logo

சூரிய கிரகணத்திற்கும் பூமியதிர்வுக்கும் என்ன சம்பந்தம்…?

July 21, 2009

நாளை சூரிய கிரகணமாம். அத்தோடு சுனாமி வேறு வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றனவாம். இவைதான் இன்றைய கூடான செய்திகள். 2004ம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தில் இருந்தே நாம் இன்னமும் முழுமையாக மீளாத இந்த சந்தர்பத்தில் இன்னும் ஒரு சுனாமியா!. அன்றைய சுனாமியின் தாக்கத்தினால் ஏற்பட்ட சேதாரத்தை பார்த்வர்களில் நானும் ஒருவன். 2004ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி யாழ் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பல காயம்பட்டவர்களின் அவலக்குரலினைக் கேட்டவன். 2004ம் ஆண்டு சுனாமியின் ஞாபகச்சின்னங்கள் இன்னமும் நம்மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். சுனாமியின் வேதனையும் வடுவும் அவர்களுக்குத்தான் எம்மைவிட அதிகமாகத் தெரியும். NASA உட்பட பல நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்தும் நமது அரசாங்கம்-அரச காலநிலை அவதானிப்பு நிலையம் அபாய அறிவிப்பை விடுக்கவில்லை. காரணம் இலங்கைக்கு சுனாமி வராதாம்-அதனால்தான் சுனாமி வரக்கூடுமோ நம்ப வேண்டியதாக இருக்கின்றது.

சரி சூரிய கிரகணத்திற்கும் பூமியதிர்வுக்கும் என்ன சம்பந்தம்…? எங்கோ நடக்கும் சூரிய கிரகணத்தினால் இந்த பூமியில் என்ன நடக்கப்போகின்றது. நமக்குத் தெரிந்து சிறிது நேரத்திற்கு இருள் சூழ்ந்து இருக்கும். அவ்வளவுதானே என்று நினைக்கின்றீர்களா.. இல்லவே இல்லை..

சாதாரணமாக அமாவாசைக் காலங்களில் மூளையின் சாதாரண செயற்பாட்டில் குறைபாடு உடையவர்களுக்கு சிறிது அசாத்திய சக்தி பெற்றது போல் அதாவது அவர்களது செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படும். அதுவும் சூரிய கிரகண நாட்களில் அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு சிறந்த வைத்தியக் கண்காணிப்பு அவசியம். அது ஏன் என்றால் அமாவாசைக் காலங்களில் எனது தலைப் பகுதிக்கான இரத்த ஓட்டம் மிக அதிகமாக இருக்கும். இந்த உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் விஞ்ஞான விளக்கத்தின் ஊடாக விளங்கமுடியும்.

பொதுவாக அமாவாசைக் காலங்களில் சூரியனும் சந்திரனும் பூமிக்கு ஒரே திசையில் வருவதனால் அவற்றினால் இப்புவியின் மீது சூரியனினாலும் சந்திரனாலும் ஏற்படும் ஈர்ப்பு இழுவை அதிகமாக இருக்கும். அதாவது இரண்டு பேர் நின்று கட்டியிழுத்தால் என்ன
நடக்கும் என்று யோசி்த்துப் பாருங்களேன்.

பொதுவாக அமாவாசைக் காலங்களிலேயே இந்த நிலையென்றால் அதுவும் சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது அந்த ஈர்ப்பு இழுவை பலமடங்கு அதிகமாக இருக்கும். அதாவது சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூமியினை ஒரு நேர்கோட்டில் இழுக்கும். அதனால் புவியின் மேற்பரப்பில் கடலில் (Tidal forces) கடலலையின் சக்தி இன்னும் அதிகமாக காணப்படும். இந்தக் கடலலையின் சக்தியால் கடலடித்தளத்தில் அவை அழுத்ததினை ஏற்படுத்தும். இவ்வாறான இரு விசைப்பிரயோகங்கள் புவியோடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தும். இந்த ஈர்ப்பு விசைகளினால் ஏற்படும் விளையுள் விசையானது இரண்டு புவியடுக்குகள் சந்திக்கும் புள்ளில் தாக்கும் போது புவியடுக்குகளில் குழப்பம் ஏற்பட்டு அவற்றில் எழுந்தமாறான அசைவு ஏற்படும். அந்த அசைவானது ஒரு தொடர்ச்சியான பூமியதிர்ச்சியை அந்த இரு புவியடுக்குகள் சந்திக்கும் கோட்டின் வழியே ஏற்படுத்தும் என்பது சூரியகிரகண பூமியதிர்ச்சி விதியாகும்.

