வீரம் விளைந்து விளையாடும் எம்மண்ணில் இருந்து ஓர் குரல் இது..
அன்னைத் திருநாடே..
அழகொளிரும் எம் ஊரே..
மண்ணைக் குழைத்து எடுத்து
பாட்டிசைத்த தாய் வீடே..
தாயாள் முலை தந்தாள்
தமிழாள் மொழி தந்தாள்
பூவாய் மலர உந்தன் பொன்மடியில் இடம் தந்தாய்
கண்திறந்த நாள் முதலாய்
கையெடுத்து தூக்கி எம்மை உன் மடியில் தானே
உறங்குவதற்குப் பாய் விரித்தாய்..
Categories: அரசியல், எனது பார்வையில், படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
புயல் அடிக்கும் போதும் ஏகாந்தப்பெருவெளியில் ஒற்றைப் பனையாக தனித்து நிற்கின்றோம்.
காவிவரும் குரலில் சேர்ந்துவரும் சோகம் சொல்லும் கதைகள் ஏராளம். 🙁
இணைப்புக்கு நன்றி.
நன்றி ஆதிரை
“எமது விதியழிக்க எத்தனை பேர் வருவார்கள்..
வெற்றியோ தோல்லியோ அதுபற்றிக் கவலையே கிடையாது..
மண்ணைக் காக்க போரிட்டோம் என்பதே மகிமைக்குரியது… “
உறுதியான இந்தக் குரல் எதிர்கால வெற்றிக்கு ஒரு பட்டையம்…