மலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும். சுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.