நீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை.
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.
அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே. சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான் எனக்கேட்டதுமே நெஞ்செல்லாம் தீ கொண்டு சுடுவது போல் இருந்தது. யார் அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் ? எமக்காக தன் இன்னுயிரை ஈர்ந்த அந்த தியாகிக்கும் எமக்கும் என்ன சம்பந்தம். அவனது தியாதம் தான் என்னை இங்கே இழுத்து வந்து இப்பதிவை எழுதத் தூண்டிது.
வெறும் வாய்சாடலும், இரத்தக் கண்ணீர் வடிக்கும் எம் மக்களின் சொல்லொணாத் துயரங்களை தமது அரசியல் சுயநலத்திற்காய் மாறிமாறிப் பந்தாடத்துடிக்கும்,
இந்திய அரசியல் வாதிகள் முத்துக்குமாரினைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டும். ஒவ்வொரு மாதமும் இந்திய மத்திய அரசிற்கு காலக்கேடு விதிக்கின்றேன் என்று கூறி கவிதையெழுதி எமக்காக நீலக்கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த ஒரு கனவான் வைத்தியசாலையில் போய்ப் படுத்துக்கொண்டார்.
வெறுமனே வாய்ப்பேச்சால் மட்டும் எம்மக்களின் வேதனை தீரப்போவதில்லை. இழப்பதற்கு இனி தமது உயிரைத் தவிர அனைத்தையும் இழத்து எதிலிதளாக இன்று நிற்கும் வன்னி மக்களின் ஒரே எதிர்பார்ப்பு தம் குழந்தைகளாவது இம்மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே.
அவர்களின் சோகங்களை கவிதைகள் எழுதுவதனாலோ அல்லது அல்லது கடற்கரையில் மொனப் போரட்டம் நடாத்துவதாலோ வன்னி மக்களின் துயர்படிந்த வாழ்க்கை மாறப்போவதில்லை. மாறாக அம்மக்களின் சோகங்களை ஆற்ற கலைஞர் தீர்க்கமான முடிவினை மிகவிரைவில் எடுப்பாரேயானால் நாளைய வரலாறு கூறும்.
அதைவிடுத்து இல்லை இன்னும் ‘கொஞ்சம்‘ பொறுப்போம் என இருப்பாராயின் அது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போலவே அமையும். அவர் எடுக்கும் முடிவுகள் வன்னி மக்களின் கல்லறையின் மீதே அவை எழுதப்படும்.
முத்துக்குமாரின் இறுதி அறிக்கையை வாசிக்க இந்த இணைப்பை சொருகுங்கள்.
Categories: அரசியல், எனது பார்வையில், வன்னி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
அந்த இளைஞரை நினைக்கும் போது நெஞ்சடைக்கின்றது. ஏனோ தெரியவில்லை அவரின் தியாகம் வீணாக போகக் கூடாது. ஈழத்தமிழர் சார்பாக என் அஞ்சலி. ஈழப்போராட்டத்தைப் பற்றி மிகத் தெளிவான நோக்கம் உடையவர். கூரிய அறிவும். …. துக்கம் தொண்டையை அடைக்கின்றது. இவரைப் பார்த்தாவது எமக்குள் இருக்கும் துரோகிகள் அடிவருடிகள் திருந்தட்டும்.
அவர்கள் எதையுமே பிளான் பண்ணித்தான் செய்வார்களாம்.
வாழ்க பிளானிங், வாழ்க அரசியல், வாழ்க சுயநலம், வாழ்க பொதுநலம் …!!
உண்மைதான் நிமால்.. அவர்கள் அங்கே பிளானிங் பண்ணுவதில் தாமதமாகின்ற ஒவ்வொரு வினாடிக்கும் இங்கே ஒவ்வொரு தமிழன் பாதிப்புக்குள்ளாகின்றான் என்பதே மறுக்கமுடியாத உண்மை..
வருகைக்கும் உங்களின் உணர்வுபூர்மான கருத்துக்களுக்கும் நன்றிகள் வெண்காட்டான் …
அவரின் தியாகம் வீணாக போகக் கூடாது என்பதே எல்லோரினதும் அவா..
”தாமதமாகக் கிடைக்கின்ற நீதி அநீதியிலும் விடக் கொடியது”… எல்லாம் தெரிந்த கலைஞருக்கு இந்த உண்மை தெரியாதா என்ன..? இருந்தும் ஏன் இந்த மௌனம் என்றுதான் புரியவில்லை…
🙁
அன்புள்ள தங்கைக்கு,
ஈழப்பிரசைனையில் உங்கள் தாயக உறவுகளாகிய நாங்கள் படும் துயரத்தின் அதீத வெளிப்பாடே சகோதரன் முத்துகுமாரனின் தியாகம்..
அறிவு மேலோங்கிய அந்த சகோதரன் எம்மைப்போல் அன்றாடம் ஈழத்திலிருந்து வரும் செய்திகள் படிக்ககூட இயலாமல் , ஈழத்தில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிற எம் உறவுகளுடன் கலந்துவிட்டான்..
என்செய்ய.. தன் எதிர்கால தலைவனை சினிமாவிற்குள் தேடும் அவலம் தமிழகத்தில் மாறும் வரை … நம் இனம் உயிரோடு இருக்கவேண்டும் ….
