மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம் மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட.. மலர்த்தோட்டம் எதிர் பார்க்கும் இளவேனிற் காலம் பாவையும் ஒரு பூவினம்.. அதை நான் சொல்லவோ…. என்ற அந்தப் பாடல்தான் சிவனொலிபாத மலை பற்றி நினைக்கும் போது என் மனதில் நிழலாடுகின்றது. மார்கழி மாதப் பின்னிரவு நேரத்தில் மலைப்பாதையின் ஓரங்களில் பளிச்சிடும் வீதி விளக்குகள் எம்மை வழிகாட்டி அழைத்துச் சென்றன. வானத்திலிருந்து பூமிக்கு இறங்கும் மின்னல்க் கொடியினைப் போன்று படர்ந்து நீண்டிருந்தது, அந்த நள்ளிரவில் மலைப்பாதை விளக்கு வெளிச்சம்.
சிவனொளிபாத மலை (Sympole of Sri Lanka). இலங்கையின் இரண்டாவது பெரிய உயரமான மலை, காண்பவர் கண்களைக் கவரும் எழில்மிகு வண்ணச்சோலைகளும் வன விலங்குகளும் நிறைந்து காணப்படும் ஓர் இயற்கை வனப்பிரதேசம். எப்பொழுதும் சில்லென்று வீசும் பனிக்காற்றும், மலைமுகட்டை வருடிச் செல்லும் முகிற் கூட்டமும் இயற்கை அன்னையின் கொடையளில் இதுவும் ஒன்று. பருவமற்கையவள் தன் நீண்ட கூந்தலை காற்றிலாட விரித்து விட்டாளோ என எண்ணத் தோற்றத்தை உருவாக்கும் பனிக்காற்றிற்கு சிலுசிலுத்தாடும் காட்டுக்கொடிகளும் அவள் கொண்டையிலே இத்தனை hairpinகளா