இந்த வரிகள் மகாபாரதத்தில் மிகவும் பிரபல்யமானவை. மகாபாரத யுத்தம் மூழ்வதற்கு முன்னர் கார்மேக கண்ணன் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கிய சகாதேவனை நோக்கி வரப்போகின்ற பாரத யுத்தம் நிகழாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் எனக் கேட்ட போது சகாதேவன் கூறிய வரிகளே அவை.
கர்ணன் நாடாள வேண்டும். அவனை எப்பொழுதும் இகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் அர்ச்சுனனைக் கொல்ல வேண்டும். சூதாட்ட நிகழ்வின் போது பலபேர் முன்னிலையில் தன் தலைமுடியை அவிழ்த்து விட்டு சபதம் செய்த திரொபதியின் தலைமுடியை வெட்டி மொட்டையடித்து சிறை வைக்க வேண்டும். அத்துடன் இவ்வளவிற்கும் காரணமான உன்னை – கண்ணனையும் பிடித்துக் கட்டி வைப்பேனேயானால் தடுத்து விடலாம் மகாபாரத யுத்தத்தை எனக் கண்ணனிடம் சகாதேவன் கூறுகின்றான். எல்லாம் தெரிந்த எல்லாவற்றையும் மறைமுகமாக நடாத்திக் கொண்டிருந்த கண்ணன் மெல்ல நகைத்து விட்டு சகாதேவனிடம் மீண்டும் இதுவெல்லாம் நடப்பது சாத்தியமா எனக் கேட்டுச் சிரிக்கின்றான்.
ஆனால் அன்று நடந்து முடிந்த அந்த மகாபாரத்தின் இந்த உரையாடலுக்கும் இன்று ஈழத்தில் நடந்துகொண்டிருக்கும் நான்காம் கட்ட ஈழ யுத்ததின் பின்புலத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கும் நிறையவே ஒற்றுமை உண்டு. அந்த மகாபாரதம் என்னவோ இந்திய மண்ணில் நடந்தது. அதில் இறுதியில் தர்மம் தான் ஜெயித்தது. ஆனால் இன்றோ…
இன்று நடந்து கொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வரவேண்டுமானால் மேற்சொன்ன சகாதேவனின் வார்த்தைகள் தான் இங்கே நிஜமாகவேண்டும். நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் இதற்கான முக்கியமான காரணிகளை என்னால் விளக்கமாக விபரிக்க முடியாது. அது இப்பதிவு எழுதிய என்னைப் பாதிக்கும் என்பது சொல்லி விளங்கவைக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனாலும் ஒரு பாத்திரத்தை மட்டும் இங்கே ஒப்பிட முடியும். அன்று பாஞ்சாலிக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று சகாதேவன் கூறினானோ அத்தண்டனையை இன்று நடக்கும் யுத்தத்தை நிறுத்த அந்த இத்தாலிப் பெண்மணிக்குக் கொடுக்க வேண்டும்.
யாரை நாடாள வைக்க வேண்டும், யாரைப் பிடித்துக் கட்ட வேண்டும் என்பதனைப் பற்றிய விளக்கங்களையேல்லாம் உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.. 🙂
Categories: அரசியல், எனது பார்வையில், வன்னி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
பாவம் அந்த இத்தாலி பெண்.. இன்னும் இங்கு யுத்தத்தினை நிறுத்துவதற்கு.. நாங்கள் இந்தியாவினை நம்பிகொண்டிருந்தால் அதனை விட முட்டாள் தனமான சிந்தனை வேறு எதுவுமில்லை.. , ஈழத்திலும் இந்தியாவிலும் ஒரே நிலமைதான் இருக்கிறது.மக்கள் எல்லம் நீதியின் பக்கம் இருக்கிறர்கள் ஆனால் அதிகாரம் வைத்திருப்பவர்கள்.. அதை கண்டுக்கவில்லை.. இப்ப என்ன தான் ஆர்பாட்டங்கள் நடத்தினாலும்.. கொந்தழித்தாலும், தேர்தலின் போது வாக்களிப்பார்கள். அடுத்த முறையும் இரண்டில் ஒரு கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பதனை அவர்கள் நண்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு இபோது தேவை ஒரு சர்வதேச அங்கிகாரமே! அதனை முன்னேடுக்க சர்வதேச பலத்தினை திரட்ட ஒரு தலமை!
தாலியை பறிகொடுத்த இத்தாலிப் பெண்ணுக்கு புரிய வேண்டும், இப்போது இறப்பவரெல்லாம் இவர் தாலி அறுந்த பின் பிறந்த குழந்தைகள்….
தாலியை பறிகொடுத்த இத்தாலிப் பெண்ணுக்கு புரிய வேண்டும், அவரது தாலிக்கு சொந்தக்காரன் அறுத்த தாலிகள், அழித்த கன்னிகள் கண்ணக்கில் அடங்காதவை…
தாலியை பறிகொடுத்த இத்தாலிப் பெண் புரிய மறுத்தால்….
முத்துக்குமாரர்களின் மொழியை கூட புரிய மற்றுத்தால்…..
ஆறரைக் கோடி தமிழினம் அடங்கி இருக்காது….
// அதில் இறுதியில் தர்மம் தான் ஜெயித்தது. ஆனால் இன்றோ..
காலம் கலி காலம்…
இரக்கமானவர்களும்() வாத்துக்களும்() சந்தோசமா சங்கு ஊதுபவர்களும்() சூப்பிட்டு போடும் எலும்பு துண்டுகளுக்காக எங்களது மானத்தை விற்றபின் நடக்க என்ன இருக்கிறது.
இனி எல்லாத்துக்கும் ஆமாபோட்டுக்கொண்டு மூலையில் இருக்க வேண்டியதுதான்…
சுதந்திரம் கிடைக்கும் வரை
நன்றாகப் புரிந்தது. நீங்கள் அனுபவிக்கும் வேதனையையும் புரிந்து கொள்ள முடிகிறது.