நீங்களும் தயவு செய்து வெளிப்படையாக உங்கள் கருத்துகளை எழுதவேண்டாம் ..
என்னைபொறுத்தவரை என் உறவுகளை இனியும் இழக்கக்கூடாது ……
எம்மவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என நினைக்கும் போது மனம் கனக்கிறது!!!
தமிழகத்தின் குரல்கள் ஏதாவது மாற்றங்களை தரும் என்று நம்புவோம்.
முத்துக்களின் குமரனே…
உன் இன உணர்வுக்கு, எங்கள் மேல் கொண்ட பற்றுக்கு தலை வணங்கும் அதேவேளை இப்படிப்பட்ட செயல்கள் இனியும் வேண்டாம். இன்னொரு உயிருக்காக உன்னுயிரைக் கருக்காதே. உடலுக்கல்ல… உணர்வுகளுக்கு தீ மூட்டுங்கள். அத்தனையும் போதும்.
@ கே.ஆர்.பி.செந்தில்
// நீங்களும் தயவு செய்து வெளிப்படையாக உங்கள் கருத்துகளை எழுதவேண்டாம் ..
என்னைபொறுத்தவரை என் உறவுகளை இனியும் இழக்கக்கூடாது ……
வருகைக்கும் உங்களின் அன்புகலந்த பின்னூட்டலுக்கும் நன்றிகள்…
நாள்தோறும் அல்லற்படும் மக்களுக்காக வருத்தப் படுவதைத் தவிர வேறு ஏதும் உருப்படியாக எம்மால் இங்கிருக்கும் போது செய்ய முடியாது என்பதே கசப்பாக இருப்பினும் உண்மை. உணர்வுகளை விலக்கி வைத்துவிட்டு வெறுமனே ஜடமாக இங்கே பலபேர் வாழ்கின்றார்கள்…
அவர்களைப்போல் என்னாலும் கசப்புணர்வை சுமந்து கொண்டு போலிச்சிரிப்பு என்னும் முகத்திரையை முகத்தில் அணிய மிகக் கஸ்டமாக இருக்கின்றது..
என் உணர்வுகளைப் என் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குமா பயப்பட வேண்டும்….
@ கார்த்தி
// எம்மவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என நினைக்கும் போது மனம் கனக்கிறது!!!
உண்மைதான் கார்த்தி.. ;(
எனக்கு சிலசமயங்களில் இப்படியும் தோன்றுவதுண்டு..
மனிதத்தை மூளையின்றிப் படைத்திருக்கலாமே…
இதயமின்றிப் படைத்ததை விட…
தன் சகமனிதனைக் கொன்று தான் வாழத்துடிக்கும் மனிதத்திற்கு மூளையெதற்கு…
எம்மவரை குற்றம் சாட்டுவதை குறைப்போம். இந்நிலையில் எமது ஒற்றுமையே மிக மிகத் தேவையானது. எனினும் தூரோகிகளையும் நாம் அடையாளம் காணவேண்டிய நிலையிலுள்ளோம். விசம் தடவிய வார்த்தைகள் கூறும் இவர்கள் எப்படித்தான் இவ்வாறு மாறினார்களோ தெரியாது. ஆனால் தற்போது சென்னையில் தமிழக அரசு மிகப் பெரும் தூரோகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.
\\வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே,\\
உன்மைதான்…
\\மாறாக அம்மக்களின் சோகங்களை ஆற்ற கலைஞர் தீர்க்கமான முடிவினை மிகவிரைவில் எடுப்பாரேயானால் நாளைய வரலாறு கூறும்.
\\
இன்னும் கலைஞ்ஞரை நாம் நம்பிட்டு இருந்தால் அதைவிட முட்டால்தனமான விடையம் வேறு இல்லை
\\உங்க பதிவை தமிழ் மணத்தில் இனைதமாதிரி தெரியவில்லையே… இனைக்கமாமே..
கருத்துரையிட்ட பிறகுதான் கவனித்தேன் தமிழ்மணத்தில் இனைக்கப்பட்டு இருக்கிறது…
முத்துகுமாரனின் தியாகம் வீணாக போகக் கூடாது…….
@ Mark K Maity..
வருகைக்கும் உங்களின் காத்திரமான கருத்துக்களுக்கும் நன்றிகள்..
உண்மைதான் எம்மிடத்தே உள்ள கருத்து வேறுபாடுகளையும் மனக்கசப்புக்களையும் களைந்து ஒற்றுமையாக எழவேண்டிய காலம் இது.. !
@ கவின்..
// இன்னும் கலைஞ்ஞரை நாம் நம்பிட்டு இருந்தால் அதைவிட முட்டால்தனமான விடையம் வேறு இல்லை.
இருந்தும் சின்ன நப்பாசைதான்.. வேறு என்ன…
@ ஆதிரை…
உணர்வுகளுக்கு தீ மூட்டுங்கள் அதுவே…
எமது பலம்… 🙂
@ முகுந்தன்…
வருகைக்கு நன்றிகள்..
// முத்துகுமாரனின் தியாகம் வீணாக போகக் கூடாது…….
முத்துக்குமார் மட்டுமல்ல எண்ணற்ற ஈழத் தமிழர்களின் தியாகம் வீணாக போகக் கூடாது.!
உணர்வு பூர்வமான பதிவு……உண்மையில் அந்த தீரரின் தியாகம் வீணாக கூடாது….நன்றி…