அனிச்சம்பூ என்றவுடனே எல்லோர்க்கும் ஞாபகத்திற்கு வருவது அதனது மென்மையான இயல்புதான். எம் கைகளால் தீண்டினாலே வாடிவிடக்கூடிய மென்மையான பூ. ஏன் முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் இந்த அனிச்சம்பூ. மென்செம்மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களில் விரிந்திருக்கும் இந்தப் பூ பார்ப்பதற்கு தனியழகு. அந்த அழகான மலரின் சில படங்களை இங்கே தருகின்றேன். நீங்களும் பார்த்துத் இரசித்துக் கொள்ளுங்களேன். சரி விடையத்திற்கு வருவோம். தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் இந்த அனிச்சம்பூ கையாளப்பட்டு இருந்தாலும் திருவள்ளுவர் பல குறள்களில் அழகாக
இணையம் என்னும் தோட்டத்தில் பூத்திருக்கும் உங்கள் வலைப்பூக்களை மேலும் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமா.. ? அவ்வாறான ஒரு ஆர்வத்தில் எனது வலைப்பூவினை மேலும் அழகுற ஒழுங்கமைக்க எண்ணி சில வித்தியாசமான ஒழுங்கமைப்பு முறைகளை முயற்சித்துப் பார்த்தேன். அவற்றில் ஒன்றுதான் இந்த Popup image loading method (மன்னிக்கவும் இதற்குச் சரியான தமிழ்ப்பதம் தெரியவில்லை.) உங்கள் வலைப்பூக்களில் படங்களை இணைப்புக் கொடுக்கும் போது அவற்றின் மேலே வாசகர்கள் சொருகினால் அந்தப் படம் அதே பக்கத்தில் காணக்கூடியதாக இருக்கும். அதாவது
காலைப் பனியையும் ஊடறுத்து கண்டி நோக்கி மிகவேகமாக பறந்துகொண்டிருந்தது ஜக்குலர் கார். அதிலே நான்கு நண்பர்கள்.. வழக்கமான விறுவிறுப்பில் தம்மை மறந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான்கு பேருமே பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்தவர்கள். ஒரு இயந்திரப் பொறியியலாளன் (மெக்கானிக்கல் என்யினியர்), ஒரு இலத்திரனியல் பொறியியலாளன் (எலக்ரோனிக்ஸ் என்யினியர்), ஒரு கெமிக்கல் என்யினியர் மற்றும் ஒரு கணணிப் பொறியியலாளன் (கொம்பியூட்டர் என்யினியர்) என அவர்களை அறிமுகப்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும். அவர்கள் சந்தோசமாக பேசிக்கொண்ருக்க அந்த ஜக்குலர் கார்