logo

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்..

May 13, 2011

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்.. இதே நாள் இதே நேரம்.. எத்தனை பேர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு தவித்துக் கொண்டிருப்பார்கள். புகழ் மிக்க மக்கள் சமுதாயம் ஒன்று மிகக் கோரமான யுத்த அசுரனிடம் சிக்கி தங்களின் எஞ்சியிருந்த உயிர்களுக்கா பரிதவித்துக் கொண்டிருந்த நேரம். கண்முன்னே உடன் பிறப்புக்களும் தன் குழந்தைகளும் உடல் சிதறிப் பலியாவதைப் பார்த்து கண்ணீராக இரத்தம் வடிந்த மக்கள் அதனைத் துடைக்க அவகாசம் இன்றி ஓடி ஒழிந்துகொண்டிருந்த காலம்..

இத்தனையும் தன் அண்டையில் நடக்கும் போது.. வாருங்கள் நாங்கள் தந்தியடிபோம்.. உண்ணாவிரதம் இருப்போம் என நாடகம் அரங்கேற்றுவோம் வாருங்கள் என்று தள்ளாத வயதில் குமரிக்கடற்கரையருகில் அதிகாலையில் போய் உற்காந்தவர் இன்று தமிழக மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட சேதி இந்த சாதாரண இலங்கைத் தமிழ் உணர்வாளன் மனதில் ஒரு திருப்தியையும் பழி வாங்கியாகி விட்டது என்ற ஒரு நிறைவையும் தரத்தான் செய்கின்றது. தமிழகத் தேர்தலில் திமுக ஏன் தோற்றது என்ற கருத்து ஆய்வுகளுக்கு அப்பால், திமுக தோற்று விட்டது என்ற ஒரு தோற்றமே மனதில் தெரிய விம்பமாக இன்று நிற்கின்றது. இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது இந்த ஒரு மன மகிழ்ச்சியை அடைவதற்கு. இந்த மகிழ்ச்சியை இலங்கைத் தமிழ் மக்களுக்கு தந்த தமிழக உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.

ஜெயலலிதா வெற்றிபெற வேண்டும் என்பது ஒரு வெளிப்படையான விருப்பமாக இல்லாவிட்டாலும் கருணாநிதி தோற்று விலக்கப்படவேண்டும் என்ற பேராவல் ஒன்று இலங்கைத் தமிழர்களிம் மேலோங்கி இருந்தது. மக்களின் மனங்களில் கருணாநிதி ஏற்படுத்தியிருந்த கசப்புணர்வே அதற்கு காரணம். “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை..” என்ற வள்ளுவன் மொழி பொய்க்குமான என்ன..

சில சுவாரஸ்யங்கள் – இன்று ட்விட்ர் திண்ணையில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்ய குறிப்புகள் இங்கே.

@talkout: தமிழக தேர்தல் முடிவுகளை பார்த்து கண்கள் பனித்தது, நெஞ்சம் இனித்தது..

@subankan: அது ஆத்தா எமக்கு நன்மை செய்யமாட்டார் என்பது தெரியும் ஆனால் தாத்தாபோல் கழுத்தறுக்கமாட்டார்.

@sajeek: ஈழத்தாயே தமிழீழத்தை வாங்கித்தா என இலங்கைக்காரன் எவனாவது ஓவரா உணர்ச்சிவசப்பட்டால் செருப்பால அடிப்பன் 🙂

@subanu85: அதிமுக வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஈழ மக்கள் பிரச்சனைகளில் திமுக செய்த துரோகத்தை நினைவுகூர வேண்டுகிறேன்.

@nkashokbharan: கலைஞர் தொ.கா.வில் வரான் வரான் பூச்சாண்டி ரெயில் வண்டியியே பாட்டுக்குக் கோமாளி நடனம் போய்க்கொண்டிருக்கிறது.

@subanu85: கருணாநிதிக்கு துரோகத்தின் பரிசு என்னவென்றுதெரிந்திருக்கும்!உங்கள் தோல்விக்காக வருத்தப்பட்டு தந்தி அடிக்கலாம் என்றிருக்கிறேன்! -Ashokbharan

@subanu85: யார் வென்றாலும் எமக்கென்ன மாற்றமா தரப்போகின்றார்கள்.. எல்லாம் ஓரே ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்தான். நிறம்தான் வித்தியாசம் #ஈழத்தமிழன்

@mayooran75: @subanu85 அது உண்மை ஆனாலும் கிழவன் ஒழியவேண்டும், ஆத்தாவின் குணம் தெரியும்தானே.

@nkashokbharan: துரோகிகளை விட எதிரிகள் பரவாயில்லை. ஏனென்றால் எதிரிகளை நம்ப முடியாது என்பது வெளிப்படையாகவே தெரியும்!

@mayooran75: கருணாநிதி தோல்வி அதிர்ச்சியில் தபால் இலாகா #இனிமேல் எவன் தந்தியடிப்பான்.

@kanapraba: ஈழத்தாய் இன் வெற்றி குறித்து யாராவது வீணாப்போன ஈழத்தமிழர் அமைப்பு வாழ்த்துச் செய்தி அனுப்பியதா? #போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்

@kolaaru: திமுக தோத்ததுக்கு என்ன காரணம் தெரியுமா, சச்சின் IPLல சதம் அடிச்சுட்டாரு #இப்போ இதுதான் பாஸ் டிரெண்டு

@sajeek: இன்றிரவு கொல்றாங்க கொல்றாங்க – உணர்ச்சி நாடகம் சன் டிவியிலா கலைஞர் டிவியிலா வரும்

@thamizhsasi: நாளைய செய்தி : கனிமொழி கைது

@subanu85: ஒரு பழிவாங்கிய திருப்த்தி. சாதாரண தமிழ் உணர்வாளனாக.. அவ்வளவுதான்..

