சேர்பியாவின் ஆட்சி அதிகாரத்திற்கு இதுவரைகாலமும் உட்பட்டிருந்த கொசோவா கடந்த ஞாயிற்றுக் கிழமை தனி நாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்டு சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்றுள்ளது. இந்த தனி நாட்டுக்கான பிரகடனமானது இலங்கையில் பல எதிர்ப்பலைகளை தோற்றிவித்துள்ளது. இலங்கையின் இத்தகைய எதிர்ப்புக்கு காரணத்தைப் பார்ப்பதற்கு முன் இந்த கொசோவாவின் வரலாற்றைக் கொஞ்சம் அலசிப் பார்ப்பது நல்லது.
யுக்கொஸ்லாவியா ( Yugoslavia )
யுக்கொஸ்லாவியா ( Yugoslavia ) என்ற குடியரசு நாடானது 1945 ஆம் ஆண்டு ஆறு தனித் தனிக் குடியரசுகளாகப் பிரிந்து சென்றது. யுக்கொஸ்லாவியா என்ற பெரும் குடியரசு சேர்பியா, மொன்ரெனெர்கோ, ஸ்லோவெனியா, க்குரொரிய, பொஸ்னியா, மசிடோனியா ( Serbia, Montenegro, Slovenia, Croatia, Bosnia-Hercegovina and Macedonia ) என்ற யூகர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் ஆறு நாடுகளாகித் தமக்கென்று தனித் தனியான சட்டதிட்டங்களுன் 1945 முதல் இயங்கிவந்தன. ஆனாலும் சேர்பியா மற்றும் மொன்ரெனெர்கோவே தனிநாட்டுப்பிரகடனத்தின் பின் ஓரளவிற்கு அமைதியான நாடுகளாக இருந்து வந்தன. ஏனைய நாடுகளில் முக்கியமாக Croatia விற்கும் Bosnia விற்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தினால் இரு நாடுகளிலும் பெரும் உயிர் மற்றும் உடமைச் சேதமும் ஏற்பட்டன.
1992 ம் ஆண்டு Serbia மற்றும் Montenegro என்பன இணைந்து யுக்கொஸ்லாவிய சோசலிசக் குடியரசினைத் ( Federal Republic of Yugoslavia ) தோற்றிவித்தன. இந்த யுக்கொஸ்லாவிய சோசலிசக் குடியரசானது 2003 வரை நிலைபெற்றிருந்தது.
கொசோவா ( Kosovo )
1998 ஆம் ஆண்டு சேர்பியாவி்ல் அல்பேனியர்கள் செறிந்து வாமும் ஒரு சுயாட்சிமிக்க மாகாணமான கொசோவாவில் கொசோவா விடுதலைப் போராட்ட வீரர்கள் சேர்பியாவின் இன அடக்குமுறைச் சட்டதிட்டற்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்குப் போராடத் தொடங்கினர்.
1999 ஆம் ஆண்டு நேட்டோ விமானப் படையினர் கொசோவா மற்றும் சைபீரியாவி்ல் விமானக்குண்டு வீச்சை மேற்கொண்டனர். இதற்குப் பின்னர் சைபீரியா இராணுவம் பின்வாங்கத் தொடங்கியதும் ஐநா அப்பிரதேசத்தின் நிர்வாகத்தை தான் ஏற்றுக்கொண்டது. கொசோவா சர்வதேசத்தால் நிர்வகிக்கப்பட்ட போதும் அது சட்டபூர்வமாக சைபீரியாவின் பகுதியாகவே இருந்தது.
2007 பெப்ரவரியில் ஐநாவின் பிரதிநிதியான Martti Ahtisaari இனால் கொசோவின் சுதந்திரத்திற்கான பரிந்துரையைச் சமர்ப்பித்ததும் அப்பரிந்துரை உடனடியாக கொசோவா அல்பேனியரால் வரவேற்கப்பட்டது. ஆனாலும் சேர்பியாவினாலும் அதன் நேச நாடான ரஸ்யாவாலும் அப்பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆண்டில் சேர்பியாவிற்கும் கொசோவாவிற்கும் இடையில் பலகட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது.
இறுதியாக கொசோவா தனது தனிநாட்டுப்பிரகடனத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டுள்ளது.
இப்பிரகடனமானது ஐநாவினால் அங்கீகரிக்கப்பட்டு தனிநாட்டு அந்தஸ்து வழங்கப்படும் பட்சத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக்கும் ஐநாவினால் அங்கீகரிக்கப்பட்டு தனிநாட்டு அந்தஸ்து வழங்கப்படலாம் என்கின்ற பயத்திலேயே இலங்கை அரசு இவ்வாறான கண்டன அறிக்கைகளை வெளியிடுகின்றது….
Categories: அரசியல், எனது பார்வையில்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
Leave a Reply