இந்த நாகரீகமடைந்த உலகில் மனிதப் பேரவலம் மிக மோசமாக அதுவும் ஒரு அரசாங்கத்தினால் அரங்கேற்றப்படுவது இங்கேதான். அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு
நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம். அதுவும் வன்னி மக்களுக்கு என்றால் அரசாங்கத்தின் அதிவிசேடமான கவனிப்புக்கள் பல.
நாள்தோறும் தவறாது விமானக் குண்டுகள், ஆட்லரி செல்கள், பல்குழல் பீரங்கிகள் எனப் பல வகையான மரண தூதுவர்களை அனுப்பத் தவறுவதில்லை அரசு. இதுவும் போதாதென்று ஆழ ஊடுறுவும் தாக்குதல் அணிவேறு, என்னென்னுதான் அப்பாவி
மக்களை இனங்கண்டு தாக்குகிறார்களோ தெரியாது. இத்தனைக்கும் மத்தியில் தமது வாழ்க்கையின் விடைதேடி அகதிகளாக அலைகிறார்கள் அம்மக்கள்.
எத்தனை தடவைதான் அவர்கள் அகதிகளாக்கப்படுவார்களோ… ? என்ன தவறுசெய்தார்கள் அம் மக்கள் மட்டும். வாழ்க்கை அவர்களை இப்படி விரட்டுகின்றதே ஏன்? எனக்கு சில சமையங்களில் கடவுளின் மேலே கோபம் கோபமாக வருவதுண்டு, அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலையென்னு!.. கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் கிபிர் தலைக்கு மேலே எப்போது வருமோ என்ற பயம், நாள்தோறும் மல்ற்றிபறல் தாக்குதலால் அதிரும் சூழல், குண்டுகளால் நாசமாகும் சுவாசிக்கும் காற்று, இருக்க இடமுமின்றி ஒருவேளை கூட உண்ண உணவின்றி அவர்கள் படும் வேதனையை நினைத்தால் கடவுள் மேல் கோபம் வராம் இருப்பதற்கு நான் ஜடப்பொருளல்ல. இது போதாதென்று வருண பகவான் வேறு தன் பங்கிற்கு கோரதாண்டவம் ஆடுகின்றார் வன்னியில் இப்போது.கடவுளா அவர்கள். சிறிதுகூட இரக்கம் என்பதே கிடையாதா கடவுளிற்கு?
எம் வன்னிக் குழந்தைகளின் எதிர்கால நிலையென்ன? ஒரு சீரான அமைதியான சூழல் கல்விகற்பதற்குக் கிடையாது! எங்கும் பசி பட்டினி,தினமும் மரண ஓலம்.. இந்த நிலை அவர்களின் மனதில் வக்கிரத்தைத் தோற்றிவிக்காதா?? துள்ளித்திரிந்து கவலைமறந்து விளையாட வேண்டிய வயதில் ஒருவேளை சாப்பாட்டிற்காக பிறரிடம் கையேந்தி நிற்கின்றார்கள். எவ்வளவு வேதனையான விடையம். சிறுவயதில் பெறுகின்ற அனுபவமும் வளர்கின்ற சூழலும் தானே ஒரு சிறு பிள்ளையின் மனதில் மனிதத்தை வளர்க்கின்றது. இப்படியான சூழலில் வளரும் பிள்ளைகளின் எதிர்கால நிலையென்ன?? அவர்களிடம் மனிதத்தை எதிர்பார்க்க முடியுமா??
இவ்வாறு அவர்களின் வாழக்கையோடு தான் விளையாடும் கடவுளை என்னவென்னு கூறுவது??
விடைதேடும் அவர்களின் வாழ்க்கைக்கு என்று விடியல் வருமோ…??? அதுவும் அவனுக்குத் தான் வெளிச்சம்.!
Categories: அரசியல், எனது பார்வையில், பாதித்தவை, வன்னி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
மனம் கணமானது……:(
விரைவில் விடை கிடைக்க….விடியல் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!
வருகைக்கு நன்றி Divya :). எல்லோருடைய எதிர்பார்புக்களும் விரைவில் விடியல் பிறக்கவேண்டும் என்பதே..
//விடைதேடும் அவர்களின் வாழ்க்கைக்கு என்று விடியல் வருமோ…???//
வரவேண்டும் என்பதே எல்லோரதும் அவா…!
//அதுவும் அவனுக்குத் தான் வெளிச்சம்.!//
வெளிச்சம் இருளாவதாய் ஒரு உள்ளுணர்வு சொல்கிறது…!
//அதுவும் தன்னை ஒரு சனநாயக அரசு என நிமிசத்துக்கு நிமிசத்துக்கு கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு நாள்தோறும் அளித்துவரும் சனநாயகப் பரிசுகள் ஏராளம் ஏராளம்.//
எழுத்தில் அவதானம் தேவை… ஏனெனில் இது ஒரு ‘சனநாயக’ நாடு… 🙁
உண்மைதான் நிமல்.. அனைவரது அவாவும் விரைவில் விடியல் வரவேண்டும் என்பதே… போதும் இதுவரை தமிழன் அனுபவித்த இன்னல்கள். அடுத்த தலைமுறையாவது இன்னல்களற்ற வாழ்க்கையை வாழ வளி சமைக்கட்டும் இறைவன். :). இழப்புக்களை இனியும் இறைவன் தமிழன் மேல் திணிக்காதிருந்தாலே போதும்..
விடியல் வருமுன் விரைவில் பிடியல் வரும்… ஜாக்கிரதை..
நண்பரே இப்படிப் பயப்படுத்துகிறீரே… 🙁