மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தினசரிப் பணிக்காகச் செலவிடும் நேரத்தை வேண்டுமென்றெ அதிகப்படுத்திச் சொல்வது வழக்கம். அதாவது, ஒரு புபொகிராமை எழுதி முடிக்கக் குத்துமதிப்பாக 10 மணித்தியாலம் ஆனது என்றால், சட்டென்ரு 15 மணி என்று கூட்டிச் சொல்லிவிடுவார்கள் நம்ம ஆட்கள். அப்போதுதான் புரயக்ற் மேலாளரிடம் இருந்து நல்ல பெயரும், ‘கஷ்டப்பட்டு உழைக்கிற ஆள்’ என்ற அபிப்பிராயமும் கிடைக்கும். சிலவேளைகளில் இந்த விசையம் மேலாளருக்கு தெரியாமல் இருக்குமா? இருந்தாலம் அவர் அதைக் கண்டுகொள்ள மாட்டார். ஏனனெனில், நிறையப் பேர் இப்படிப் பலமணி நேரம் வேலை செய்தார்கள் என்று கணக்குக் காட்டினால்த் தான் கஸ்டமரிடம் அதிகமாக வசூலிக்க முடியும்.
சாஃப்டவேயார் துறையில் இதைப் பெரிய ஏமாற்றுத்தனம் என்று சொல்ல முடியாது. இப்படி ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் கூட்டிச் சொன்னால் பெரிதாக ஏதும் பிரச்சனை வந்துவிடாது.
ஆனால் இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இன்னும் புதிய ஏமாற்று வேலைகளும் தலைகாட்டத் தொடங்கி விட்டன.
உதாரணமாக, ஒரு புரஸக்ட் புறூப்பை (Project Group) எடுத்துக் கொண்டோமென்றால் அதில் சிலபேர் எந்நேரமும் இணைய அரட்டை மற்றும் இணைய விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் தங்களால்த் தான் அந்த புரஸக்ட் இயங்குகின்றது என்று பெருமை பேசிக் கொள்ளவும் பின்னிற்க மாட்டார்கள். இவ்வாறான வெறும் வாய்ச்சொல் வீரர்களால் உண்மையான உழைப்பாளிகளின் உழைப்பும் மேலிடத்திற்கு மறைக்கப்படவும் வாய்ப்புக்களுண்டு.
இதைவிடவும் புதிதாக வேலை தேடுபவர்கள், அல்லது வேலைமாற விரும்புவர்கள் நிரப்பிக் கொடுக்க வேண்டிய CVயில் பலதகவல்களைப் பொய்யாகக் கொடுத்தும் விடுவார்கள். எங்கெங்கொ ஊர் பெயர் தெரியாத கல்லூரிகளில் முக்கி முனகி டிப்ளோமா முடித்தவர்கள் பெரிய யுனிவேர்ஸ்சிட்டியில் கணணிப் பொறியியல் முடித்ததாகவும் அளந்து விடுவார்கள். அதைவிடவும் புதிதாக வந்த கணணி மொழிகளில் பலவற்றைப் படித்ததாகவும் பெரிய புழுகு மூட்டையை அவிட்டு விடுவார்கள். பொதுவாக இந்நத் துறையில் யார் என்ன படித்தார்கள் என்பதை விடவும் என்ன தெரிந்து வைத்திருக்கின்ரார்கள், அதில் எந்த அளவு அனுபவம் பெற்றிருக்கின்றார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை. எனவே சும்மா ஆரம்ப ‘பந்தாவாக’ இதுபோன்ற தகவல்களை கொஞ்சம் முன்னே பின்னே பொய் சொன்னால் சூடப் பரவாயில்லை என்கின்ற மனோபாவம் வளர்ந்துவிட்டது.
Dr. அப்துல் கலாம் சொன்னது போல எந்தத் துறையிலும் ஜெயிப்பதற்கு, நேர்மைதான் அடிப்படை. அது இல்வாதவர்கள் வெகுதூரம் செல்ல முடியாது. எனவே இத் துறையில் உள்ளவர்களும் வருங்காலத்தில் இதில் நுழைய விரும்புவரிடமும் நேர்மையான சிந்தனை வளரவேண்டும். கூடவே பொய் சொல்லி வேலையில் சேடர்வது மனதளவிலும், சட்ட ரீதியாகவும் கடுமையான குற்றம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வாக இருக்கும்….
