காதலரே காதலரே பூமி உங்கள் பூஞ்சோலை

ஒன்பது நங்கைகள் காதலால் சுற்றிச் சுழன்றும் ஓர் அழகான பருவமாது மட்டும் அவன் கதிர் பட்டு கர்ப்பம் தரித்து தன் முதல் கருவை மடிமீது தவழவிட்டாள். அந்த முதற்கரு தட்டித் தடக்கி தவழ்த்து ஓர் கலமாகி பிளவுற்று ஈராகி பின் பன்கலமாகி உருவம் கொண்டு வளர தந்தை சக்தியாகி தாய் படியளக்கும் சிவனாகி அருள் பாலித்தனர்.

ஆண்டுகள் பலகோடி தாண்டி முதற் கருவில் நெடிய கூர்ப்புக்கள் கடந்து ஈடன் தோட்டத்தில் ஏவாளாய் அவளும் ஆதாமாய் இவனும் கண்ட அந்த பொழுதில்… தான் ஆதவன் மேல் அன்று கொண்ட காதலால் பிறந்த குழந்தைகளின் காதலை கண்டு களிப்புற்று ஈடன் தோட்டத்தில் பூஞ்சோலை நடுவே இளம் காதலர்கள் களிப்புற கனி ஒன்றைக் கனிந்தாள் ஒன்பது நங்கைகளுடம் கூடப்பிறந்த அந்த காதல் பூமாதேவி.

அன்று ஏவாளாய் அவளும் ஆதாமாய் இவனும் காதல் என்ற வடமாய் சர்ப்பம் பின்ன பூமி என்னும் பூஞ்சோலையில் பலகோடி காதலர்களை கருவாக்கி விதைத்துச் சென்றனர்.

இன்று மீண்டும் காதல் பழக யுகங்கள் கடந்து கஸ்தூரியாய் மலர்ந்தன. பிரபஞ்சமென்னும் கொன்றை மரத்தடியில் ஆதவன் இவன் வரவுக்காய் ஓர் சூரியகாந்தியென தன் பிரியங்கமானவள் கண்கள் பனிக்க காத்திருப்பாள் என விரைந்து வரும் ஆதவன் கதிரில் மலர்ந்தவள் தலைமீது, பூமாதேவி மீண்டும் கொன்றைப்பூ சொரியும் அழகை இரசித்து, புன்னகைத்து, கண்களால் காதல் பழகி கொண்டான். மீண்டும் மீண்டும் காதலின் உசி உணர்ந்தான் ஆதவன். அவள் இவன் கண்ணில் கருவாகி இதயம் என்றும் கர்ப்பத்தில் சுமந்த அழகான காதல் குழந்தை மீண்டும் காதலுக்குப் பிறந்தது கொன்றை மரத்தடியில்.

இது காதலருக்கான பூமி. காதலர் பூமி. காதலரே காதலரே பூமி உங்கள் பூஞ்சோலை.. வானில் ஒளிரும் ஒவ்வொரு விண்மீனும் பூமி மீது தவழ்ந்த காதல்களே… காதலால் வாழ்வீர்.. காதலராய் வாழ்வீர்.. காதல் வாழ்க… காதலை காதலிப்போம்.

Categories: எனது பார்வையில், பாடசாலை நாட்கள்