@narain: ஈழ / தமிழக மக்கள் விஷயத்தில் டபுள் கேம் ஆடிய திருமாவிற்கு வைத்த ஆப்பு மகிழ்ச்சியினை தருகிறது. பத்தில் பூஜ்யம் #tnae11

@nkashokbharan: எனக்கு வை.கோ. வை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது. நல்ல அறிஞர், படித்தவர், பேச்சாளர், கறை படியாதவர் – இருந்தும் அரசியலில் தோல்விதான்!

@mayooran75: தமிழகத்தில் மைனாரிட்டியாக இருந்தால் என்ன திகாரில் நாம் தான் மெஜாரிட்டி கருணாநிதி

@TBCD: வடிவேலு…தெளிவா தான் சொன்னாரு…நாம தான் புரிஞ்சிக்கலை…..வரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா வராஆஆஆஆஆஆஆஆஆஆஆது :-)))) #திமுக

@icarusprakash: அம்மா : இனி அடுத்த அஞ்சு வருஷம் நாங்க கொள்ளையடிப்போம். இப்படி மாத்தி மாத்தி வெளயாடறது எங்க ரெண்டு பேருக்கும் ஒரு எண்டர்டெயின்மெண்ட்டு



தமிழக தேர்தல் முடிவுகள்.

Tamil Nadu Result Status

Status Known For 232 out of 234 Constituencies

Party Won Leading Total
Communist Party of India 0 5 5
Communist Party of India (Marxist) 0 10 10
Indian National Congress 1 6 7
All India Anna Dravida Munnetra Kazhagam 0 152 152
All India Forward Bloc 0 1 1
Dravida Munnetra Kazhagam 0 26 26
Pattali Makkal Katchi 0 3 3
Others 0 28 28

நன்றி : Election Commission of India

Categories: அரசியல், எனது பார்வையில்

Tags: அரசியல், உலக நடப்பு, தமிழகம், தேர்தல்
Logging In...

Profile cancel

Sign in with Twitter Sign in with Facebook
or

Not published

  • 3 Replies
  • 3 Comments
  • 0 Tweets
  • 0 Facebook
  • 0 Pingbacks
Last reply was July 9, 2015
  1. Rajesh
    View May 13, 2011

    //நிராகரிக்கப்பட்ட சேதி இந்த சாதாரண இலங்கைத் தமிழ் உணர்வாளன் மனதில் ஒரு திருப்தியையும் பழி வாங்கியாகி விட்டது //
    அதே நேரம் இப்போ ஆட்சிக்கு வந்திருப்பது ஓநாய் என்பது மறக்கவேண்டாம்.. இன்னும் அதிகம் துன்பம் படபோகின்றீர் ..
    இரண்டு வருடத்தில் கருணாநிதி அடுத்து ஆட்சிக்கு வரட்டும் என்று பதிவு போடத்தான் போகின்றீர்

  2. buruhani
    View May 13, 2011

    நண்பா அன்னைக்கு அம்மா இருந்தா கூட இதே நிலமை தான் தமிழருக்கு வந்து இருக்கும்
    இந்தயா மட்டும் அல்ல உலக நாடுகள் அனைத்தின் உதவியோடு தான் சிரிலங்கா அரசு புலிகளை வெற்றி கொண்டது ராஜ பக்ஸவுக்கு பட்டு கம்பலம் போட்டு வரவேற்ப்பு கொடுத்த கத்தாபிக்கு {லிபியா}அங்கே பிரச்சனை என்றவுடன் ஐ நா உதவிக்கு அனுப்பியது போல்
    ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை ?

  3. Devyn
    View July 9, 2015

    Good points all around. Truly apitrcpaeed.

VenpaVenpaAmma with Friends after 12th Exam - 1979புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா... பொத்தி வைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா...Father & DaughterIMG_8459IMG_7223IMG_7215IMG_7213IMG_7189IMG_7183IMG_7170

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்

தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னை தீய வினை பயன்கள் - இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.

இனி என்னை புதிய உயிராக்கி - எனக்கேதும்
கவலையரச் செய்து - மதி
தன்னை மிக தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...

தொடர்க

Recent Posts

  • நாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்
  • “வாய் பேசிடும் புல்லாங்குழல்” – பாடகி சுனந்தா
  • நான்தான்… ஆறாம் திணை!
  • மரபணுக்களை எம்மால் மாற்றியமைக்க முடிந்தால்…?. இது ஏழம் அறிவு
  • மாயாவியுடன் சில காலம்

Archives

  • October 2016 (1)
  • December 2011 (2)
  • November 2011 (1)
  • October 2011 (1)
  • August 2011 (1)
  • July 2011 (2)
  • June 2011 (1)
  • May 2011 (2)
  • April 2011 (2)
  • March 2011 (2)
  • February 2011 (1)
  • December 2010 (2)
  • November 2010 (3)
  • October 2010 (3)
  • September 2010 (3)
  • April 2010 (1)
  • February 2010 (3)
  • January 2010 (4)
  • December 2009 (1)
  • November 2009 (7)
  • October 2009 (3)
  • September 2009 (10)
  • August 2009 (10)
  • July 2009 (7)
  • June 2009 (9)
  • May 2009 (1)
  • April 2009 (8)
  • March 2009 (3)
  • February 2009 (1)
  • January 2009 (2)
  • December 2008 (1)
  • November 2008 (2)
  • October 2008 (6)
  • March 2008 (2)
  • February 2008 (2)
  • January 2008 (1)
  • December 2007 (2)
  • March 2007 (1)

Copyright ஊஞ்சல் 2018 | Powered by WordPress