எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் மனதில் ஓர் மூலையில் இருந்துகொண்டிருக்கின்றது… எனது பாடசாலைப் பருவத்தில் அதாவது நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியில் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் நடந்த நிகழ்வு அது.
யாழ்ப்பாணத்தில் உயர்தர வகுப்புப்படிக்கும் மாணவர்கள் தமது பாடசாலை இறுதிக் காலங்களில் உயர்தர மாணவர் ஒன்றுகூடல் (A/L Social) என்னும் நிகழ்ச்சியை நடாத்துவது உண்டு (வேறு மாவட்ட மாணவர்கள் அத்தகைய நிகழ்ச்சியினை நடாத்துகின்றார்களா என்பது எனக்குத் தெரியாது). அதை ஒரு பரம்பரைப் பழக்கம் என்று கூடச்சொல்லலாம்.
காலம் காலமாக பேணப்பட்டுவரும் ஒரு பாடசாலை நிகழ்ச்சி. பாடசாலை நாட்களின் இறுதிக் காலங்கள் என்றபடியால் அனைத்து மாணவர்களும் தவறாது சமூகமளிப்பார்கள். மேலும்
ஒரு விசேடம் என்னவென்றால் எமது அயல் பாடசாலை நண்பர் நண்பியர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முகமாக ஒவ்வோர் பாடசாலையில் இருந்தும் ஆகக்குறைந்தது இருவராவது கலந்து நிகழ்ச்சியைச் சிறப்பிப்பார்கள்.
பாடசாலை பருவத்து நிகழ்வுகள் என்றாலே அங்கே சந்தோசத்திற்கு குறைவிருக்காது, அதிலும் எல்லோரும் கூடிவிட்டால், சொல்லவே தேவையில்லலை எமது அடாவடித்தனங்களையும் குறும்புகளையும்.
அன்றும் அவ்வாறுதான் சந்தோசத்திற்கு குறையில்லாமல் நிகழ்ச்சி சென்றுகொண்டிருந்தது.
நிகழ்ச்சியின் போது முதலிலேயே நிரற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிநிரலின் படி நல்ல கலையார்வமுள்ள, பாத்திரம் ஏற்று நடிக்கத்தக்க மாணவர்களை மாத்திரம் தெரிவுசெய்து அவர்களுக்கு சில சுவாரசியமான சம்பவங்களைக் கொடுத்து அவர்களின் சிறப்பான நடிப்பாற்றலால் மாணவர்களை மேலும் உற்சாகமூட்டுவது வழமை. அன்றும் அவ்வாறுதான்.. எமது தோழமைப் பாடசாலை ஒன்றில் இருந்து அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பி ஒருவர் சம்பவம் ஒன்றை நடித்துக்காட்டுவதற்காகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அந்த நண்பிக்கு இசைத்துறையில் தனி ஈடுபாடு உண்டு. எனவே அவரிடம் ஒரு சங்கீத ஆசிரியர் போலவும் வேறு சில குசும்புத்த தன்மை நிறைந்து நண்பர்களைத் தெரிவுசெய்து அந்த ஆசிரியரின் சீடர்களாக நடித்துக் காட்டும் படியும் பணிக்கப்பட்டது.
நடிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் சாதாரணமானதுதான். ஆனாலும் அந்த நண்பர்கள் அந்தச் சந்தர்ப்தத்தினை என் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக மாற்றிவிட்டார்கள். பல விதமான (கோமாளிக் கூத்துக்களை) நடிப்பாற்றலை அவர்கள் அன்று வெளிப்படுத்தியிருந்தார்கள்.
சீடர்களாக நடித்த நண்பன் ஒருவன் அந்த சங்கீத ஆசிரியையைப் (நண்பியைப்) பார்த்து திடீர் எனக்கேட்டான் “Teacher teacher, மன்மத ராசா பாட்டு என்ன இராகம்” என்று.
எந்தவித தயக்கமும் இன்றி அவள் உடனடியாகப் பதில் சொன்னாள் “அது மத்தியமாவதி இராகம்” என்று.. சபையே அதிரும்படியான சிரிப்பு. ஆனால் எனக்கோ தலைவிறைத்துவிடும் போலிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் தான் மன்மத ராசா பாட்டு பிரபல்யமாக ஓடிக்கொண்டிருந்தது. எனவே அந்த மாணவன் அப்பாடலைப் பற்றிக்கேட்டது பெரியவிடையமில்லை. ஆனாலும்
அந்தக்கேள்விக்கான பதில் எனக்கு நிட்சையமாகத் தெரியும் மத்தியமாவதி இராகம் இல்லையென்னு. எனக்கு இராகங்களைப்பற்றி அவ்வளவு பரீட்சையம் இல்லையென்றாலும் மத்தியமாவதி இராகத்தின் சிறப்புக்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றேன். மத்தியமாவதி இராகம் மன்மத இராசா பாடலுக்கு துளிகூடப் பொருந்தாக இராகம். இந்த விடையம் நிட்சயமாக கர்நாடக சங்கீதத்தில் புலமை வாய்ந்த அந்த நண்பிக்கும் தெரிந்த ஒன்று. ஆனாலும் ஏன் அவ்வாறு முற்றிலும் எதிர்மறையான பதிலைச் சொல்லவேண்டும்?