இந்த விதியின் அடிப்படையில்த்தான் விஞ்ஞானிகளால் July 22 இல் இருந்து 30th 2009 வரையான 8 நாட்களில் புவியில் புவியதிர்வுடன் சுனாமியும் ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.

கூடுதலான புவியதிர்வு நிகழ்வுகள் ஜப்பானின் தெற்குப் பகுதியில் ஏற்படலாம். அதனால் தாய்வான் மற்றும் இந்தோனேசியாவினைக் கூடுதலாகப் பாதிக்கும் என எதிர்வுகூறுகின்றார்கள் விஞ்ஞானிகள்.

மேலுள்ள படத்தில் நீலநிறத்தில் காணப்படும் பாதையானது பூரண சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும் சந்திரனின் ஒழுக்கு ஆகும். அதாவது 11:30 AM இற்கும் 12:30 PM இடைப்பட்ட நேரத்தில் எங்கெங்கே சூரிய கிரகணம் முழுமையாக இருக்கும் என்பதனையே சிகப்பு நிறப்புள்ளிகள் தெளிவுபடுத்துகின்றன. அந்த இடங்களில் 7.0 ரிக்ரர் அளவில் புவியதிர்ச்சி ஏற்படலாம்.

எல்லாமே எதிர்வுகூறல்தானே என இலகுவில் புறக்கணிக்க முடியாத தகவல்கள் இவை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம். ஆனால் அப்படி சுனாமியேற்பட்டாலும் இலங்கைக்குப் பாதிப்பு மிகக் குறைந்த அளவிலேயே காணப்படும். ( சுனாமி வந்துச்சுண்டா.. அப்படியே சீனாவ கரைச்சுக்கொண்டு போட்டுதென்றால் எப்படியிருக்கும். ஏனா..?? )

தகவல் மூலம் : Japanese Quake and Tsunami Predicted July 22 2009

Categories: அறிவியல், எனக்குத் தெரிந்தவை, எனது பார்வையில், பார்வை

Tags: அறிவியல், இலங்கை

11 comments

  • ஊர்சுற்றி July 21, 2009 at 12:10 PM -

    என்னங்க நீங்க…
    யாரோ ஒருத்தர் எழுதின பக்கங்களை வைத்துக்கொண்டு இப்படி எழுதுவது எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.

    //பொதுவாக அமாவாசைக் காலங்களிலேயே இந்த நிலையென்றால் அதுவும் சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது அந்த ஈர்ப்பு இழுவை பலமடங்கு அதிகமாக இருக்கும். அதாவது சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூமியினை ஒரு நேர்கோட்டில் இழுக்கும். //

    இதெல்லாம் எந்த அறிவில் கோட்பாட்டிலும் சொல்லப்பட்டதாகத் தெரியவில்லை.

    அதுவும் நீங்கள் கொடுத்துள்ள சுட்டியிலேயே இது வெறும் 'கோட்பாடு' என்று கூறியுள்ளார் //Note 2: This is a theory and I have no background in earth science or seismology. In short, I have no valid qualification to back this prediction.//

    மேலும் அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படியே பார்த்தாலும் சூரியகிரகணத்திற்கு ஒருசில நாட்களுக்குப் பிறகுதான் நிலநடுக்கம் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    அப்படியானால் மொத்த தியரியுமே அடிவாங்கிவிடுகிறது.

    என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் சுத்த பேத்தல். மக்களை முட்டாளாக்க அறிவியலின் பெயரில் சில பேர் செய்யும் சிறுபிள்ளைத்தனம்.

