நாவல்கள் வாசிப்பதிலே அவ்வளவு ஆர்வமில்லாத நான் அவரது கணேஷ் வஸந்த் நாவலைப் படித்ததில் இருந்துதான் அவர்மீது ஆர்வம் கொண்டேன். அதன் பின்பு அவரது நூல்கள் பலவற்றைத் தேடித்தேடி படித்து வந்துள்ளேன். அவரின் எழுத்துக்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு…
அவ்வளவு தூரத்திற்கு என்ன கவர்ந்த நபர் இன்று இல்லை என்று நினைக்கும் பொழுது… மனதை சிறிது இறுக்கவே செய்கின்றது.. மனதின் ஓரத்தில் ஒரு சொட்டுக்கண்ணீர் வழிந்தோடுகிறது… என் மனதைத் தேற்றிக்கொள்ள அவரது படைப்புக்களையே நாடவேண்டியுள்ளது. அவரது படைப்புகளை நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது… அப்போதெல்லாம் அவர் இருப்பார் என்னோடு…..
Nobody dies; they live in memories. How True ?
அவரின் மேலுலக வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் …….
Categories: பாதித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
உன் விஞ்ஞானப்பார்வையில் வெளிச்சம் பெற்றன சில முளைகள்!!
–கவிஞர் தாமரை–
அருமையான வரிகள்..