அணுவைப் பிளக்கலாம் என எண்ணிய மனிதன் விஞ்ஞானத்தின் துணையுடன் நிரூபித்த சாட்சிகள் இன்னும் ஹிரோசிமா நாகசாகியில் வாழ்கின்றார்கள். ஆனால் என்னவோ விஞ்ஞானத்தின் பார்வையில் இத்தகைய சாட்சியக் காட்சிகள் புலப்படுவதில்லை. விஞ்ஞானம் எப்போதும் தன்நிலை முன்னேற்றத்தையே முன்னிலைப் படுத்தி நிற்கின்றது.
அந்த அணுப்பிளவிலும் பார்க்க பயங்கரமான பல ஆராச்சிகள் இன்று CERN இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று Antimatters பற்றிய ஆராய்ச்சி.
அது சரி Antimatters என்றால் என்ன?
Antimatters பற்றிய ஆராச்சியில் உள்ள பயங்கரம் தான் என்ன?
இந்தப் பிரபஞ்சத்தில் எந்த ஒரு விடையத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் எதிர்த்தன்மை தன்மை வாய்ந்தவை. இரவிற்குப் பகலும், எதிர் முனைக்கு (-ve) நேர் முனையும் (+ve) எனப் பல உதாரணங்களை முன்வைக்கலாம். எனவே சடத்திற்கும் எதிர்த்தன்மை வாய்ந்த எதிர்சடம் (Antimatters ) ஒன்று இருக்கவேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் வாதம். ஆனால் அந்த எதிர்சடத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது தான் விஞ்ஞானிகளின் ஆராச்சியாக இருந்தது. ஆனால் antihydrogen என்னும் முதலாவது எதிர்சடத்தினை விஞ்ஞானிகள் எப்போதோ உருவாக்குவதில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
இலத்திரனுக்கு எதிர்த்தன்மை வாய்ந்த பொசிற்றோனையும் புரோத்திரனுக்கு எதிரான எதிர்புரோத்தோனையும் (antiproton) சேர்த்து antihydrogenஐ உருவாக்கியுள்ளார்கள். ஆனால் இந்த அன்ரிஹைற்ரயனை ஆய்வு கூடத்தினில் பாதுகாப்பது மிகக்கடினமான காரியம். ஏனெனில் அன்ரிமற்றர்கள் சாதாரணமாக மற்றர்களுடன் சேர்ந்து பஸ்பமாகிவிடும். அதாவது ஒரு சடம் இல்லாமல் அழிக்கப்படுகின்றது.
இதுவே இந்த அன்ரிமற்றர்களில் உள்ள பயங்கரமான ஆபத்து. அன்ரிமற்றர்கள் பல மடங்கில் உருவாக்கப்பட்டால் அவை இப் புவியில் உள்ள சடத்தை பஸ்பமாக்கி விடக்கூடும். அதாவது இப் புவியின் திணிவு குறைவடைந்து புவியின் சடத்துவத் திருப்பம் மாற்றமடையும். இதனால் புவியின் ஒழுக்கு சூரியனை நோக்கிய இயக்கமாக மாற்றமடையும். அவ்வியக்கம் புவியின் அழிவின் ஆரம்பமாக அமைந்துவிடும்.
ஆனால் இந்த விடையங்கள் விஞ்ஞானிகள் அறிந்திராதது அல்ல. ஆனால் அவர்களின் நோக்கம் புதுப்புது கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிப்பதும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தையே அவர்கள் முன்னிலைப் படுத்தி நிற்கின்றார்கள். அவர்கள் அன்ரிமற்றர்களைப் பாதுகாப்பதற்கான முறையொன்றையும் பிரேரிக்கலாம். ஆனால் இந்த அன்ரிமற்றர்கள் குறுகிய நோக்கம் கொண்ட மனித மிருகங்களின் கைகளில் கிடைக்கப் பெற்றால்…. நாளைய மனித சமுதாயம் அழிவைச் சந்திப்பதைத் தவிர்ப்பது இயலாத காரியம்.
Categories: அறிவியல்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
விளங்கிற மாதிரி இருக்கு, ஆனா விளக்கேல்ல போலவும் இருக்கு…!
🙂
Antimatter? is it just like the complement for matter??
நிமல் நான் இங்கு அடிப்படையான சில அம்சங்களையே தொட்டுச்சென்றுள்ளேன். இயற்பியலில் எனக்குள்ள ஆர்வத்தினாலேயே இப்பதிவை இட்டுள்ளேன். உங்களுக்கும் ஆர்வமிருப்பின் CERN ஆய்வுமையத்தில் நடக்கும் ஆராச்சிகள் பற்றி கூகுளில் சிறிது தேடிப்பாருங்கள். 🙂 🙂
Animater?, concept sounds quite strange!