இன்றைய உலகில் முதலில் தட்டுபவனுக்கே கதவு திறக்கும். முன்னாடி ஓடி வருபவனால்த்தான் முதலில் வெற்றியைத் தொட முடியும். நாலுகால் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் உலகம் எவர் குறித்தும் அனுதாபப்பட்டு நின்று சிந்திப்பது கிடையாது. வாழ்க்கையில் சலிக்காமல் ஓடிக்கொண்டிருப்பவனே வெற்றியாளனாகின்றான். எவ்வளவு தோல்விகளிலும் ஏன் தொடர் தோல்விகளிலும் கூட மீண்டும் ஒரு முறை என முயற்சி செய்பவனைக்கண்டு தோல்வி கூட பயந்து ஓடிவிடும். நம்முடைய எண்ங்களின் அழுத்தம்தான் – அதன் வலிமைதான் வெற்றிக்கு நம்மை இழைத்துச் செல்கின்றது. ஆனால் நமக்கு