எண் : 90 – விருந்தோம்பல் 9
பொருள்: முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம் பூ அதுபோல எமது முகத்தில் சிறுமாறுபாடும் நோக்கிய உடனே விருந்தினரின் உள்ளமும் வாடி விடுவிடும்.
“நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவன்” – எண் : 1111 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலரின் மென்மையைக் காட்டிலும் என் காதலி மென்மையானவள்.
“அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை” – எண் : 1115 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: காதலியின் நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக் கொண்டதுதான்.
“அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.” – எண் : 1120 – நலம் புனைந்துரைத்தல் 112
பொருள்: அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.
எப்படியிருக்கின்றது இந்தப்பூ. நான் பெற்றுக்கொண்ட விடையங்கள் மிகக்குறைவானவையே. இன்னும் ஏராளமான விடையங்கள் இருக்கலாம். நீங்கள் அறிந்திருந்தால் சற்று சொல்லுங்களேன்…!
Categories: எனது பார்வையில், படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
அனிச்சமலரைப் பார்வைக்குத் தந்ததில் நன்றி.
‘அனிச்ச மலரவள்
அப்பாவிப் பெண்ணவள்
அவளைத் துன்புறுத்துவதில்
உனக்கென்ன ஆனந்தம்’
என்ற கவிஞர் ஃபஹீமாஜஹானின் வரிகள் நினைவுக்கு வருகின்றன !
இதான் அனிச்ச மலரா???????
நம்ம கவிபேரரசு கூட இந்த பூவ பத்தி எழுதிருக்காரு…..
“அனிச்ச மலரழகே….
உன் அச்சுவெல்ல பேச்சழகே”
இந்த பெற கேட்டவுடனே எனக்கு இந்த வரி தான் தோனியது :))))))))))
@ எம்.ரிஷான் ஷெரீப்
உங்கள் வருகைக்கும் கவிஞர் ஃபஹீமாஜஹானின் கவிதையை ஞாபகத்திற்கு கொண்டுவந்ததற்கும் நன்றிகள்.. 🙂
அருமையான கவிதை..
@ Kamal
ஆம் அருமையான கவிபேரரசின் வரிகள்… நன்றி
வணக்கம் சுபா மிக்க மகிழ்ச்சி அனிச்ச மலரை இப்பொழுது தான் பார்க்கின்றேன்.பார்வைக்கு தந்ந்தில் மட்டற்ற மகிழ்ச்சி.
@முனைவர் சே.கல்பனா
நன்றி… 🙂
அனிச்சம்பூவை இன்று தான் முதலில் பார்க்கின்றேன்.
தமிழ் இலக்கிய எடுத்துக் காட்டும் நன்றாக இருந்தது.
@வேந்தன்
நன்றி.. 🙂
மிகவும் அழகான மலர். பார்த்ததில் மிக மகிழ்ச்சி.
இதே போல் அன்ன பறவையை கண்டிர்கள?
தமிழ் இலக்கியங்களின் மூலமே தெரிந்து கொண்ட மலரை தங்கள் வலைப்பூ மூலமாக படமாக பார்த்ததில் என் மனம் அனிச்சமாக மலர்ந்தது.மிக்க நன்றி.
மிக்க நன்றி ஏகாந்தன்..
we have seen this flower from child hood but we do not know this is anicham., thank you very much