அதிகாலை தொடக்கம் அந்தி
மாலை வரை
அலுப்பின்றிக் களைப்பின்றி
அண்ணாந்து
வானம் பார்த்து ,
ஆதவனைத் தொடர்ந்து அடி
பற்றிச் சுழலும்
சூரிய காந்திப் பூவே – நீ
எப்போது நிற்பாய்
உன் தலை சுற்றாமல்?
சுட்டெரரிக்கும் சூரியன்
சுழலாமலும்
பூமியது சுற்றாமலும்
என்று ஆதவன் எனக்காய்
நிற்கின்றானோ
அன்றுதான் நிற்கும்
என் அடி தொடரும்
இப்பயணம்
ஏய் சூரிய காந்தியே தாமரை
உனக்கு தமக்கையா? தங்கையா?
சூரியன் அவளின்
கணவனா? காதலனா?
ஏனெனில்
எனக்கு புரியவில்லை உந்தன்
நிலை
உனக்காயினும் புரிகின்றதா
உந்தன் நிலை?
நரம்பில்லாத நாக்கால் நீ
நாலு விதமாய் பேசினாலும்
எனக்கொன்றும் கேடில்லை
வாடும் எனக்குத்தான்
வலியின் கனம் தெரியும்
மாயம் செய்யும் அவனை
மறுநாள் காணும் வரை
அவன் ஒளி என்னில் பட்டு
என் துன்பமது நீங்கினாலும்
இரவென்னும் ராட்சனின்
இரும்புப் பிடியினுள்ளே
அவன் இறுகி மறுநாள் வரை
இயம்ப வொண்ணாத் துயரம்
பட்டும்
என்னைத் தரிசிக்க எழுந்தோடி
வருகின்றானே
அது ஒன்றே போதும் என்
வாழ்வு தன்னை அவனுக்காய்
அர்ப்பணிக்க,
எனக்காய் என் நாளும் கதிரவன்
தான் வருவது போல்
உனக்காய் யார் வருவார்?
உன்னையே நீ கேட்டுப்பார்
உந்தன் திலை என்ன வென்று
அப்போது தான் புரியும்
ஏகாந்த தனிமையது
எவ்வளவு கொடுமையென்று
அப்போது தான் புரியும்
அறிவற்ற மானிடனே….
– முருகு.
Categories: படித்தவை ரசித்தவை
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
கவிதை நன்றாக இருக்கிறது…
(பின்னூட்டம் போடவேணுமெண்ட படியால் போட்டனான், இன்னும் கவிதையை வாசிக்கேல்லை.. :))
அருமை!!!
@ Nimal கவிதையை வாசித்தபின் பின்னுட்டம் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. 🙂
@Divya: நண்பரே தான்… என்னுடைய பல்கலைகழக நண்பர்.
@சுபானு: நான் பின்னூட்டம் போட்டபிறகு கவிதையை வாசிச்சனான்… 🙂
அப்படியா நன்றி.. 🙂