  • சுபானு July 21, 2009 at 9:15 PM -

    உங்களது காத்திரமான கருத்துக்களை மிகவும் வரவேற்கின்றேன் ஊர்சுற்றி.
    நன்றிகள்

    இரண்டு சடப்பொருட்களுக்கு இடையே தொடுகையற்ற இழுப்பு அதாவது ஈர்ப்பு விசை ஒன்று எப்பொழுதும் காணப்படும் என்பது பௌதீகவியலின் அடிப்படை விதி. அவை அந்த இது

    பொருட்களை இணைக்கும் கோட்டின் வழியே அதாவது அப்பொருட்களின் திணிவுமையங்களை இணைக்கும் கோட்டின் வழியே தாக்குவதாகக் கருதமுடியும்.
    அந்த ஈர்ப்பு விசையானது அந்தச் சடப்பொருட்களின் திணிவிற்கு நேர்விகிதசமனாகவும் அவற்றின் திணிவு மைங்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் வர்க்கங்களுக்கு நேர்மாறுவிகித சமனாகவும் இருக்கும். அதைத்தான் நீயூட்டனின் ஈர்ப்புக் கொள்கை சொல்லுகின்றது.

    மேலதிக தகவல்களுக்கு : Newton's law of universal gravitation

    அதன் அடிப்படையில்த்தான், சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது அந்த ஈர்ப்பு இழுவை பலமடங்கு அதிகமாக இருக்கும். அதாவது சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூமியினை ஒரு நேர்கோட்டில் இழுக்கும் என்ற முடிவு பெறப்பட்டது. அது ஒரு வெளிப்படையுண்மை.

    //பொதுவாக அமாவாசைக் காலங்களிலேயே இந்த நிலையென்றால் அதுவும் சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் வரும்போது அந்த ஈர்ப்பு இழுவை பலமடங்கு அதிகமாக இருக்கும். அதாவது சூரியனும் சந்திரனும் சேர்ந்து பூமியினை ஒரு நேர்கோட்டில் இழுக்கும். //

  • சுபானு July 21, 2009 at 9:19 PM -

    இரண்டாவதாக
    //மேலும் அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படியே பார்த்தாலும் சூரியகிரகணத்திற்கு ஒருசில நாட்களுக்குப் பிறகுதான் நிலநடுக்கம் வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால் மொத்த தியரியுமே அடிவாங்கிவிடுகிறது.

    எந்த ஒரு நிகழ்வு நடந்ததும் அதற்கான விளைவுகளை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. நிகழ்வினான் ஏற்பட்டு மாற்றங்கள் நாம் கண்ணுாடாகப் பார்க்க முடியாத ஒன்று. புவியோடுகள் ஒன்றுடன் ஒன்று உராசிக்கொள்ளும் போதுதான் நிலநடுக்கம் ஏற்படும். சூரியகிரகணத்தினால் புவியோடுகள் ஒன்றுடன் ஒன்று உராசிக்கொள்ளாமல் வழுக்கியிருக்கலாம். சடுதியான உராய்தல் ஏற்படுவதற்கு சிலநாட்கள் தேவைப்படலாம் என்பதே என்கருத்தும் கூட. சிலநேரங்களில் ஏற்படாமவும் போகலாம். ஆனால் அதை வைத்துக்கொண்டு மொத்த தியரியுமே அடிவாங்கிவிடுகிறது என்று சொல்வது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

  • சுபானு July 21, 2009 at 9:31 PM -

    முன்றாவதாக
    //என்னங்க நீங்க…யாரோ ஒருத்தர் எழுதின பக்கங்களை வைத்துக் கொண்டு இப்படி எழுதுவது எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.

    🙂
    இந்த பூமியில் எல்லா விடயங்களும் அறிந்தவர்கள் எவரும் இல்லை. நமக்கு சின்ன விடயங்களாகப் படும் பலவிடயங்கள் மற்றவர்களால் பிரமிப்போடு பார்க்கப்படும். அதே போன்றுதான் இதுவும். நான் வெற்ற ஒரு தகவலினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு எழுதிய பதிவுதான் இது. தமிழில் ஒரு சின்ன விளக்கத்தையேனும் கொடுக்க முடிந்ததே என்பதே என் திருப்தி. மற்றபடி அவர் எழுதியதை அப்பட்டமாக கொப்பி பண்ணி எழுதவில்லை. அதிலிருக்கும் தகவல்களை நான் விளங்கிக் கொண்டதன் பிற்பாடுதான் அதனைத் தமிழ்மொழியில் மாற்றம் செய்தேன். இறுதியில் அவருடைய தளத்தின் தொடுப்பினுாடாக இந்த தகவல்களுக்குச் சொந்தக்காரர் அவர்தான் என்பதனையும் குறிப்பிட்டு உள்ளேன். எனவே இந்தப் பதிவில் பிழையேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுடைய கருத்ததை ஏற்றுக்கொள்ளாமைக்கு மன்னிக்கவும்.