Categories: எனது பார்வையில்
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
//சாஃப்டவேயார் //
இந்திய வாடை தருகிறது, மென்பொருள் என்று பாவிக்கலாம், கலைச்சொல் ஒவ்வாமை இருந்தால் ‘சொப்ட்வெயார்’ என்றாவது பாவிக்கலாம். 🙂
என்ன இருந்தாலும் நிலைத்திருக்க வேண்டுமெண்டால், ‘இந்த மனோபாவம்’ உதவாது…
உங்கட நிறுவனத்தில் எப்படி..?
//சொப்ட்வெயார் //
உண்மைதான்.. தமிழ்த் திரைப்படங்களை அதிகமாகப் பார்ப்பதன் விளைவு…
எங்க நிறுவனத்தில் ம்ம்… என்னைத் தவிர அனைவரும் சிறப்பாகத்தான் வேலை செய்கின்றார்கள்….
உட்புக டிகிரி இருக்க வேண்டும் என்பதை விட தெளிவாக அடிப்படையைப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.!!!
பிறகு.. ஒரேயடியாக PM, Programmers ஐ குறைசொல்வது அவ்வளவு சரி என்று புலப்படவில்லை. எல்லா நிறுவனங்களிலும் அவ்வாறு நடப்பதில்லை உதாரணம் நான் வேலை செய்யும் வேர்துசா!!!
உண்மைதான் மயூரேசன்.. இந்த மென்பொருட் துறையில் உட்புகுவதற்கு ஏதாவது ஒரு கணணி மொழியில் டிக்ரி மட்டும்
போதுமானதே .. ஆனாலும் இங்கே நிலைத்து நிற்பதற்கு மென்பொருள் உருவாக்கத்தின் தெளிவான அடிப்படையைப்
புரிந்து கொள்வது மிக அவசியம். அவற்றைப் புரிந்து கொள்ளாதவர்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க முடியாது.
மேலும் நான் எல்லா Programmers ஐ குறைகூறவில்லை.. பொதுவாக இந்த மனோபாவத்திற்
காணப்படுகின்றவர்களின் மனோபாவம் மாறவேண்டும் என்றே நான் குறிப்பிட்டுள்ளேன்.
சிறந்த கட்டுரை,கணணி துறையில் உள்ள பொதுவான பிரச்சனையை கூறியுள்ளீர்கள்!
Another point
ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தால் போதும் பிறகு திருமணம் பேசும்போது அவர் “ENGINEER” என்று கூறிப் பெண் தேடுவார்கள்….:D
வருகைக்கு நன்றி நிவேதன்..
சொவ்ட்வெயார் துறையில் உள்ள பிரச்சனைதான் இது… நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனிமேல் திருமணப் பொருத்தம் பார்க்கும் போது பல்கலைக்கழக பட்டப் படிப்புச் சான்றிதளையும் சேர்த்துப் பார்த்துத் தான் பார்க்கவேண்டும் போலிருக்கிறது…
உண்மை. உண்மை. மென்பொருள் துறையில் இந்தியாவில் மட்டுமன்றி அமெரிக்கர்களிடமும், ஐரோப்பியர்களிடமும் இவற்றை காண முடிகிறது. இந்தியர்களை தனியாக குறை கூற முடியாது
வருகைக்கு நன்றி Srini…
மென்பொருட் துறைக்குள் இந்தமாதிரியான எண்ணத்துடன் நுழைபவர்களைத்தான் நான் சாடியுள்னேன்.. மென்பொருட் துறையில் உட்புகுவதற்கு ஏதாவது ஒரு கணணி மொழியில் டிக்ரி மட்டும் போதுமானது என்ன நிலையைப் பயன்படுத்தி பலபேர் நுழைகின்றார்கள். அந்த நிலைமாறவேண்டும் என்றே விரும்புகின்றேன்…