நீண்ட நாட்களின் பின் எனது வலைப் பூக்களின் மீண்டும் கவனம் செலுத்த நேர்ந்தது இன்று தமிழ் நாட்டில் நடத்த சம்பவம். இறுதியாண்டு பரீட்சைகள் மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதனாலும் இறுதியாண்டு செயற்திட்டத்தின் இறுதித் திகதி அதைவிட வேகமாக முன்னால் வந்து நின்று பயமுறுத்துவதனாலும் நீண்ட காலமாக வலைப் பூக்களில் எதுவும் உருப்படியாக எழுதுவதில்லை. நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே
வீரம் விளைந்து விளையாடும் எம்மண்ணில் இருந்து ஓர் குரல் இது.. அன்னைத் திருநாடே.. அழகொளிரும் எம் ஊரே.. மண்ணைக் குழைத்து எடுத்து பாட்டிசைத்த தாய் வீடே.. தாயாள் முலை தந்தாள் தமிழாள் மொழி தந்தாள் பூவாய் மலர உந்தன் பொன்மடியில் இடம் தந்தாய் கண்திறந்த நாள் முதலாய் கையெடுத்து தூக்கி எம்மை உன் மடியில் தானே உறங்குவதற்குப் பாய் விரித்தாய்.. வன்னியிலிருந்து ஓர் குரல் …