சிவனொளிபாத மலை (Sympole of Sri Lanka). இலங்கையின் இரண்டாவது பெரிய உயரமான மலை, காண்பவர் கண்களைக் கவரும் எழில்மிகு வண்ணச்சோலைகளும் வன விலங்குகளும் நிறைந்து காணப்படும் ஓர் இயற்கை வனப்பிரதேசம்.
எப்பொழுதும் சில்லென்று வீசும் பனிக்காற்றும், மலைமுகட்டை வருடிச் செல்லும் முகிற் கூட்டமும் இயற்கை அன்னையின் கொடையளில் இதுவும் ஒன்று. பருவமற்கையவள் தன் நீண்ட கூந்தலை காற்றிலாட விரித்து விட்டாளோ என எண்ணத் தோற்றத்தை உருவாக்கும் பனிக்காற்றிற்கு சிலுசிலுத்தாடும் காட்டுக்கொடிகளும் அவள் கொண்டையிலே இத்தனை hairpinகளா என வியக்கவைக்கும் hairpin வளைவுகளும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். இப் பிரதேசத்திற்கு கடந்த ஆண்டில் எனது நண்பர்களுடன் சென்றிருந்த சுற்றுலா என்றெக்கும் மனதைவிட்டகலாத ஓர் இனிய அனுபவம்……
2007.12.29 மாலை 8.30 மணியளவில் ஹற்றன் நகரில் எமது இரவு உணவை முடித்துக் கொண்டு சிவனொலிபாத மலை அடிவாரக்கிராமான ‘நல்லதண்ணி’ கிராமத்தை நோக்கி எமது பயணம் ஆரம்பமானது.
சரியாக இரண்டு மணி நேர பேருந்துப் பயணத்தின் பின் நாம் நல்லதண்ணியை அடைந்ததோம். செல்லும் வழியில் மஸ்கெலிய நகரில் இராணுவக் காவலரணில் இறங்கி ஏறிச் செல்லவும் நேர்ந்தது. எமது 4ம் இலக்க தேசிய அடையாள அட்டை பார்த்ததும் ஒருவிதமான விசேட கவனிப்பும் இருக்கத்தான் செய்தது. நாட்டில் நிலவும் இறுக்கமான சூழ்நிலை சிவநொலிபாத மலையையும் விட்டுவைக்கவில்லை. அங்கும் அதன் தாக்கம் இருக்கின்றது என்பது எமக்கு தெரிந்தது…
இவ்வாறாக நல்லதண்ணி கிராமத்தை இரவு 10 மணியளவில் அடைந்தபோது சிவநொலிபாத மலை உச்சிக்குச் செல்லும் பாதையோரங்களில் இரவில் வழிகாட்ட மின்னும் விளக்குகள் எம்மை வரவேற்றன…. பாம்பு போன்று வளைந்து வளைந்து சென்ற அந்த பாதையைப் பார்த்ததும் அட இவ்வளவு தூரம் தானா என எல்லோரும் எண்ணிவிட்டோம்…
ஓர் இளம் சூடான தேனீரினை இருபது ரூபாவிற்கு வாங்கிப் பருகிவிட்டு எமது இலக்கை நோக்கிப் புறப்பட்டோம். முதலில் எம்மை எதிர்கொண்டு வரவேற்றது புத்த பெருமானின் நின்ற நிலைப் புத்தசிலை ஒன்றே.. தலையில் தீச்சுடர் அலங்காரத்துடன் காணப்படும் அவ்வடிவத்தை வணங்கிவிட்டு அதற்கப்பால் சென்று மகரதோறண வாசலை அடைந்தோம்…
மகரதோறண வாசலின் ஒருமருங்கில் புத்தரும் இன்னொரு புறத்தில் சமனும்(பெளத்தர்களின் இன்னொரு கடவுள்) எங்களை வரவேற்றார்கள். அங்கே ஒரு பெளத்த பிக்கு நின்றுகொண்டு மலையில் ஏறும் பக்தர்களுக்கெல்லாம் கைகளில் பிரித் நூல் கட்டிக்கொண்டிருந்தார். அவர்பக்கம் சென்றால் எங்கே எங்களுக்கும் கையில் பிரித் நூலைக் கட்டிவிடுவாரோ என நினைத்து அவர்பக்கம் செல்லாமல் விலகிச்சென்று எமது பயணத்தை தொடர்ந்தோம்…
அடுத்ததாக ஜப்பான் நாட்டிரால் இலங்கை மக்களுக்காக கலாச்சாரபூர்வமாகக் கட்டிக்கொடுக்கப்பட்ட பெளத்த விகாரையை அடைந்தோம்.
பார்க்கும் இடமெல்லாம் புத்த விகாரைகளும் பெளத்த பிக்குகளுமாக முற்றிலும் பெளத்த மயப்படுத்தப்பட்டு இருந்தது மூன்று மதத்தினருக்கும் பொதுவான ஒரு புனிதப் பிரதேசம்…
🙁
…….. மிதமுள்ள பல சுவாரசியமான சம்பவங்ளை எனது அடுத்த பதிப்பில் தருகின்றேன்.
Categories: எனது பார்வையில், சுற்றுலா
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
நல்ல பதிவு…
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்…!
//எமது 4ம் இலக்க தேசிய அடையாள அட்டை பார்த்ததும் ஒருவிதமான விசேட கவனிப்பும் இருக்கத்தான் செய்தது.//
🙁
// பார்க்கும் இடமெல்லாம் புத்த விகாரைகளும் பெளத்த பிக்குகளுமாக முற்றிலும் பெளத்த மயப்படுத்தப்பட்டு இருந்தது மூன்று மதத்தினருக்கும் பொதுவான ஒரு புனிதப் பிரதேசம்… 🙁 //
🙁
இங்கிருக்கும் ஈழத்து நண்பர்களின் சிவனொலி பாத மலை தரிசன அனுபவங்களை கேட்டதுண்டு !
இங்குதான் இன்றுதான் புகைப்படங்களை காண்கிறேன்!
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மேலும் பல தகவல்களை
நன்றி!
புகைப்படம் அருமையாக இருக்கிறது. நல்லதொரு பதிவு.
ஆனால் சிறியதொரு திருத்தம்; சிவனொளிபாத மலையை “சிவநொலிபாத” என்று எழுதி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்!!!
நன்றி நிமல்…
// பார்க்கும் இடமெல்லாம் புத்த விகாரைகளும் பெளத்த பிக்குகளுமாக முற்றிலும் பெளத்த மயப்படுத்தப்பட்டு இருந்தது மூன்று மதத்தினருக்கும் பொதுவான ஒரு புனிதப் பிரதேசம்… 🙁 //
அரசின் பேரினவாதப்போக்கு மதம் சார்ந்த அமைப்புக்களுக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுப்பதிற்கில்லை… 🙁
வருகைக்கு நன்றி ஆயில்யன் 🙂
வேலைப்பளு காரணமாக எனது அடுத்த பதிப்பை உடனடியாக எழுத முடியாதுள்ளது. மிக விரைவில் அடுத்த பதிப்பை இடவுள்ளேன்…
வருகைக்கு நன்றி Babujee 🙂