    மற்றும்
    //என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் சுத்த பேத்தல். மக்களை முட்டாளாக்க அறிவியலின் பெயரில் சில பேர் செய்யும் சிறுபிள்ளைத்தனம்.

    இவை அறிவியல் ரீதியாக எடுக்கப்பட்ட கருதுகோள்கள். சிலசமயம் பிழைக்கவும் செய்யலாம் ஆனால் முற்றுமுழுதாக நிராகரிப்பதற்கு இல்லை.
    இந்தக் கருத்துக்களை சமய ரீதியாக யாராவது கூறியிருந்தான் நிட்ச்சமாக நானும் நீங்கள் கூறியதை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால் இது அவ்வாறு இல்லைதானே…! 🙂

  • asfar July 22, 2009 at 5:18 AM -

    it's an excellent work, waiting more and more with you..
    very happy to remind you some physics theories after some long. anyhow,I feel, better than this article, your answers are going to explain very clearly somethings..
    congradulate….

  • வடுவூர் குமார் July 22, 2009 at 6:05 AM -

    அந்த முதல் படம் சுனாமி அலையல்ல மத்திய கிழக்கு நாடுகளில் வரும் மணற்புயல்.

  • சுபானு July 22, 2009 at 7:27 AM -

    ஆகா..
    தவறான தகவலைத் தந்துவிட்டார்களோ..?
    Sumatra Island Tsunami Wave Photograph Hoax

  • ஊர்சுற்றி July 24, 2009 at 5:58 AM -

    நீங்க என்னதான் விளக்கம் கொடுத்தாலும் இதை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தயவு செய்து எந்த விஞ்ஞானிகள் இதைப் பற்றி விள்ளக்கம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிவிக்கவும்.

    நான் தேடிப்பார்த்தவரை, கிரகணம் ஒரு சாதாரண நிகழ்வு.

    இதில் நீங்கள் கூறியதுபோல் எதுவும் நிகழ்வதற்கு அறிவியல் பூர்வமான தியரியோ அல்லது ஆராய்ச்சித் தகவல்களோ வெளியாகவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தவும்.

  • மின்னுது மின்னல் July 24, 2009 at 9:13 AM -

    The photograph is certainly a compelling one. However, it does not show a tsunami wave nor was it taken in Sumatra. The description that comes with the image is pure nonsense. In fact, the photograph shows a massive dust storm that hit the town of Griffith, NSW Australia on November 13 2002.

    The photograph is featured as part of a Sydney Morning Herald news article that was re-posted on the Australian Bureau of Meteorology website in November 2002. The photograph includes the following caption:

    The residents of Griffith rushed to seal their houses at dusk yesterday as a fierce dust storm raced into the town with warning, propelled by winds of up to 90 kilkometres (sic) an hour. The dust cloud moved across the state and into Sydney today. Photo: Denis Couch

    The original photograph has a date stamp of "12.11.2002" (November 12, 2002). The prankster who launched this hoax apparently removed the date stamp because it would have immediately destroyed the illusion that the photograph was taken during the 2004 tsunami.

  • சுபானு July 24, 2009 at 9:17 AM -

    நான் மேலே கொடுத்திருப்பவை பௌதீகவியல் ரீதியான காரணங்கள். அவற்றை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

    The Moon-Earthquake-Theory using constellations of the planets for prediction of earthquakes.
    Because the big earthquake in Greece and Turkey (autumn 1999) took place after the total solar eclipse (= new moon constellation), the Sumatra Earthquake and Tsunami 2004 at full moon, and many more major earthquakes at the special full or new moon constellations. The russian scientists and others have observed that probability of major earthquakes is high at or 1..3 days after full or new moon when the line of gravitation crosses close to the tectonic plates boundaries.

