இன்று காலை கண்விழித்ததே எனது கைத்தொலைபேயின் சிணுங்கலைக் கேட்டுத்தான். தித்திக்கும் தீபாவளியில் காலைக்கதிரவன் உதிக்கும் முன்பே என்னை எழுப்பி தீபாவளி வாழ்த்துக்களைப் பரிமாறியிருந்தான் என் உயிர் நண்பன் ஒருவன். காலை நேரத்தில் எஸ்.எம்.எஸ் வாழ்த்து வருவது இயல்புதான். ஆனால் அவனது வாழ்த்துச் செய்தி வெறும் உதட்டளவிலான வாழ்தாக இல்லாமல் மனம் நிறைந்த அன்புடன் அனுப்பியிருந்தான். உண்மைதானே வாழ்த்துக்களைப் பரிமாறுவதில் வெறும் உதட்டளவு வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாது எமது காத்திரமான அன்பையும் கலந்து குழைத்து பரிமாறினால் மற்றவர்களின் உள்ளத்தினை இலகுவாக வெல்லமுடியும்தானே.
மேலும் அவன் துாய தமிழில் ஆங்கிலக் கலப்பின்றி வாழ்த்துச் செய்தியை அமைத்திருந்தான். தமிழின் சிறப்பே இதுதானே. இதனால்தானே பாரதி சொன்னான் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று. சற்று எண்ணிப் பாருங்கள் எம்மில் எத்தனை பேர் இன்று ஆங்கிலக் கலப்பின்றி தனித் தமிழில் வாழ்த்துக்களைப் பரிமாறினோம் என்று!…
ஆங்கிலக் கலப்பின்றி துாய தமிழில் வாழ்த்துக்களைப் பரிமாறிப் பாருங்கள், அதன் பின் நீங்களே உணர்வீர்கள் தமிழின் சிறப்பை… தமிழனே தமிழைப் பயன்படுத்தாவிட்டால் வேறுயார் தமிழைப் பயன்படுத்தப் போகிறார்கள்…
Categories: எனது பார்வையில், பாதித்தவை, வாழ்த்துக்கள்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நீங்க சொல்லுறதும் சரி மாதிரி தான் கிடக்கு…!
தமிழுக்கும் அழுதென்றுபெயர்.. உண்மைதான் சுபானு.