ஊஞ்சல் தமிழ் வலைப்பூவின் இதழ்கள் இனிமேல் உங்கள் iPhone, iPad’களில் மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் தரையிறக்கி வாசிக்கத்தக்கதாக மாற்றம் பெற்றுள்ளது. உங்கள் iPhone’இன் அல்லது iPad’இல் உள்ள இணைய உலாவியில் http://blog.unchal.com என பதிந்து ஊஞ்சலை இசைத்து விடவும். முற்றிலும் iOS இற்கு ஏற்ற அலைபேசி பக்கங்களாக இலகுவாக வாகிக்கத் தக்கதாக தேவையற்ற நிரல்கள் இல்லாமல் இனிமேல் ஊஞ்சல் அசைந்தாடும்.
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னை தீய வினை பயன்கள் - இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.
இனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்
கவலையரச் செய்து - மதி
தன்னை மிக தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...