ஊஞ்சலாடும் காதல்

இதயத்தில் நூலெடுத்து கவிதையாய் திரித்து
இணைய மேகங்கள் தாலாட்ட
இதமாக என் காதலாட கட்டிவைத்தேன்
இந்த ஊஞ்சல்.. என் காதலியாட கட்டிவைத்தேன்
இந்த ஊஞ்சல்..

கட்டிவைத்த ஊஞ்சலில் என்
கவிதைகளுக்கெல்லாம் கண் தந்தவள்
அதன் பொருளுக்குள் கருவாய் மலர்ந்தாள்..
முடிவில் தன்காதலும் தந்தவள்- என்
பிரிய (அ)ங்க மானவள்..

இன்றோடு இரு தசாப்தம்..
ஈர் பத்தாண்டு கடந்தும் – என்
கவிதைகளுக்கு இன்றும் கண்ணாய் – என்
காதலுக்கு என்றும் கருவாய் – என்
கனவுக்கெல்லாம் மாறா காட்சியாய் – என்
ஊஞ்சலில் இதமாய் ஆடுகின்றாள் – என்
பிரிய (அ)ங்க மானவள்..
– ஊஞ்சலாடும் காதல்

Categories: கவிதை, பாடசாலை நாட்கள், பார்வை