இன்றைய உலகில் முதலில் தட்டுபவனுக்கே கதவு திறக்கும். முன்னாடி ஓடி வருபவனால்த்தான் முதலில் வெற்றியைத் தொட முடியும். நாலுகால் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகம் எவர் குறித்தும் அனுதாபப்பட்டு நின்று சிந்திப்பது கிடையாது. வாழ்க்கையில் சலிக்காமல் ஓடிக்கொண்டிருப்பவனே வெற்றியாளனாகின்றான். எவ்வளவு தோல்விகளிலும் ஏன் தொடர் தோல்விகளிலும் கூட மீண்டும் ஒரு முறை என முயற்சி செய்பவனைக்கண்டு தோல்வி கூட பயந்து ஓடிவிடும்.
நம்முடைய எண்ங்களின் அழுத்தம்தான் – அதன் வலிமைதான் வெற்றிக்கு நம்மை இழைத்துச் செல்கின்றது.
ஆனால் நமக்கு ஏற்படுவதெல்லாம் நம்மைப் பற்றிய ஐயம்தான் ( Self doubt). வாழ்வில் முன்னேற வேண்மடுமானால் முதலில் நாம் நம்மை நம்பவேண்டும்…
அளவுகடந்தும் எல்லைகடந்தும் நம்ப வேண்டும். இந்த நம்பிக்கைதான் நமக்குள் இருக்கும் உண்மையான ஆற்றலை பட்டை தீட்டி வெளிக்கொணர்கிறது… நம்மை நமக்கு அடையாளம் காட்டுகின்றது. இந்த நம்பிக்கைதான் நம் பயத்தை விரட்டுகின்றது. சோம்பலை விரட்டுகின்றது. இல்லாமையை விரட்டுகின்றது.
இன்றைய நிலைமையைவிட நாளைய நிலைமை நன்றாக இருக்கும் இருக்க வேண்டும் என்று நாம் நம்பினால், விரும்பினால், அந்த எண்ணம்தான் உள்ளுக்குளிருந்து மகத்தான சக்தியை உருவாக்கித் தருகின்றது…
Categories: ச்சீசி
தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…
சயந்தன் நீங்கள் கூறியது சரி
thats mean first in first out(FIFO)
என்னத்த சொன்னாலும் சொல்லுங்கோ… இலங்கையின் ‘கருத்து சுதந்திரத்திற்கு’ உட்பட்டு…
வருகைக்கு நன்றி.. 🙂
//இலங்கையின் ‘கருத்து சுதந்திரத்திற்கு’ உட்பட்டு…//
இலங்கையில் எங்கே கருத்து சுதந்திரம் இருக்கின்றது… 🙁