    Moon-Earthquake-Theory : References and literature

  • சுபானு July 24, 2009 at 9:47 AM -

    நன்றி
    மின்னுது மின்னல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

#Repost @moneta.lk • • • • • • We are #Repost @moneta.lk
• • • • • •
We are honored to be able to improve your lifestyle. Thank you for being such an amazing customer. May the spirit of Christmas be with you all year round. 
Merry Christmas from your friends at Moneta.
You can't discover a beautiful path without gettin You can't discover a beautiful path without getting lost. #lka #travel #nature #lifestyle #travelingram #instagood
Keep walking, you will see the sunrise in the next Keep walking, you will see the sunrise in the next corner. This night can never defeat your Sunrise. #goprohero7 #mountains #roadtrip #sunrise
#Repost @moneta.lk • • • • • • Moneta, #Repost @moneta.lk
• • • • • •
Moneta, your best friend, will be always here to fulfill your urgent financial requirements instantly and helps to maintain a good and reputed self-esteem in your life.

Salary Advance Facility for Full time Employees. No need to go behind your HR anymore. Sign up today. 

https://app.moneta.lk/salary-advance

#Moneta #SalaryAdvance #LKA #Finance #Personal #BestFriend
The sky is the limit. You never have the same oppo The sky is the limit. You never have the same opportunity and the experience twice. So go for it now. #lifebeyondlimits #story #motivation #dreamer
#lk #srilanka #journey #jaffna
#Repost @readmelk • • • • • • Sri Lank #Repost @readmelk
• • • • • •
Sri Lanka

We’ve all encountered a financial emergency at some point in our lives. For many, this became a painful reality in the wake of Coronavirus. 

@moneta.lk – a lifestyle based financial service enabler, aims to solve this by harnessing data to understand individual trustworthiness; allowing middle-income consumers to live beyond their limits through personalised financial assistance.

Read more: https://bit.ly/2QeSPEQ

#Fintech #Financial #Inclusion #Emergency #Digital #Disruption #Moneta #SriLanka
கொட்டும் மழை..
துள்ளும் அலை..
தன்னந்தனிப் பாதை... 
எண்ணம்வழித் துணை..

#earlymorning
Introducing the 'Lifestyle App' to Sri Lankans - M Introducing the 'Lifestyle App' to Sri Lankans - Moneta 
@moneta.lk
The Morning started with the beauty of the nature. The Morning started with the beauty of the nature. #Colombo #lka #srilanka #nature #beautiful #beach
Preparing for release at @moneta.lk. #startup #co Preparing for release at @moneta.lk.

#startup #colombo #srilanka #lka #startuplife #moneta #lifebeyondlimits #technology #lifestyle
I strongly believe that the best way to alleviate I strongly believe that the best way to alleviate poverty by facilitating self-sufficiency. If you give a man a fish he is hungry again in an hour. If you teach him to catch a fish you do him a good turn - Anne Isabella.

At @moneta.lk we not only guide customers to make stable income, but also facilitate to access necessary tools to make that stable income without any hassles, though our technology and strategic partners. 
We always go extra miles to makesure our customers are getting absolutel benefit through our 3 pillars such as Customer Centric Innovation, Speed and Positive Social Impact. 
#srilanka #sustainableliving #startup #lifestyle #motivation #moneta #helping #business #live #FinTechHive #trending #technique #lka #mylife #story
#Elon Musk, is THE most admirable leader I follow. #Elon Musk, is THE most admirable leader I follow. Such an Adventure-seeking, unstoppable leader. I learn a lot from Elon. Today, Falcon 9 rocket is taking #NASA astronauts Robert Behnken and Douglas Hurley to ISS. Watch it live. Another historic moment for mankind to celebrate. I'm so excited.
@spacex @nasa #space #spacex #falcon @elonrmuskk
தொடர்க

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்

தேடிச் சோறு நிதந் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னை தீய வினை பயன்கள் – இன்னும்
மூளா அழிந்திடல் வேண்டும்.

இனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்
கவலையரச் செய்து – மதி
தன்னை மிக தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…

#Repost @moneta.lk • • • • • • We are #Repost @moneta.lk
• • • • • •
We are honored to be able to improve your lifestyle. Thank you for being such an amazing customer. May the spirit of Christmas be with you all year round. 
Merry Christmas from your friends at Moneta.
You can't discover a beautiful path without gettin You can't discover a beautiful path without getting lost. #lka #travel #nature #lifestyle #travelingram #instagood
Keep walking, you will see the sunrise in the next Keep walking, you will see the sunrise in the next corner. This night can never defeat your Sunrise. #goprohero7 #mountains #roadtrip #sunrise
#Repost @moneta.lk • • • • • • Moneta, #Repost @moneta.lk
• • • • • •
Moneta, your best friend, will be always here to fulfill your urgent financial requirements instantly and helps to maintain a good and reputed self-esteem in your life.

