தமிழ்மணத்தில் நுழையவிரும்பி நான் முயற்சித்த போது, ஆகக் குறைந்தது 3 பதிப்க்களாவது இடப்பட்டிருக்க வேண்டும் என்ற அறிவித்தலைப் பார்த்தேன். எனது இப் பதிப்பின் ஊடாக தமிழ்மணத்தில் நுழையலாம் எனத் தோணுகின்றது… எனக்கு அவ்வளவாக எழுதத் தெரியாது.. இருந்தாலும் எழுத ஆசைப்பட்டு தொடங்குகின்றேன். ;)) உங்களது ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றேன்…. ;))
அதிகாலை தொடக்கம் அந்தி மாலை வரை அலுப்பின்றிக் களைப்பின்றி அண்ணாந்து வானம் பார்த்து , ஆதவனைத் தொடர்ந்து அடி பற்றிச் சுழலும் சூரிய காந்திப் பூவே – நீ எப்போது நிற்பாய் உன் தலை சுற்றாமல்? சுட்டெரரிக்கும் சூரியன் சுழலாமலும் பூமியது சுற்றாமலும் என்று ஆதவன் எனக்காய் நிற்கின்றானோ அன்றுதான் நிற்கும் என் அடி தொடரும் இப்பயணம் ஏய் சூரிய காந்தியே தாமரை உனக்கு தமக்கையா? தங்கையா? சூரியன் அவளின் கணவனா? காதலனா? ஏனெனில் எனக்கு புரியவில்லை