சந்தர்பங்களை அறிவார்ந்த புார்வமாக நகச்சுவையாக மாற்றி மற்றவர்களை முட்டாள்களாக மாற்றுகின்ன தன்மை சில பேர்களுக்குத்தான் உண்டு. ஆனாலும் அன்று அந்த நண்பி கைக்கொண்ட அந்த நகைச்சுவையில் இருந்த பொறியினை விளங்காமல் சிரித்தார்கள் அனைவரும். ஆனால் எனக்கோ…. இன்றும் அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருடன் கதைப்பதென்றால் சிறு அவதானத்துடன் கதைக்கத் தோன்றுகின்றது. அவர்கள் என்னை முட்டாளாக்க இடமளிக்கக்கூடாது தானே..
ஆனால் எனக்கு இன்னமும் விளங்கவில்லை மன்மத ராசா பாட்டு என்ன இராகம் என்று.. அது ஒரே இராகத்தில் அமைவதற்கு சாத்தியத்கூறுகள் குறைவுதான் இருந்தாலும்.. அதில் என்ன என்ன இராகங்கள் இருக்கின்றதென்று அறிய விரும்புகின்றேன்.. உஙகளில் யாருக்காகது தெரியுமா நண்பர்களே… ?
Categories: எனது பார்வையில், குறும்புகள், பாடசாலை நாட்கள், பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
😉 நல்லாயிருக்கு
அப்பு,
அப்பிடியே …கட்டிப்புடி கட்டிப்புடிடா பாட்டும் என்ன? இராகம்
தாளமென்று விசாரிச்சு சொல்லி விடுங்கோ!
நன்றி கானா பிரபா அண்ணா, அதுசரி மன்மத ராசா பாட்டு என்ன இராகம்? இன்னமும் என் கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லையே… 🙁
@ யோகன் பாரிஸ்(Johan-Paris) :
ஆகா… முதலில் மன்மத ராசா பாட்டு என்ன இராகம் என்று அறிவோம். பின்னர் மற்றவற்றைப் பார்ப்போம் .. 🙂 🙂
//எனக்கு இராகங்களைப்பற்றி அவ்வளவு பரீட்சையம் இல்லையென்றாலும் மத்தியமாவதி இராகத்தின் சிறப்புக்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றேன்.//
ஒரு மாதிரி தன்ர சங்கீத புலமையை மறைமுகமா சொல்லீட்டார்…
////எனக்கு இராகங்களைப்பற்றி அவ்வளவு பரீட்சையம் இல்லையென்றாலும் மத்தியமாவதி இராகத்தின் சிறப்புக்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றேன்.//
ஒரு மாதிரி தன்ர சங்கீத புலமையை மறைமுகமா சொல்லீட்டார்…//
ஓ.. இதற்கு இப்படி வேறு அர்த்தம் வருமோ..? அதுசரி என் கேள்விக்கென்ன பதில்.. நிமல்?
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
இப்பக்கத்தில் உள்ள கோட்டோவியம் மிக உயிர்ப்பாக உள்ளது. வரைந்தவருக்குப் பாராட்டுகள்.
நிற்க!!
அட மன்மத ராஜா – ராகத்தைச் சொல்லவல்ல; ஓர் இசையறிஞர் இவ் வலைத்தளத்தில் இல்லையா?
என்னே கொடுமை….
@யோகன் பாரிஸ்(Johan-Paris)
//இப்பக்கத்தில் உள்ள கோட்டோவியம் மிக உயிர்ப்பாக உள்ளது. வரைந்தவருக்குப் பாராட்டுகள். நிற்க!!
உண்மைதான்.. என்மனத்தில் உள்ள அந்த உருவத்திற்கு ஏற்றாற் போல் படங்களை இணைபத்திற் தேடியபோது அகப்பட்ட உயிர்ப்பான படங்களே இவை.. வரைந்தவருக்கு கோடி நன்றிகள்.. 🙂
என்ன கொடுமை.. மன்மத ராஜா பாடல் ராகத்தைச் சொல்லவல்ல ஓர் இசையறிஞர் இவ் வலைத்தளத்தில் இல்லையா… 🙁 யாருமே இல்லையாப்பா.. ?
அந்த நண்பியிடமே கேட்டுவிட வேண்டியதுதான்… 🙂