Salary Advance Facility for Full time Employees. No need to go behind your HR anymore. Sign up today. 

https://app.moneta.lk/salary-advance

#Moneta #SalaryAdvance #LKA #Finance #Personal #BestFriend
The sky is the limit. You never have the same oppo The sky is the limit. You never have the same opportunity and the experience twice. So go for it now. #lifebeyondlimits #story #motivation #dreamer
#lk #srilanka #journey #jaffna
#Repost @readmelk • • • • • • Sri Lank #Repost @readmelk
• • • • • •
Sri Lanka

We’ve all encountered a financial emergency at some point in our lives. For many, this became a painful reality in the wake of Coronavirus. 

@moneta.lk – a lifestyle based financial service enabler, aims to solve this by harnessing data to understand individual trustworthiness; allowing middle-income consumers to live beyond their limits through personalised financial assistance.

Read more: https://bit.ly/2QeSPEQ

#Fintech #Financial #Inclusion #Emergency #Digital #Disruption #Moneta #SriLanka
கொட்டும் மழை..
துள்ளும் அலை..
தன்னந்தனிப் பாதை... 
எண்ணம்வழித் துணை..

#earlymorning
Introducing the 'Lifestyle App' to Sri Lankans - M Introducing the 'Lifestyle App' to Sri Lankans - Moneta 
@moneta.lk
The Morning started with the beauty of the nature. The Morning started with the beauty of the nature. #Colombo #lka #srilanka #nature #beautiful #beach
Preparing for release at @moneta.lk. #startup #co Preparing for release at @moneta.lk.

#startup #colombo #srilanka #lka #startuplife #moneta #lifebeyondlimits #technology #lifestyle
I strongly believe that the best way to alleviate I strongly believe that the best way to alleviate poverty by facilitating self-sufficiency. If you give a man a fish he is hungry again in an hour. If you teach him to catch a fish you do him a good turn - Anne Isabella.

At @moneta.lk we not only guide customers to make stable income, but also facilitate to access necessary tools to make that stable income without any hassles, though our technology and strategic partners. 
We always go extra miles to makesure our customers are getting absolutel benefit through our 3 pillars such as Customer Centric Innovation, Speed and Positive Social Impact. 
#srilanka #sustainableliving #startup #lifestyle #motivation #moneta #helping #business #live #FinTechHive #trending #technique #lka #mylife #story
#Elon Musk, is THE most admirable leader I follow. #Elon Musk, is THE most admirable leader I follow. Such an Adventure-seeking, unstoppable leader. I learn a lot from Elon. Today, Falcon 9 rocket is taking #NASA astronauts Robert Behnken and Douglas Hurley to ISS. Watch it live. Another historic moment for mankind to celebrate. I'm so excited.
@spacex @nasa #space #spacex #falcon @elonrmuskk
தொடர்க

Archives

  • October 2016 (1)
  • December 2011 (2)
  • November 2011 (1)
  • October 2011 (1)
  • August 2011 (1)
  • July 2011 (2)
  • June 2011 (1)
  • May 2011 (2)
  • April 2011 (2)
  • March 2011 (2)
  • February 2011 (1)
  • December 2010 (2)
  • November 2010 (3)
  • October 2010 (3)
  • September 2010 (3)
  • April 2010 (1)
  • February 2010 (3)
  • January 2010 (4)
  • December 2009 (1)
  • November 2009 (7)
  • October 2009 (3)
  • September 2009 (10)
  • August 2009 (10)
  • July 2009 (7)
  • June 2009 (9)
  • May 2009 (1)
  • April 2009 (8)
  • March 2009 (3)
  • February 2009 (1)
  • January 2009 (2)
  • December 2008 (1)
  • November 2008 (2)
  • October 2008 (6)
  • March 2008 (2)
  • February 2008 (2)
  • January 2008 (1)
  • December 2007 (2)
  • March 2007 (1)

Copyright ஊஞ்சல் 2021 | Powered by WordPress