PodCast என பல ஆங்கில இணையத் தளங்களில் பிரபல்யம் பெற்று விளங்கும் ஒலித் தொகுப்புக்களில் பல தரப்பட்ட விடையதானங்களை அலசியிருக்கின்றார்கள். அனேகமாக அவை ஒன்றிற்கு மேற்பட்ட நபர்களின் மிக நேர்த்தியான திட்டமிடலுன் தொழில்நுட்பம் சார்ந்த ஒருங்கிணைந்த ஒரு மணி நேரத்திற்கும் குறையாத உரையாடலாக அமைவதுண்டு.
ஆனால் தமிழில் இவ்வாறான முயற்சிகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் நிமல் மற்றும் ரமணன் இணைந்து வலைப் பதிவுலகில் புதிய முயற்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். நேர்த்தியான திட்டமிடலுடன் ஒலியோடை என்னும் புதிய வலைப்பதிவு ஒன்றில் தமது கன்னி podcast இனை பதிந்துள்ளார்கள். தமது கன்னி முயற்சியில் சிறந்த ஒலித் தரத்துடன் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் தொழிற்பாடுகளை விரிவாக்க உதவும் நீட்சிகள் பற்றிய சிறிய அறிமுகத்தினைத் தந்திருக்கின்றார்கள். மிகவும் இலகுவான தமிழ் உரைநடைப் பாணியில் 15 நிமிடங்களுக்கு உரையாடியிருக்கின்றார்கள்.
இவர்களின் இம் முயற்சி வெற்றிபெற்று தமிழில் பல podcastகள் மேலும் வர வேண்டும் என்பதே என் அவா.
Categories: எனது பார்வையில், படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நன்றி சயந்தன்.
உங்கள் பதிவிலும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
வணக்கம் சயந்தன்..
இனி உங்கள் வலைப்பதிவிலும் அதிகம் ஆக்கங்கள் இடம்பெறவேண்டுமென எதிர்பார்க்கிறோம்..