என் சொத்துக்கள்

செல்லமாய் உனக்கு முத்தம் தருவதில் தொடங்கி …
மொத்தமாய் முத்தத்தை உன்னிடமிருந்து பெறுவதில் முடிய வேண்டிய என் பொழுதுகள்….
நான் துயில் எழும்போது ஒன்று😘
நீ கண் விழிக்கும் போதொன்று…😘
குளிக்க போகும் போதொன்று😘
குளித்து முடித்ததும் ஒன்று..😘
உன் ஆடை சரி செய்யும் போதொன்று..😘
உனக்கு உணவூட்டி விடும்போதும் ஒன்று..😘
உன்னை வேலைக்கு அனுப்பும் போது இறுக்கி அணைத்தொன்று…😘
வேலையின் இடையே.. தொலை பேசியிலுமொன்று….😘
வேலை முடித்து வந்ததும் ஒன்று…😘
செல்லச்சண்டைகளில் ஒன்று…😘
சிருங்காரச்சிணுங்கல்களில்
சில…😘😘😘
உனக்கு தந்த அத்தனையும் கடன்😊
மாலை முதல் காலை வரை திருப்பித்தருவது உன் தலையாய கடன்..😉😉😉
மொத்தத்தில் முத்தத்தில் அத்தனையும்
நான் தர வேண்டும்..
உன்னிடத்தில் பெற வேண்டும்…..இல்லை
😘😘😘😘😘😘😘😘😌😌😌😌😌😌😌😌😌😌
பெற்றிருக்கவேண்டிய சொத்துக்கள்…

Written by பிரியசகி

Categories: கவிதை, பாதித்தவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *